வெள்ளி, 10 அக்டோபர், 2014

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசுகள் 2014 - திருப்பூரில் விழா

'இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்புக்கு மு.ஜீவானந்தம் இலக்கியப்பரிசு அறிவிப்பாகியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிரல், பங்கேற்பாளர்கள், நடுவர்கள், பரிசு பெறும் படைப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய விழா அழைப்பிதழையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

# திருப்பூரில்..


# நிகழ்ச்சி நிரல்

கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை ஆகிய பிரிவுகளில் பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள்..

# கவிதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு#
# சிறுகதை

 # கட்டுரை

திரு. மு. ஜீவானந்தம் அவர்களுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றி!

பரிசு பெறும் சக பெண் எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
*

 இலைகள் பழுக்காத உலகம்
பக்கங்கள்:96 விலை:80
பதிப்பகம்: அகநாழிகை
**

கிடைக்குமிடங்கள் குறித்த விரிவான விவரங்கள் இங்கே.

***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

மு. ஜீவானந்தம் இலக்கியப் பரிசு..  “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பிற்கு..

*‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இலக்கியப் போட்டி 2014_ல் பரிசு

20 கருத்துகள்:

 1. பரிசு பெறப்போகும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பரிசு பெறப்போகும் அனைவருக்குமே என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  குறிப்பாக எங்கள் ஊராம் திருச்சியின் பிரபல கவிதாயினியும், எனக்கு நேரில் நன்கு அறிமுகம் ஆகியுள்ளவரும், தான் எழுதிய ‘பறையொலி’க்காகத் தங்களுடன் பரிசுபெற இருப்பவருமான திருமதி. தனலட்சுமி பாஸ்கரன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகளைத் தாங்களே, அவர்களை நேரில் திருப்பூர் பரிசளிப்பு விழாவினில் சந்திக்கும்போது தெரிவித்து விடுங்கோ.. Please.

  நானும் பிறகு அவர்களுடன் தொலைபேசியில் இது சம்பந்தமாகப் பேசிவிடுகிறேன்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 2. திருப்பூர் செல்கிறீர்களா?

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. @வை.கோபாலகிருஷ்ணன்,

  நன்றி vgk sir. விழாவுக்கு செல்ல இயலவில்லை. தனலக்ஷ்மி அவர்களுக்கு என் வாழ்த்துகளை ஏற்கனவே தெரிவித்திருந்தேன், அவர் தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட போது.

  பதிலளிநீக்கு
 4. @ஸ்ரீராம்.,

  இல்லை ஸ்ரீராம். இதே நாளில்தான் திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் + நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இலக்கிய விருதுக்கான விழாவும் நடை பெறுகிறது. இரண்டு விழாக்களிலுமே கலந்து கொள்ள முடியவில்லை. புரிதலுடன் சான்றிதழ்களை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் விழா அமைப்பாளர்கள். நன்றி:).

  பதிலளிநீக்கு
 5. @துளசி கோபால்,

  நன்றி. விரைவில் வாழ்த்துகளை நேரிலும் பெற்றுக் கொள்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 6. போட்டிக்கு வெளியீடுகளை நீங்கள் அனுப்பினீர்களா இல்லை பதிப்பாளர்களா ? ஒரு தகவலுக்காகக் கேட்கிறேன். பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. பரிசு பெறுவதற்கு
  இனிய வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. ’இலைகள் பழுக்காத உலக’த்திற்காக மு.ஜீவானந்தம் இலக்கிய பரிசு வென்றமைக்கு மனம் கனிந்த வாழ்த்துகள். மேலும் மேலும் வெற்றிகள் குவியுமாக!
  -ஏகாந்தன்

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  மேலும் மேலும் வெற்றிகள் தேடி வரட்டும் ராமலக்ஷ்மி எனும் வெற்றி திருமகளை நோக்கி.

  பதிலளிநீக்கு
 10. @G.M Balasubramaniam,

  அறிவிப்புகளைப் பார்த்து நாம்தான் அனுப்ப வேண்டும். நன்றி GMB sir.

  பதிலளிநீக்கு
 11. மனம் நிறைந்த பாராட்டுகள் & வாழ்த்துகள் ராமெலெக்ஷ்மி. உங்கள் படைப்புகளின் வீர்யமும் தொடர் முயற்சியும் வெற்றியைப் பலிதமாக்கின. :)

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin