ஞாயிறு, 8 டிசம்பர், 2019

காற்றும் திசையும்

#1
“வாழ்க்கை எல்லா நேரங்களிலும் 
அழகானதாக இருப்பதில்லை, 
ஆனால் அது ஒரு அழகிய சவாரி.”  
- Gary Allan


#2
“இப்போது நீங்கள் யார் என்பது முன்னர் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதுவே. நாளை நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பது இப்போது நீங்கள் செயல்படுவதைப் பொறுத்ததே.”
_ Buddha



#3
“தமது பழைய வரலாறு, மரபு, கலாச்சாரம் 
இவற்றைப் பற்றிய அறிவு இல்லாத மனிதர்கள் 
வேரில்லாத மரத்தைப் போன்றவர்கள்.”
_ Marcus Garvey



#4
“கடலுக்கடியில் வீழ்ந்த கப்பலைப் போல, 
சொல்லப்படாத கதை 
உங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு கனமானது.” 
_  Deb Caletti


#5
“உங்கள் நம்பிக்கையில் 
நீங்கள் உறுதியாக நிற்கவில்லையெனில், 
உங்களால் நிற்கவே முடியாது போகும்."
_Isaiah 7:9

#6
"வாழ்க்கை ஒரு கடற்பயணம். 
எந்தக் காற்றை வேண்டுமானாலும் பயன்படுத்தி 
எந்தத் திசையிலும் செல்லலாம்."
_ Robert Brault


**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin