திங்கள், 2 ஜூலை, 2018

சயன புத்தர் - களனி விகாரை (II) - ஸ்ரீலங்கா (7)

யன நிலையில் இருக்கும் பிரமாண்டமான புத்தர் சிலைக்காகப் புகழ் பெற்றது களனி புத்த விகாரை.

#1

கோட்டை காலத்தில் வளமாக இருந்த கோவிலின் பெரும்பாலான நிலம் போர்ச்சுக்கீசியர்களால் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் டச்சுக் காரார்கள் ஆட்சியின் போது புதிய நிலங்கள் கோவிலிருக்கு வழங்கப்பட்டன. மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கா ஆதரவில் மீண்டும் கோவில் எழுப்பப் பட்டது.

#2

இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் ஹெலனா விஜயவர்த்தனா கோவிலை அழகாகப் புதுப்பித்திருக்கிறார்.

#3

சித்திரங்கள் நிறைந்த கூடங்களைத் தாண்டி உள்ளே சென்றதும் நுழைவாயிலைப் பார்த்து அமைந்த உயரமான தோரண வளைவுக்குள் அருள்பாலித்திருக்கிறார் தியான புத்தர். இமய மலை போன்ற பின்னணியும், சூழ்ந்திருக்கும் அமைதியும் மனதைக் கவருகிறது.

#4


கோவிலின் உட்புறச் சுவர்களில் புத்தர் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், இலங்கையில் புத்த மதம் வளர்ந்த வரலாறு மற்றும் ஜடகா கதையின் காட்சிகளை, இலங்கையைச் சேர்ந்த ஓவியர் சோலியாஸ் மென்டிஸ் (Solias Mendis) பிரமாண்டமாகவும் அழகுறவும் தீட்டியிருக்கிறார்.

#5

#6

#7
பிரார்த்தனைக் கூடத்தின் மேல் காணலாம்
மேலும் சில சுவரோவியங்களை..
#8
சயன நிலை புத்தர்

சிலையின் காலடி அருகே இருக்கும் இந்தப் பீடத்தில் பிறந்த குழந்தைகளைக் கொண்டு வந்து சிறிது நேரம் படுக்க வைத்து எடுக்கிறார்கள். நாங்களும் தம்பி குழந்தைகளை அதில் அமர வைத்தோம்.

#9

கோவில் வளாகத்தின் உள்ளே இரண்டு மூலைகளில் கோவிலைப் பார்த்தபடி எழுந்தருளியிருக்கும் 18 அடி உயர, புத்த ஞானம் பெற்ற போதிசத்வா மற்றும் அவலோகிதேஸ்வரா ஆகியோரின் சிலைகளும் குறிப்பிடத் தக்கவை.

#10
அவலோகிதேஸ்வரா

போதி சத்வா
#11

#12

கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக உள்ளது. புத்தருக்கு தீபம் ஏற்ற தனிக்கூடம் அமைத்துள்ளார்கள். தரையிலோ தூண்களிலோ எங்கும் எண்ணெய்ப் பிசுக்கு இருக்கவில்லை. பக்தர்கள் பொறுப்போடு கவனமாக தீபம் ஏற்றுகிறார்கள்.

#13

#14

புத்த நாட்காட்டியின் தொடக்கமாக ஜனவரியில் வருகிற Duruthu Perahera (ஊர்வலம்) மிகக் கோலகலாமாக நடைபெற்று வருகிறது களனி புத்தர் விகாரையில். ஆயிரக் கணக்கான புத்த பிக்குகள், மற்றும் பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

கிமு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 1815 வரை இலங்கையை ஆண்ட 186 மன்னர்களிடையே ஒப்பற்றவர்களாகக் கருத்தப்பட்டர்களில் ஒருவரான தொட்டகெம்முனுவின் அன்னை விகரமகாதேவி, களனியைத் தலைநகராகக் கொண்டிருந்த மன்னர் திசாவின் மகளாவார்.

#13
லக்ஷ்மணன் 
விபீஷணருக்குப் பட்டாபிஷேகம்
செய்யும் காட்சி
ளனிக்கான இன்னொரு முக்கியத்துவம், இராமாயணம். இராவணனின் மரணத்துக்குப் பின் லக்ஷ்மணனால் விபீஷணன் முடிசூட்டப்பட்டப் பட்டாபிஷேகக் காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்களையும் சிற்பத்தையும் (படம் 13) கோவிலின் வெளிப்புறத்தில் பார்க்கலாம். வால்மீகியின் இராமயணத்தில் களனி நதி குறிப்பிடப் பட்டிருக்கிறது. விபீஷணனின் அரண்மனை களனி ஆற்றங்கரையில் அமைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

விநாயகர் உட்பட மேலும் பல சிற்பங்கள் கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் உள்ளன. நேரமின்மையால் நிதானமாகப் படமெடுக்க இயலவில்லை.

#16
மீண்டும் வருக..!

***

வரலாற்றுத் தகவல்கள்: இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.

மேலும் ஓரிரு பதிவுகளுடன் இத்தொடர் நிறைவுறும்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஸ்ரீலங்கா - 1
ஸ்ரீலங்கா - 2
ஸ்ரீலங்கா - 3
ஸ்ரீலங்கா - 4
ஸ்ரீலங்கா - 5
ஸ்ரீலங்கா - 6

17 கருத்துகள்:

 1. குழந்தைகள் படம் உட்பட அனைத்தும் அற்புதம்...

  பதிலளிநீக்கு
 2. புத்தரின் பல்வேறு தோற்றப் படம் மிக அழகு.
  படங்கள் எல்லாம் அழகு.
  மருமகள், மருமகன் சூப்பர். வாழ்க வளமுடன் குழந்தைகள்.

  பதிலளிநீக்கு
 3. மூன்றாவது படம் : சினிமா செட்டிங்சில் பார்ப்பது போல இருக்கிறது கோவிலைப் பார்த்தால்!

  சயன புத்தர் பிரம்மாண்டமாய் இருக்கிறார்.

  படங்களுடன் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலங்கை கோவில்கள் எல்லாம் செட்டிங் போலவே தோன்றுகிறதே உங்களுக்கு:).

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. அழகான படங்கள்.சுவாரஸ்யமான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 5. விதம் விதமான புத்தர்கள். சயன புத்தர் மனதில் சயனதித்துவிட்டார். தமிழகத்தில் சயன புத்தர் சிலை அரிது.

  பதிலளிநீக்கு
 6. விதம் விதமான புத்தர்களும் அமரர்களும் அழகு.

  பதிலளிநீக்கு
 7. படங்களும் தகவல்களும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் ராமலக்ஷ்மி,
  மிக அழகான புகைப்படங்கள்.
  இவ்வாறான பண்டைய விகாரைகளிலுள்ள சுவரோவியங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்கை வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டவை. தற்போதும் அழியாமல் மெருகு குலையாமல் இருக்கின்றன. உங்கள் புகைப்படங்கள் மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன சகோதரி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin