Thursday, June 28, 2018

போதிமரம்.. - களனி விகாரை (I) - ஸ்ரீலங்கா (6)

லங்கையின் கொழும்பு மாநகரிலிருந்து சுமார் 7 மைல் தொலைவில் இருக்கும் கம்பகா மாவட்டத்தில் இருக்கிறது களனி ராஜ மகா விஹாரை அல்லது களனி (Kelaniya) விகாரை. இந்நகரை  ஊடறத்து களனி ஆறு பாய்கின்றது.

#1

இந்தக் கோவில் கெளதம புத்தர்  ஞானம் அடைந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு,  மூன்றாவதும் கடைசி முறையும் ஆக, இலங்கை களனிக்கு விஜயம் செய்த போது பரிசுத்தமாக்கப்பட்டத் தலம் என நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி புத்தர் மகா சமாதியடைந்த அரசமரத்தினுடைய கிளை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இங்கே நடப்பட்டிருக்கிறது.

#2


இப்படியாக இத்தலத்தின் சரித்திரம் கிமு காலத்துக்குப் பயணித்துப் பழமை வாய்ந்த கோவிலெனும் சிறப்பையும் பெறுகிறது.
#3

கோவில் ஒரு சிறு குன்றின் மேல் உள்ளது.
#4
குன்றின் கீழிருந்த பூக்கடைகள்..
புத்தருக்குப் படைத்திடத் தாமரை மொக்குகள்..

நடப்பட்ட போதி மரம் விரிந்து பரந்து நிற்க அதைச் சுற்றி ஊர்வலமாக நடந்து புத்தரை வணங்கும் சடங்குகளைப் பார்க்க முடிந்தது.
#5

#6

#7
புத்த பிக்குகள்

ஆங்காங்கே பக்தர்கள் ஆழ்ந்த தியானத்தில், பிரார்த்தனையில் மூழ்கி அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
#8
மணிக் கோபுரத்தின் முன்னே..
#9

நமது ஊர் கோவில்களில் ராகு தேவரின் சிலைகள் வரிசையாகப் பிரதிஷ்டை செய்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். அங்கே வளாகத்தைச் சுற்றி, கட்டிடங்களைச் சுற்றி வேலி போல நாகம் செதுக்கப்பட்ட கற்கள் வரிசையாக அமைந்திருக்கின்றன.

#10

#11
 போதிசத்வா

இங்கும் பக்தர்கள் ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

#12
அழகிய இந்த உருவச்சிலையை
மேலும் இரு கோணங்களில் எடுத்த படங்களை
அடுத்த பாகத்தில் பகிருகிறேன்.
லங்கையில் வரலாற்றைச் சொல்லும், பல்வேறு புத்த பிக்குகளால் நாட்குறிப்பு வடிவத்தில் எழுதப்பட்ட மகா வம்சம் நூலில் குறிப்பு புத்தர் அமர்ந்து போதித்த மாணிக்கம் பதித்த அரியணையானது களனியில் இருக்கும் அசல் ஸ்தூபியில் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறது.
#13

அதன் பின்னணியில் அமைந்த கதையானது எதற்காக புத்தர் மூன்றாவது முறை இலங்கைக்கு வந்திருந்தார் என்பதற்கும் விடையாகிறது. இரு நாகா தலைவர்களுக்கிடையே நடந்த சண்டையைத் தீர்த்து வைப்பதற்காக வந்திருக்கிறார். சுள்ளோதரா (சிறு வயிறுடையவன்), மகோதரா (பெருத்த வயிறையுடைவன்) இருவருக்குமிடையே இப்போது கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் மாணிக்கம் பதித்த அரியணைக்காக ஏற்பட்ட சண்டையின் பயனின்மையை புத்தர் புரிய வைக்க இருவரும் திருந்தி புத்த மதத்திற்கு மாறியதுடன் அவருக்கே அந்த அரியணையை அர்ப்பணித்திருக்கின்றனர். இந்த அரியணையே இப்போதிருக்கும் ஸ்தூபிக்குள் போற்றப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

#14


#15

#16

#17
     “அடுத்து சயன புத்தர் இருக்கும் கோவிலுக்குள் போகலாமா?”


#18
“கொஞ்சம் காத்திருங்க.. 
மேலும் படங்களுடன் பாகம் இரண்டு 
கூடிய விரைவில்..”
**
வரலாற்றுத் தகவல்கள்: இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஸ்ரீலங்கா - 1
ஸ்ரீலங்கா - 2
ஸ்ரீலங்கா - 3
ஸ்ரீலங்கா - 4
ஸ்ரீலங்கா - 5

***

19 comments:

 1. பிரமிப்பு. புத்தர் முக்தி அடைந்த போதி மரத்தின் கிளையா? அடேங்கப்பா... இன்னுமா இருக்கிறது அதன் விருட்சங்கள்? போதி மரம் என்பது அரசமரம்தானே?

  ReplyDelete
  Replies
  1. ஆம், அரச மரம்தான். பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

   Delete
 2. படங்கள் வெகு அழகு. இளவரசர் புன்னகையால் ஈர்க்கிறார்.

  ReplyDelete
 3. அமர்ந்த நிலையில் தியான கோல புத்தரைக் கண்டோம். அருமை.

  ReplyDelete
 4. அனைத்து படங்களும் அருமை...

  ReplyDelete
 5. போதி சத்வா..வெகு அழகு

  ReplyDelete
 6. அருமையான படங்கள் விளக்கங்களுடன்.

  ReplyDelete
 7. படங்களும் செய்திகளும் மிக அருமை.
  மருமகன் அழகு.
  போதி மரத்திற்கு வயதான பெண்கள் பூஜை செய்வதை என் இலங்கை பதிவில் நானும் பகிர்ந்து இருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதிம்மா. அதன் இணைப்பை இங்கே தரலாமே.

   Delete
 8. மிக அழகான புகைப்படங்கள் சகோதரி.
  சேமித்து வைக்கப்பட வேண்டியன.
  ஒரு புகைப்படத்துக்கான குறிப்பாக மணிக்கூண்டு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது மட்டும் 'மணிக் கோபுரம்' என்று வர வேண்டும். அடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி.

   திருத்தம் செய்து விட்டேன்.

   நன்றி ரிஷான்:).

   Delete
 9. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  https://www.tamilus.com

  – தமிழ்US

  ReplyDelete
 10. இந்த மாணிக்கம் பதித்த அரியணை எனக்குப் புதிய செய்தி !! நாங்கள் அங்கே போன நாள் எதோ விசேஷநாள். பௌர்ணமி என்று நினைவு. கோவிலில் நல்ல கூட்டம் !

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin