#1
“வாழ்க்கையில் உயர்வதற்கு முன் நீங்கள் சந்திக்கும் போராட்டம்,
நீங்கள் திரும்பிச் செல்ல விரும்பாத இடத்தை
உங்களுக்குக் காட்டிக் கொடுக்கும்.”
#2
“எப்பொழுதும் உங்கள் முகத்தை
சூரிய ஒளியை நோக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
நிழல்கள் உங்களுக்குப் பின்புறமாக விழும்.”
#4
“எதிர் கொள்வது,
கடந்து வர அதுவே ஒரே வழி.
எதிர் கொள்ளுங்கள்.”
#5
“சில நேரங்களில் நீங்கள் சரியான முடிவை எடுக்கிறீர்கள்,
சில நேரங்களில் எடுத்த முடிவை சரியானதாக மாற்றிக் கொள்கிறீர்கள்.”
#6
“ஆற்றல் ஊற்றெடுக்கும்
நம் கவனம் செல்லும் திசையில்.”
#8
“உழைப்புக்கென்று ஓர் அறம் உள்ளது.
ஓய்வுக்கென்று ஓர் அறம் உள்ளது.
இரண்டையும் கடைப் பிடியுங்கள்,
இரண்டில் எதையும் புறந்தள்ளாதீர்கள்.”
— Alan Cohen
அனைத்து படங்களும் மிக அழகாய் இருக்கிறது. பாம்பின் வாய் பக்கம் ஒளி தெரிகிறது. நாகரத்தினம் இருப்பது போல இருக்கிறது. அணில் படம் அருமை.
பதிலளிநீக்குபாம்பு ஒரு தடவை வந்த போது எடுத்தீர்களா? நிறைய தடவை வந்து இருக்கிறதா?
வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
வாய்ப் பக்கம் ஒளிருவது நாக்கு:). அதை நீட்டி நீட்டி உள் இழுக்கையில் எடுத்தது. படங்கள் 2 மற்றும் 4_ல் இருப்பது ஒரே பாம்பு. ஆறில் இருப்பது வேறு.
நீக்குகடந்த எட்டு வருடங்களில் பல முறை வந்துள்ளன. அவசரத்திற்கு மொபைலில் எடுத்துப் பகிராத படங்களும் உள்ளன. அனுபவங்களை ஒரு பதிவாக எழுதலாம். முயன்றிடுகிறேன்.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
எட்டிப்பார்த்து தொங்கி முயற்சித்து பார்க்கும் அணில் அழகு. ஆமாம், பழசை மறக்கக் கூடாது இலையோ?!!
பதிலளிநீக்குசூரிய ஒளி கண்ணைக் குத்தாதோ... குத்துமோ இல்லையோ, படத்திலிருக்கும் பாம்பு கொத்தாமல் இருந்தால் சரி!!
ஓணார் ரொம்ப யோசனையுடன்தான் இருக்கிறார். யாரை வெல்ல முடியாமல் தவிக்கிறாரோ!
முன்னேற்றத்திற்காகச் சொல்லப் பட்டது. கடந்து வந்த பாதையின் கசப்பை பேசுகிறது என்றும் கொள்ளலாம்.
நீக்குகண்ணாடிக் கதவுக்குப் பின்னாடி நின்று எடுத்த படங்கள் :).
இப்படி எழுந்து நின்று வரவேற்றால் பயமில்லாமல் எப்படி எதிர்கொள்வது பாம்பாரை!
பதிலளிநீக்குகீழே குதிப்பதா, இன்னும் சிறிது நேரம் இங்கேயே நிற்பதா... எது சரியான முடிவு என்று யோசிக்கிறது போலும் குட்டி அணில்.
ஊற்றெடுக்கும் ஆற்றலை சட்டென கீழே தள்ளி விட்டால் நம் ஆற்றல் பெருகும், பயமில்லாமல்!!
பதிலளிநீக்குநாட்கள் இலகுவாக இருக்கும் படம்தான் டாப். என்ன ஒரு போஸ்!
பழுத்த இலையா, வண்ணத்துப் பூச்சியா... பற்றிக் கொண்டிருப்பது எது?
பழுத்த இலையின் வண்ணத்தில் ஓர் வண்ணத்துப் பூச்சி!
நீக்குகருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் சிறப்பு வாசகங்களும் மிகவும் நன்று. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅசௌகரியமாக உணரக்கூடிய சிற்றுயிர்களது உணர்வுகளையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். #7 & #8 படங்கள் மனதைக் கவர்கிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி :).
பதிலளிநீக்கு