புதன், 8 மே, 2013

ஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி


ஆன்மாவின் இசை சிரிப்பு என்பார்கள்.  தன்னிகரற்ற அந்த இசையை, முகம் மலர்ந்த புன்னகையை, மனம் நிறைந்த சிரிப்பைக் காட்சிப்படுத்திடக் கேட்கிறது மே PiT போட்டி.

தலைப்பு: புன்னகை

புன்னகை, சந்தோஷம் , மகிழ்ச்சி, ஆனந்தம்,குதூகலம்,கலகலப்பு.. இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.. என்கிறார் நடுவர் கருவாயன் என்ற சுரேஷ்பாபு, அறிவிப்புப் பதிவில். “இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலைகளில் நாம் சந்திக்கின்ற அனைவருமே ஒரு வித இறுக்கமான முகங்களையே பார்க்கின்றோம்..முகம் உர்ர் என இருந்தால் யாருக்காவது பிடிக்குமா என்ன...” எனக் கேட்கிறார்.

உண்மைதானே? எந்த ஒரு மன இறுக்கத்தையும் மாற்றிடும் சக்தியாக,  மனக் கவலைகளைப் போக்கிடும் மருந்தாக புன்னகையும் சிரிப்பும் இருப்பதை மறுக்க முடியுமா?

#1


#2

#3
குழலூதும் பாலக் கிருஷ்ணர் போல அபிநயம் பிடிக்கிறார் :)!
#4

#5

#6

#7

***

‘கூடுமானவரை புன்னகை இயல்பானதாக இருக்கட்டும்’ என நடுவர் சொல்லியிருப்பதையும் நினைவில் கொள்க.

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-5-2013

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

இதுவரை வந்த படங்களைக் காண இங்கே செல்லலாம். உங்கள் கருத்துகளை வழங்கி ஊக்கம் தரலாம்.
*** 

25 கருத்துகள்:

 1. இயல்பான புன்னகையின் சந்தோஷம்
  எங்களுக்குள்ளும் பூக்கச் செய்த
  அருமையான புகைப்படங்கள்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. புன்னகைப் பூக்கள் மலர்ந்தன.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அருமை. 20 வயது வரைதான் கவலையின்றி மனம் விட்டுச் சிரிக்க முடிகிறது என்று தோன்றுகிறது. குழந்தையுடன் சிரிக்கும் தாய் வி.வி.

  பதிலளிநீக்கு
 4. நாலும் ஐந்தும் மனதை மிகவும் கொள்ளை கொண்டன...

  நானும் எனது Profile படத்தை அனுப்பி வைக்கலாம் என்று நினைக்கிறேன்... ஹிஹி... சும்மா...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. கவலை இல்லாமல் சிரிக்கும் சிரிப்பு ஆன்மாவின் இசைதான். தலைப்பு அருமை.
  படங்கள் எல்லாம் கள்ளமில்லா சிரிப்பு அருமை.

  பதிலளிநீக்கு
 6. புன்னகை பொன் நகை..... போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. ஒரு மலர்த்தோட்டத்தில் நுழைந்த
  மலர்ச்சியும் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன படங்கள். மனதிலிருந்து வரும் மகிழ்ச்சியைக் குழந்தைகள் சுலபமாக வெளிக்காட்டுகின்றன. அம்மாவும் குட்டிக் குழந்தையும் பெஸ்ட்.மனதுக்கு நிறைவுதரும் போட்டியாக இருக்கப் போகிறது.

  பதிலளிநீக்கு
 8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 9. பூக்களையும் தோற்கடிக்கும் புன்னகைகள்! ஐந்தாவது படம் மனம் அள்ளிக்கொண்டது. பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 10. படங்களை விட்டு பார்வை பிரிய நேரமெடுத்தன.

  பதிலளிநீக்கு
 11. 3, 4, 5 படங்கள் அருமை..கலந்து கொள்ள போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin