#1
ஒவ்வொரு கல்லும் தனக்குள் ஒரு கதையை வைத்திருக்கும் ஆச்சரியங்கள் கொண்ட ஸ்தலம் லெபக்ஷி வீரபத்திரர் கோயில்.
நாட்டிய மண்டபத்தின் முதல் சுற்றிலுள்ள 12 தூண்களில் பிரம்மா, சிவன், பார்வதி, சூரியர் , சந்திரர், நடராஜர், தத்தாத்ரேயா(பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் உள்ளடக்கிய கடவுள்), சண்டேஸ்வரர், ரித்தேஷ்வர், வராகர், நந்தி மற்றும் நாட்டியத் தாரகை ரம்பை ஆகியோரின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
#2
#3
#4
#5
#6
பிருங்கி முனிவருக்கு மூன்றாவது கால் எப்படி வந்ததென்பதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. பிருங்கி முனிவர் பார்வதியை ஒதுக்கி விட்டு சிவனை மட்டுமே வழிபட்டு வந்திருக்கிறார். இதனால் சினம் கொண்ட பார்வதி சிவனின் மடியில் அமர்ந்து கொள்ள அப்போதும் பிருங்கி முனிவர் நாக வடிவெடுத்து அவர்களைப் பிரிக்கிறார். பார்வதி மேலும் சினமுற்று பிருங்கி முனிவரின் உடலில் இருக்கும் இரத்தம் அனைத்தையும் எடுத்து விடுகிறார். வலுவிழந்த முனிவர் நிற்க முடியாமல் தள்ளாடவும், மனமிரங்கிய சிவன் அவருக்கு மூன்றாவது காலைக் கொடுக்கிறார். அத்துடன் அர்த்தநாரீஸ்வரராக பிருங்கினி முனிவருக்குக் காட்சி கொடுக்கிறார். பிருங்கினி முனிவரும் சிவனில் சரிபாதி பார்வதி என்பதை உணர்ந்து கொள்கிறார்.
#7
நாட்டிய மண்டபத்தின் மற்றுமோர் சிறப்புமிக்கச் சிற்பம் அன்னப்பூரணி (பார்வதி) தேவியுடையது. பார்வதியின் பக்தியை சோதிக்க விரும்பி யாசகனாக மாறுவேடத்தில் வருகிறார் சிவன்.
#8
அவருக்கு ஒரு சிறுமணியும் சிந்திடாமல் அன்னத்தை அளிக்கிறார் பார்வதி தன் ஆடை நெகிழ்வதைக் கூடக் கவனியாமல். சிவனும் அவரது பக்தியை மெச்சி அன்னப்பூரணியெனக் கொண்டாடுகிறார்.
மற்றும் சில சிற்பங்கள்...
#9
#10
நூறு தூண்களைக் கொண்ட நாட்டிய மண்டபம் தவிரவும் வெளிப்பிராகாரம், யாழி மண்டபம் எனக் கோயிலில் உள்ள மொத்தத் தூண்களைக் கணக்கில் எடுத்தால் கிட்டத்தட்ட 890 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளோடு மிளிருகின்றன.
#11
பார்வதியும் சிவனும் கல்யாண உடையில் காட்சி தரும் சிற்பங்களும் உள்ளன. கூட்ட மிகுதியால் எந்தச் சிற்பத்தையும் தனியாகப் படமாக்க சில மணித்துளிகளே கிடைத்தன.
#12
890 தூண்களில் எதைப் பார்ப்பது எதை விடுவது எனும் திகைப்பு இவரைப் போல, செல்லும் எவருக்கும் ஏற்படும்.
#13
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. எழு பறவையே.. - வீரபத்திரர் ஆலயம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 1)
2. சீதையின் பாதம்.. சிற்பக் கலைக்கூடம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 2)
3. பிரமாண்ட நந்தி.. உலகின் 2_வது பெரிய ஒற்றைக்கல் சிற்பம்.. - லெபக்ஷி, ஆந்திரா (3)
ஒவ்வொரு கல்லும் தனக்குள் ஒரு கதையை வைத்திருக்கும் ஆச்சரியங்கள் கொண்ட ஸ்தலம் லெபக்ஷி வீரபத்திரர் கோயில்.
நாட்டிய மண்டபத்தின் முதல் சுற்றிலுள்ள 12 தூண்களில் பிரம்மா, சிவன், பார்வதி, சூரியர் , சந்திரர், நடராஜர், தத்தாத்ரேயா(பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் உள்ளடக்கிய கடவுள்), சண்டேஸ்வரர், ரித்தேஷ்வர், வராகர், நந்தி மற்றும் நாட்டியத் தாரகை ரம்பை ஆகியோரின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
#2
பிரம்மா
வீரபத்திரர் சன்னதியின் நுழைவாயிலுக்கு முன் இடப் பக்கமுள்ள தூணில்.. |
வராகர்
#4
நாட்டியத் தாரகை ரம்பை
கருப்பு வெள்ளையில்
மற்றுமோர் கோணத்தில்..
மீதமுள்ள ஒவ்வொரு தூண்களிலும் புராணக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.#6
மூன்று கால்களுடன்
நாட்டிய குரு பிருங்கி முனிவர்
#7
அன்னப்பூரணி
#8
அவருக்கு ஒரு சிறுமணியும் சிந்திடாமல் அன்னத்தை அளிக்கிறார் பார்வதி தன் ஆடை நெகிழ்வதைக் கூடக் கவனியாமல். சிவனும் அவரது பக்தியை மெச்சி அன்னப்பூரணியெனக் கொண்டாடுகிறார்.
மற்றும் சில சிற்பங்கள்...
#9
#10
நூறு தூண்களைக் கொண்ட நாட்டிய மண்டபம் தவிரவும் வெளிப்பிராகாரம், யாழி மண்டபம் எனக் கோயிலில் உள்ள மொத்தத் தூண்களைக் கணக்கில் எடுத்தால் கிட்டத்தட்ட 890 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளோடு மிளிருகின்றன.
#11
திறந்த வெளிக் கல்யாண மண்டபத்தில்
பிரம்மாவும் விஷ்ணுவும்..
பிரம்மாவும் விஷ்ணுவும்..
பார்வதியும் சிவனும் கல்யாண உடையில் காட்சி தரும் சிற்பங்களும் உள்ளன. கூட்ட மிகுதியால் எந்தச் சிற்பத்தையும் தனியாகப் படமாக்க சில மணித்துளிகளே கிடைத்தன.
#12
890 தூண்களில் எதைப் பார்ப்பது எதை விடுவது எனும் திகைப்பு இவரைப் போல, செல்லும் எவருக்கும் ஏற்படும்.
#13
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. எழு பறவையே.. - வீரபத்திரர் ஆலயம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 1)
2. சீதையின் பாதம்.. சிற்பக் கலைக்கூடம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 2)
3. பிரமாண்ட நந்தி.. உலகின் 2_வது பெரிய ஒற்றைக்கல் சிற்பம்.. - லெபக்ஷி, ஆந்திரா (3)
***
அனைத்தும் :-
பதிலளிநீக்குஉலகமே அழிவு நிலைக்கு வருவதற்கும் முன், இது போல் அழகு பதிவுகளை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் சகோதரி...!
நன்றி தனபாலன்.
நீக்குஅத்தனையும் சிறப்பு. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.
பதிலளிநீக்குகூட்டமான இடங்களில் படம் எடுப்பது கடினம் தான். நானும் உணர்ந்திருக்கிறேன்.
ஆம். கிடைத்த இடைவெளிகளில் எடுத்த படங்கள்.
நீக்குநன்றி வெங்கட்.
அனைத்தையும் ரசித்தேன். சில சிற்பங்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சிற்பங்களை நினைவுபடுத்தின.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபடங்கள் அழகு...
பதிலளிநீக்குரசித்தேன் அக்கா.
நன்றி குமார்.
நீக்குஅழகான படங்கள்.
பதிலளிநீக்குசிற்பங்கள் கதை சொல்வது உண்மை.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅழகிய படங்கள். பிருங்கி முனிவரின் மூன்றாவது கால், தத்தாத்ரேயர் விவரங்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்கு