ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வாழ்க்கைச் சக்கரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (6)

#1
சில வாரங்களுக்கு முன் ‘சக்கரங்களைக் கொண்ட எதுவும்’ என டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் அறிவித்திருந்த தலைப்புக்குத் தேர்வான  5 படங்களில் ஒன்றாக...

#2
வாழ்க்கை ஒரு கடினமான சவாரி..இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா கொல்கத்தாவில் இன்னமும் பயன்பாட்டில் இருப்பதும், மனிதர்களை மனிதர்கள் இழுத்துச் செல்லும் அவலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வராமல் தொடர்வதும் வருத்தத்திற்குரியது. வாழ்க்கை இவர்களுக்குக் கடினமான சவாரியாகவும் சவாலாகவும் இருந்து வருகிறது. இதற்கொரு தீர்வு ஏற்படட்டுமாக!


நன்றி டெகன் ஹெரால்ட்! 

*
நாளை 19 ஆகஸ்ட், உலகப் புகைப்பட தினம். புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

**
தொடர்புடைய முந்தைய பதிவு:
பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2) 

22 கருத்துகள்:

 1. உலக புகைப்பட தினத்துக்கும் டெகான் ஹெரால்டில் இடம்பெற்ற உங்கள் படத்துக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. காலாவதி ஆனதால்
  காட்சிப்பொருளானதோ...
  சாய்ந்துகிடக்கும்
  வண்டி நிமிர்ந்தால்தான்
  அவர் வாழ்க்கையும் நிமிரும்
  பயணிகள் வராததால்
  பாரம் இடம் மாறி இருக்கிறது
  கைகளிலிருந்து மனதுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான வரிகள்!

   எ.பி வியாழன் பதிவுகளில் வரும் கவிதைகளைத் தொடருகிறேன். கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள்.

   நீக்கு
 3. உங்கள் படம் டெகான் ஹெரால்டில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  உலக புகைப்பட தினத்திற்கு வாழ்த்துக்கள்.
  ஸ்ரீராம் கவிதை அருமை.
  பயணிகள் வர்வைல்லை என்றால் பாரம் மனதில் தான்.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் தத்ரூபமாக ஒரு ஓவியம்போல இந்தப்புகைப்படத்தை எடுத்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி! மனம் நிறைந்த பாராட்டுக்கள்!! எப்போது, எப்படி இதை எடுத்தீர்கள்? சிறந்த புகைப்படக் கலைஞரான உங்களுக்கு இந்த உலக புகைப்பட தினத்தில் மேன்மேலும் புகழடைய‌ என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி மனோம்மா.

   மூன்று வருடங்களுக்கு முன் கொல்கத்தா சென்றிருந்த போது காளிகாட் கோயில் சாலையில் கண்ட காட்சி இது.

   நீக்கு
 5. இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா கொல்கத்தாவில் இன்னமும் பயன்பாட்டில் இருப்பதும், மனிதர்களை மனிதர்கள் இழுத்துச் செல்லும் அவலம் இன்னும் இந்தியாவில் தொடர்கிறது. இது பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கையா உங்க படத்திற்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சிசை திருப்தியை தருகிறது.

  பதிலளிநீக்கு
 6. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்விலும் ஒரு மாற்றுத்தொழில் மூலம் நல்லதொரு தீர்வு ஏற்படட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அரசாங்கம் முனைந்து செயல்பட்டால் மாற்றத்தைக் கொண்டு வரலாம், கை ரிக்‌ஷாவுக்குப் பதில் சைக்கிள் ரிக்‌ஷா வழங்கலாம். தீர்வு ஏற்பட வேண்டும்.

   வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 7. அழகான படம். டெக்கன் ஹெரால்ட்-ல் வெளியீடு - வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அஹா ! பிரம்மாதம் ! வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி !!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin