வெள்ளி, 10 மே, 2013

என் சின்னஞ்சிறு பெண்ணே..


நிற்க.. நடக்க.. 
சிறகு விரித்துப் பறக்க.. மட்டுமல்ல..
உன்னை நீ பாதுகாத்துக் கொள்ளவும் 
கற்றிட வேண்டும் கண்ணே!
உறுதுணையாய் இருந்து
உருவாக்குவேன் உனை,
உலகை எதிர்கொள்ள..
என் சின்னஞ்சிறு பெண்ணே!***

அனைத்து அன்னையருக்கும் தாயுமானவரான தந்தையருக்கும் 
அன்னையர் தின வாழ்த்துகள்!
***

33 கருத்துகள்:

 1. /// உறுதுணையாய் இருந்து
  உருவாக்குவேன் உனை...///

  அன்னையர் தின வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. நல்ல அறிவுரை சின்னஞ்சிறு பெண்ணுக்கு.
  தன்னை காத்துக் கொள்ளும் காலக்கட்டத்தில் இருக்கிறாளே!
  எல்லா அன்னையருக்கும், தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. //உன்னை நீ பாதுகாத்துக் கொள்ளவும்
  கற்றிட வேண்டும் கண்ணே!//

  இப்பொழுது இருக்கும் நிலையில் மிகவும் அவசியமான ஒனறு..

  அன்னையர் தின வாழ்த்துகள் மேடம்!!!

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் என் இனிய
  அன்னையர் தின வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகடும் !.வாழ்த்துக்கள் சிறப்பான பகிர்வு இதற்க்கும் .

  பதிலளிநீக்கு
 5. இக்காலப் பெண்குழந்தைக்குத் தேவையான அறிவுரை. உறுதுணையாய் தாயிருக்க பயமேன் எக்குழந்தைக்கும்! படத்தோடு கவிதையை ரசித்தேன். நன்றி ராமலக்ஷ்மி.

  மனத்தில் தாய்மை சுமக்கும் யாவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. சின்னம் சிறு பெண்ணிலிருந்து முதிர் கன்னிகள் வரை காக்க அன்னையின் அருள் வேண்டும்.
  அனைவருக்கும் அன்னையர் தினவாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. அன்னையர் தினமா இன்று..

  வாழ்த்துகள்.

  பாதுகாப்பாய் இருப்பதை விட, பாதுகாப்பாக இருப்பதற்கு கற்றுக் கொடுப்பது சிறந்தது.

  பதிலளிநீக்கு
 8. கவிதையும் புகைப்படமும் மிக அருமை!

  பதிலளிநீக்கு
 9. @தருமி,

  Candid shot. அன்று கப்பன் பூங்காவில் அதிகம் கூட்டமிருக்கவில்லை. ஒரு ஓரமாக இவர்கள் இருவரும் அரைமணிக்கும் மேலாக அமர்ந்திருந்தார்கள். குழந்தை தாயைச் சுற்றிச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள். அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்ததில் காட்சி சிக்கியது:)! நன்றி sir.

  பதிலளிநீக்கு
 10. @ஸ்ரீராம்.,

  சரியாகச் சொன்னீர்கள்.

  வாழ்த்துகளுக்கு நன்றி. அன்னையர் தினம் நாளை. மே இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை!

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 12. படமும் வரிகளும் அருமை..

  எல்லா அன்னையர்க்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. ஆமாம்.
  அன்னயர் தின நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. நன்று(றி). உங்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 15. படம் அருமைய்யா இருக்கு. என்னதான் உன்னிப்பாக் கவனிச்சுகிட்டே இருந்தாலும், இந்த மாதிரி கரெக்டா கிடைக்கிறது சிரமம்.

  பொண்ணு துள்ளி விளையாடிகிட்டிருந்தாலும், அம்மா முகத்தில் ஏதோ ஒரு தேக்கம்..

  பதிலளிநீக்கு
 16. @ஹுஸைனம்மா,

  நன்றி ஹுஸைனம்மா.

  நீங்கள் சொல்வது உண்மைதான். குழந்தையின் உற்சாகம் அவரை சிறிது கூடத் தொற்றிக் கொள்ளவில்லை. விந்தையாகவே இருந்தது எனக்கும். என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தனவோ மனதில்!?

  பதிலளிநீக்கு
 17. ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  இந்த கவிதையும் அதற்கு ஓவியமும். இன்றைய வலைச்சரத்தில்வாழ்த்துக்கள்.

  http://tamilamudam.blogspot.com/2013/05/blog-post_10.html

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin