Sunday, June 10, 2018

கொழும்பு வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (ஸ்ரீலங்கா 4)

ட்டுப்பட்டித்தெரு ஒல்லாந்தது தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு இடச்சு தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு சீர்திருத்த சபை என்றெல்லாமும் அறியப்படுகிற வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இலங்கையின் கொழும்பு மாநகரில் உள்ளது.
ஆட்டுப்பட்டித்தெரு என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வந்தது. இப்பகுதியில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதால் அப்படியொரு பெயர் உருவானது. ஆனால் தேவாலயம் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. ஹாலந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் குடியேற்ற காலத்தைய கட்டிடங்களில் மிக முக்கியமான ஒன்றாகிய இந்தத் தேவாலயத்தின் பெயர்க் காரணம் சுவாரஸ்யமானது.
அந்த இடத்தில் கூட்டமாக உலவிய நரிகளை ஐரோப்பியர்கள் ஓநாய்கள் எனத் தவறாகப் புரிந்து கொண்டதன் காரணமாக அந்தப் பகுதி வூல்ஃப்வெண்டால் - Wolvendaal (Wolf’s Dale or Wolf's Valley) என அறியப்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப் பழமை வாய்ந்த ப்ரொடஸ்டண்ட் பிரிவினரின் தேவாலயம் என்பதோடு இன்றைக்கும் இயக்கத்தில் இருந்து வரும் ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது.

#2

#3

தினெட்டாம் நூற்றாண்டில், 1736_ல் அப்போதைய இலங்கை கவர்னர் குஸ்தாஃ (Gustaaf Willem van Imhoff), டச்சு கிழக்கிந்திய கம்பெனியிடம் கொழும்பு கோட்டைக்குள் இருந்த தேவாலயத்தை இடித்து விட்டு புதிய ஆலயத்தை அதே இடத்தில் கட்ட அனுமதிக்கக் கோரினார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. 1743_ல் கவர்னராகப் பொறுப்பேற்ற ஜூலியஸ் வேலண்டைன் இந்தத் தடையை நீக்கக் கோரி, அதில் வெற்றி பெற்றதுடன், புதிய தேவாலயத்தை நகரின் சுவர்களுக்கு அப்பால் இருந்த சதுப்பு நிலத்தில் எழுப்பத் தீர்மானித்தார்.

ஒரு குன்றின் மேல் நகரில் இருந்தும் துறைமுகத்திலிருந்தும் பார்த்தால் தெரிகிற மாதிரி, நகரின் நுழைவுப் பகுதிக்கு மிக அருகாமையில் இருக்குமாறு தேர்வானது தேவாலயத்தைக் கட்டுவதற்கான இடம். டச்சு ஆக்ரமிப்பின் ஆரம்பக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறு தேவாலயமும் அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது.

1949_ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட வூல்ஃப்வெண்டால் தேவாலத்தைக் கட்டி முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 6 மார்ச் 1757_ல் பொதுமக்கள் வழிபாட்டுக்காக இரு கவர்னர்களின் முன்னிலையில் தலைமை பாதிரியார் மாத்தியாஸ் என்பவரால் தேவாலயம் சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

சுமார் ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய தேவாலயம் இது.

#4

#5

#6

#7

#8கிரேக்க மற்றும் ரோமன் கட்டிடக் கலை நுட்பங்களைக் கொண்ட டோரிக் பாணியில் கட்டபட்ட தேவாலயம். சுமார் ஐந்தடி அடர்த்தி கொண்ட சுவர்களைக் கொண்டது என்பது ஆச்சரியம்.

#9


கடினமான இரும்பு உலோகக் கலவையால் ஆன பாறைக் கற்களையும் சுண்ணாம்பு பூச்சும் கொண்டு  கிரேக்க க்ராஸ் (Greek cross) எனப்படும் சம அளவு கொண்ட கால்களால் கட்டப்பட்டது. நடுவே இருக்கும் உயர்ந்த கூரையின் குமிழ் மாடம் செங்கற்களாலும் பாங்கோர் கூரை ஓடுகளாலும் எழுப்பப்பட்டுள்ளது. முகப்புக் கூரையில் பதிக்கப்பட்டிருக்கும் திமிரும் சிங்கம் தலையில் கிரீடத்துடனும் ஒரு கையில் வாளுடனும் மற்றொரு கையில் ஏழு அம்புகளோடும் காட்சி அளிக்கிறது. ஏழு அம்புகள்  டச்சு குடியரசாக மாறிய ஏழு மாகாணங்களைக் குறிப்பதாக அமைக்கப்பட்டு இருந்திருக்கிறது. 1856-ல் மின்னலால் இந்த சிங்கம் பெரும் பாதிப்புக்குள்ளாக கூரையை மாற்றி இரும்பினால் மூடி விட்டிருக்கிறார்கள்.

இணையத்தில் கிடைத்த ஓவியம்:

வூல்ஃப்வெண்டால் தேவாலயத்தில் முதன் முறையாக தமிழில் ஜெபங்கள் 8 ஜனவரி 1927_ல் தொடங்கியிருக்கிறது. இன்றளவிலும் அது தொடர்ந்து வருவது குறிப்பிடத் தக்கது. அங்கிருந்த கல்வெட்டுகளில் தூத்துக்குடி ஊரைப் பற்றிய குறிப்பு காணப்பட்டது.

#10

#11

இத் தொடரின் முதல் பாகத்தில் இந்த ஆலயம் குறித்த அம்மாவின் நினைவுகளைக் கீழ்வருமாறு பகிர்ந்திருந்தேன்://ள்ளிக்கு எதிரிலேயே தேவாலயம். அம்மா அங்கு வாழ்ந்த காலத்திலும்  கலவரங்கள் அடிக்கடி நிகழ்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாப்புக் கருதி இந்தத் தேவாலயத்தில்தான் அடைத்து விடுவார்களாம். ரொட்டி, பழங்கள் கொடுப்பார்களாம். பெற்றோர் வந்தபின்னரே பாதுகாப்பாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புவார்களாம். அதுபோல பிரதமர் பண்டாரநாயக் இறந்தபோது பெரும் கலவரம் வெடிக்க தாத்தாவின் வாகனம் தேவாலயத்திலிருந்து குழந்தைகளை அவரவர் வீடுகளில் கொண்டு விடப் பயன்படுத்தப்பட்ட சம்பவத்தை அம்மா நினைவு கூர்ந்தார்கள்.//

பாதுகாப்புக்காக மாணவியர் தேவாலயத்தில் இருக்க வேண்டி வந்த நாட்களில், இந்த உப்பரிகை ஒவ்வொருவராக நின்று பாடல், பேச்சு என மற்றவரை மகிழ்விக்கும் மேடையாகப் பயன்பட்டதைத் தெரிவித்தார்கள்.
#12

அம்மா ஒவ்வொரு இடத்திலும் நின்று பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனார்கள்.
#13

#14
இந்தப் பயணம் எங்களுக்கும் மறக்க முடியாத நினைவாக மனதில் நிற்கும் என்றும்..

ந்நாளில் இந்த தேவாலயத்தின் முன் எடுக்கப்பட்டப் படம்.
#15
அம்மா, பெரியம்மாவோடு தோழியர் மற்றும் ஆசிரியர்

தேவாலயத்தின் முன்.. அதே படிக்கட்டில்..
#16
தோழியுடன் பெரியம்மா..
***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஸ்ரீலங்கா  - 1
ஸ்ரீலங்கா  - 2
ஸ்ரீலங்கா - 3

13 comments:

 1. அருமையான புகைப்படங்கள் சகோதரி. நீங்கள் புகைப்படங்களுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் நிறம், அப் புராதன காலத்துக்கு எம்மையும் கூட்டிச் செல்கிறது. மிக அழகு.

  ReplyDelete
 2. 1000 பேர் அமரக்கூடியது என்றால் எவ்வளவு பெரிது! முதல் பாராவில் தேவாவயம் என்றே வந்திருக்கியது.

  பழைய புகைப்படங்களை சாட்சியாக வைத்து இன்றைய நிலையில் அந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பது சுவாரயம்.

  இளவரசர் செல்லில் அந்தக் கதவின் பூட்டை படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் போல!

  ReplyDelete
  Replies
  1. உடனடியாகத் திருத்தி விட்டேன்:). நன்றி.

   உண்மைதான். குறிப்பாகப் படம் 13-16. பக்கச் சுவர் மட்டுமின்றி அந்தக் கதவுகளில் கூட மாற்றம் இல்லை.

   கதவின் பூட்டைத் தன் சிறிய கேமராவில் படமாக்குகிறார் இளவரசர்:).

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. படங்களை ரசிக்க முடிந்தது. நினைவுகளில் ஏதோ சோகம் ததும்பியது.

  ReplyDelete
  Replies
  1. சரியாகவே சொல்லியுள்ளீர்கள். அம்மாவுக்குப் பழைய நினைவுகளில் சில பாரமாகவும் மனதில்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. பழமையினை ரசிக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. கவனித்தவரை இலங்கையில் புராதான இடங்கள் பல உள்ளன.. அதை அவர்கள் சிறப்பாக பராமரித்து இருக்கிறார்கள் என்று புரிகிறது.

  போர்களில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் கூட இன்னும் பல அப்படியே உள்ளன, பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin