புதன், 4 டிசம்பர், 2019

பூக்களங்கள்; குரு யது நந்தனா; சுவர் சித்திரங்கள் - தூறல்: 37

ன்பது மற்றும் பத்தாவது முறையாக வல்லமை மின்னிதழின் படக் கவிதைப் போட்டிக்காக ஃப்ளிக்கரிலிருந்து தேர்வான எனது படங்கள்:

 “இந்த உலகைப் பாதுகாப்பான ஒன்றாகக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது நம் தலையாய கடமை. அப்போதுதான் அதை இன்னும் சிறப்பானதாக்கிட அவர்களால் இயலும்.

2019 குழந்தைகள் தினத்தன்று ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்த படம்:

வல்லமை மின்னதழில், 
போட்டி அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=94196
போட்டி முடிவு இங்கே: https://www.vallamai.com/?p=94288

**
ஒருபோதும் தலை வணங்காதீர்கள். எப்போதும் நிமிர்ந்து இருங்கள். உலகை நேராக அதன் கண்களுக்குள் பாருங்கள்
_ ஹெலன் கெல்லர்


வல்லமை மின்னதழில், 
போட்டி அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=92668
போட்டி முடிவு இங்கே: https://www.vallamai.com/?p=92668

வல்லமை ஆசிரியர் குழுவிற்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் என் நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்!

ந்த வருடம், ஓணம் பண்டிகை அன்று எனது நெருங்கிய தோழி சுனந்தாவின் வீட்டில் சத்யா விருந்து. வீட்டு முகப்பிலும் பூஜை அறையின் முன்பும் போடப்பட்டிருந்த அழகிய பூக்களங்கள் உங்கள் பார்வைக்கு:

தோழி, அவரது தங்கை மற்றும் மகள் ஆகியோரின் கை வண்ணத்தில் உருவான பூக்களத்தின் மத்தியில் கதக்களி முகம்..


நிலவிளக்கு


மற்றுமொரு கோணத்தில்..

வீட்டு முகப்பில்..


வரவேற்பறையில் புதிதாக இடம் பெற்றிருந்த அழகிய புடைப்போவியம் (ம்யூரல் ஆர்ட்) :


குரு யது நந்தனா
[குருவாயூர் ம்யூரல் ஆர்ட் பள்ளியைச் சேர்ந்த
ஓவியர் ஹரிசங்கர் கைவண்ணத்தில்..]

நான் அதைப் படம் எடுத்துக் கொண்டதும், அதன் விவரங்களை அன்றைய தினமே  அனுப்பி வைத்திருந்தார். அதன் தமிழாக்கம்:

கிருஷ்ணரின் அழகையும் அவருக்கும் கோபியருக்கும் இடையேயான அன்பையும் சொல்லும் சமஸ்கிரத பாசுரமான கீதா கோவிந்தத்தின் கடைசிப் பாடல் ‘குரு யது நந்தனா’. ராதைவின் பரவச மனநிலையைச் சித்தரிக்கிறது. 12_ஆம் நூற்றாண்டில் ஜெயதேவா இயற்றிய அஷ்டபதியின் கடைசிப் பாடல் அழகிய சுதிலயத்துடன் முடிவுறுகிறது. இப்பாடலில் ராதை மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட பெண்மணி. அவளது முறையீடுகள், பொறாமை, சலிப்பு, கிருஷ்ணர் மேலான தவிப்பு எல்லாமே முடிந்து போகிறது.  இரவை இனிதாகக் கிருஷ்ணரோடு பகிர்ந்து கொண்ட ராதை, புலர்ந்த அழகிய காலையில், தன் அலங்காரத்தைச் சரி செய்ய கிருஷ்ணரை வேண்டிக் கொள்ள அவரும் உதவுகிறார். 'குரு யது நந்தன சந்தன ஷிஷிரதரேண கரேண பயோதரே.' ('Kuru Yadu Nandana Chandana Shishira Tarena Karena Payodhare'). தலை சிறந்த காவியமாகக் கருதப்படும் கீதா கோவிந்தத்தை இப்பாடலுடன் நிறைவு செய்கிறார் ஜெயதேவா.

ங்கள் குடியிருப்பில் ஒரு தோழியின் இல்லத்தில் சென்ற வருடம் எடுத்த பூக்களம் ஒன்றும் உங்கள் பார்வைக்கு:





சுவர்ச் சித்திரங்கள்:

 ரசிக்க வைத்தக் கலைப் படைப்புகள்

‘தினசரி வாழ்வில் படியும் தூசியை 
ஆன்மாவிலிருந்து கழுவிச் சுத்தம் செய்கிறது, 
கலை.’ 
_ Pablo Picasso


‘ஓவியம் ஒரு நிசப்தமான கவிதை, 
கவிதை ஒரு பேசும் ஓவியம்.’
_Plutarch


டத்துளி:

தங்கை வீட்டின் இந்த வருடக் கொலுவில் புது வரவாக,
பஞ்சமுகி ஆஞ்சநேயர்
***

14 கருத்துகள்:

  1. வல்லமை இதழில் நீங்கள் எடுத்த புகைப்படம் பத்தாவது முறையாக....

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அழகிய படங்கள்.  பூக்களங்கள் படங்கள் ரசிக்க வைத்தன. மலர்களில் அப்படி உருவம் கொண்டு வந்திருப்பது சிறப்பு.   அதுபற்றிய விவரங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. அந்த அஷ்டபதி பாடல் கேட்பதற்கு இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்க ஆவல் பிறந்திருக்கிறது. பாலமுரளி குரலில் கிடைத்தால் சந்தோஷம்!   பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. சிந்து பைரவி ராகத்தில் சஞ்சய் சுப்பிரமணியம் பாடி அந்தப் பாடல் கிடைத்திருக்கிறது.  கேட்டுப்பார்க்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன்.  'நிஜகா தசா யது நந்தனே' என்கிற பாடல்.   பாலமுரளி பாடியே கேட்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. கருத்துகள் அனைத்திற்கும் நன்றி ஸ்ரீராம். நானும் பாடலைக் கேட்டுப் பார்க்கிறேன்.

      நீக்கு
  5. அனைத்து படங்களும் அழகு.
    வல்லமை இதழில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தோழி வீட்டு பூக்கோலம் அழகு.
    தங்க்கை வீட்டு பஞ்சமுக அனுமன் அழகு.
    பேசும் ஓவியம் அழகு.

    பதிலளிநீக்கு
  6. கலாரசனையின் அத்தனை அம்சங்களையும் ஒருங்கே காட்டியுள்ளீர்கள்.. மனமார்ந்த பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. வல்லமை மின்னிதழுக்காக உங்களின் புகைப்படங்கள் தேர்வாகியிருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
    பூக்களங்களும் நிலவிள‌க்கும் அழகு!
    சுவர் சித்திரங்களும் பஞ்சமுகி ஆஞ்சனேயரும் மிக அழகு!
    ' குரு யது நந்தனா' ஓவியம் அபார அழகு!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin