வியாழன், 24 நவம்பர், 2011

இவர்களுக்குப் பூங்கொத்து

ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகச் செயல்பட்டு வரும் பெங்களூர் ஜனாகிரஹாவின் முக்கிய நோக்கம் ஆர்வமுள்ள பொதுமக்களை இணைத்துக் கொண்டு ஜனநாயத்தைப் பலபடுத்துவதாகும். வறுமைக் கோட்டில் இருக்கும் மக்களின் பிரச்சனைகளை அவர்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து பழகிப் புரிந்து தீர்வுக்காக, அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தருவதற்காக மாநில அரசை அணுகிப் போராடுவதாகும்.

படிப்பை முடித்ததும் அயல்நாட்டுக்குப் பறக்கவோ அல்லது நல்ல சம்பளத்துடனான வேலைகளில் அமரவோ ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில், அயல்நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பிறகு பெற்ற கல்வியை நாட்டில் வறுமையில் உழலும் மக்களின் நலனுக்காகச் செலவிட ஜனாகிரஹா அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் யுவதிகள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே.

இவர்கள் எல்லோருக்குமே வயது 25-லிருந்து 30-க்குள். பேச்சில் பக்குவமும், எடுத்த முடிவில் தெளிவுடனுமாக இருக்கிறார்கள். மானஸ்வினி ராவ் கணினித் துறையில் பட்டம் பெற்று பெர்க்லே பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்த பின் இப்போது கர்நாடகத்தின் பிடார் மாவட்டத்தில் ஏழைகளுடன் சேர்ந்து உழைத்து வருகிறார். “இளங்கலை முடித்ததும் எனக்கு நிறைய வேலை வாய்ப்புகள் வந்தன. ஏழைகளைப் பற்றி எவ்வளவோ வாசித்து அறிகிறோம், கேள்விப்படுகிறோமே தவிர அவர்களுக்காக எப்படி உதவுவது என்கிற புரிதல் இல்லாமலே இருந்தது. அப்போதுதான் ஜனாகிராஹாவில் இணைந்து ஒரு புதிய உலகைக் கண்டு கொண்டேன். பிறகு அது சம்பந்தமான ஆய்வையே மேற்கொள்ள விரும்பி ‘பப்ளிக் பாலிஸி’ படித்து முடித்து இந்தியா திரும்பி இந்த கிராமத்தில் வாழ்கிறேன்” எனப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இவரை போலவே பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் படித்து இந்தியா திரும்பிய ஜனாகிரஹாவில் இணைந்தவர்கள் சீரத் கவுர், நேஹா ஷர்மா, ஜானகி கிபே. இவர்கள் ஜே-பால்(J-Pal) ஆய்வாளர்கள் என அறியப்படுகிறார்கள். ஹார்வர்டில் பொருளாதாரம் கற்ற 26 வயது ஜானகி “ எல்லா ஹார்வர்ட் பட்டதாரிகளைப் போலவே முதலில் நானும் முதலீட்டு வங்கியொன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். எப்போதுமே ‘ஏன் இந்த உலகில் சிலருக்கு மட்டும் எல்லாமே நல்லபடியாக அமைகிறது. சிலருக்கு அப்படி அமைவதில்லை’ என்கிற கேள்வி என்னுள் சுழன்று கொண்டேயிருந்தது. எங்கோ சில இழைகள் விட்டுப் போய் சேர்க்கப்பட காத்திருப்பதாய் உணர்ந்தேன். அப்போதுதான் என் வேலையைத் துறந்து விட்டு ஜே-பாலில் இணைந்து இந்தியா திரும்பி கிராமங்களில் வாழலானேன்.” என்கிறார்.

இவர்கள் ஏதோ குறுகியகால ஆய்வுக்காக இப்பணியில் ஈடுபடுவதாக எண்ணிவிட வேண்டாம். படிப்பை முடித்து, சிலர் பார்த்த வேலையைத் துறந்து இவ்வமைப்பில் இணைந்தவர்கள். கிராமங்களில் வறுமைக்கோட்டில் இருப்போருடன் வாழ்ந்து ஒரு முழுமையான ஆய்வுடனான கோரிக்கை மனுக்களை அரசுக்குச் சமர்ப்பித்து, அரசு அதை நடைமுறைப்படுத்தும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கத்திலேயே தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். ஓவ்வொருவரும் தங்களைச் சுற்றியிருக்கும் வட்டத்தை விரிவாக்கி அதிலும் இன்னும் பலருக்கு இடம் கொடுத்தபடி நகர்கிறார்கள். இருதினம் முன்னே பாராட்டியிருக்கிறது இவர்களை ஒரு பத்திரிகை. என் பூங்கொத்துக்களும்.

ஜானகி சொல்லியிருப்பது போல நம்மைச் சுற்றி சரிவர எதுவும் அமையப் பெறாதவருக்காக நமது பங்காக என்ன செய்கிறோம்? நாட்டில் அது சரியில்லை இது சரியில்லை எனப் பதிவுகளும், ட்வீட்டுகளும், முகப்புத்தகக் குறிப்புகளும் ஒரு செவ்வகக் கணினித் திரையில் எழுதி முடிப்பதும், அல்லது நண்பர்களிடம் அங்கலாய்ப்பதும் ஆத்திரப்படுவதுமாய் மட்டுமே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா? அரசுக்குக் கட்டும் வரியோடு நம் பங்கு முடிந்ததா? அரசு மட்டுமே வறுமை ஒழிப்புக்குப் பாடுபட வேண்டுமென்பதில்லை, குடிமக்களாகியத் தமக்கும் பங்கு உள்ளதெனக் காட்டியிருக்கும் இவர்களைப் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் அளவுக்கு நம் வட்டத்தை விரிக்கா விட்டாலும் நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே.

*** *** ***

57 கருத்துகள்:

 1. பழைய போஸ்ட்டுக்கு இப்ப தான் கமென்ட் போட்டேன் அதுகுள்ள இன்னொரு போஸ்டா...

  பதிலளிநீக்கு
 2. ஜனாகிரஹா போனற அமைப்புகள் நிறைய உருவாக வேண்டும். இறுதியில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி வலிமையானது. என்னிடம் செர்ல்ல பதில் இல்லை. யோசிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு.

  கடைசி பாரா: நீங்கள் சொல்வது உண்மை. இதற்கு எங்களால் ஆனதை நானும் நண்பர்களும் செய்து வருகிறோம், அவரவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை தங்கள் சுற்றத்தில் செய்ய வேண்டும்

  பதிலளிநீக்கு
 4. என்னாச்சு புதிய புதிய போஸ்ட் சரபுறான்னு வந்துட்டு இருக்கு ஹி ஹி...!!!

  பதிலளிநீக்கு
 5. 25 வயதில் இத்தனை முனைப்பும்
  முயற்சியும் அதிசயிக்கின்றன. யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. //அரசு மட்டுமே வறுமை ஒழிப்புக்குப் பாடுபட வேண்டுமென்பதில்லை, குடிமக்களாகியத் தமக்கும் பங்கு உள்ளதெனக் காட்டியிருக்கும் இவர்களைப் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் அளவுக்கு நம் வட்டத்தை விரிக்கா விட்டாலும் நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா//

  அசத்தல்..

  பதிலளிநீக்கு
 7. படிப்பை முடித்து, சிலர் பார்த்த வேலையைத் துறந்து இவ்வமைப்பில் இணைந்தவர்கள். கிராமங்களில் வறுமைக்கோட்டில் இருப்போருடன் வாழ்ந்து ஒரு முழுமையான ஆய்வுடனான கோரிக்கை மனுக்களை அரசுக்குச் சமர்ப்பித்து, அரசு அதை நடைமுறைப்படுத்தும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கத்திலேயே தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். ஓவ்வொருவரும் தங்களைச் சுற்றியிருக்கும் வட்டத்தை விரிவாக்கி அதிலும் இன்னும் பலருக்கு இடம் கொடுத்தபடி நகர்கிறார்கள். இருதினம் முன்னே பாராட்டியிருக்கிறது இவர்களை ஒரு பத்திரிகை. என் பூங்கொத்துக்களும்./

  Thank you for sharing..

  பதிலளிநீக்கு
 8. கடைசி பாராவில் நீங்கள் சொல்லியிருப்பது நிச்சயமாக நம் எல்லோர் மனதிலும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும்.இப்ப தான் ஜனாகிரஹா பற்றி கேள்விபடுறேன்,நல்ல பகிர்வு.

  நேரம் கிடைக்கும் பொழுது பதிவுலகத்திற்கு வந்தால் கண்ணில் படும் பதிவுகளை வாசிப்பது வழக்கம்,இந்த முறை வரும் பொழுதேல்லாம் ரீடிங் லிஸ்டில் உங்கள் பதிவு வந்த வண்ணமிருக்கு.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே.//


  ஒரு சிலரே இம்மாதிரியான செயல்களைச் செய்கிறார்கள். பொதுவாக வரவேற்பு இருப்பதில்லை; ஒத்துழைப்பும் குறைவு. அதற்கு முக்கியத்தேவை மக்கள் மனமாற்றம். முதலில் மக்களுக்கே தாங்கள் முன்னேற்றப் பாதையில் செல்லவே இளைஞர்கள் பாடுபடுகின்றனர் என்ற நம்பிக்கை வரவேண்டும். அதிலும் இப்போதைய சூழ்நிலை தொலைக்காட்சி நெடுந்தொடர்களையும், அதில் வரும் போட்டிகள், பரிசுகளையும் தாண்டி சிந்திப்பவர் மிகக் குறைவு. எனினும் முயற்சி எடுப்போம்.

  இவர்களைப் பற்றி முன்னரே சிறிதளவு அறிந்தாலும் விபரங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. மகிழ்ச்சியாக இருக்கின்றது.

  தங்கள் மக்களுக்காக விலை மதிப்பற்ற சேவைசெய்யும் இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. மக்கள் ஆலோசனை மன்றத்தை ஸ்தாபனம் செய்ய இந்தியா வந்த போது ஜனாகிரஹாவின் ராமநாதன் தம்பதியை சந்த்தித்து ஆலோசனை செய்தேன். திரு. ராமநாதனும், மிகுந்த ஊக்கத்துடன், பல பிரசுரங்களை தந்தார். ஒரு வித்தியாசத்தால், இணைந்து செயல் பட முடியவில்ல்லை. ஜனாகிரஹாவின் அணுகுமுறை ஆய்விலும், விழிப்புணர்ச்சியிலும், கவனம் செலுத்தியது. என்னுடைய அணுகுமுறை நேரடியாக, மக்கள் ஆலோசனை மன்றத்தை இலவசமாக நடத்துவதில் கவனம் செலுத்தியது. அதற்காக, நான் அலையாத அலைச்சல் இல்லை. படாத உளைச்சல் இல்லை.
  இன்னம்பூரான்

  பதிலளிநீக்கு
 12. ஜனாக்ரஹாவினை உலகறியச் செய்த உங்கள் எழுத்து அருமை..:))

  இன்னும் பலர் உருவாகட்டும்..

  பதிலளிநீக்கு
 13. //நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து//

  மிக இயல்பாக கூறிய விதம் மிக யோசிக்க வைக்கிறது...

  நிச்சயம் செய்யவேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது...

  நல்லதொரு பகிர்விற்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 14. /நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே
  //
  நாமும் செய்வோம்
  அன்புடன் :
  ராஜா

  அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

  பதிலளிநீக்கு
 15. சில நல்லவர்கள் இன்னும் வாழ்வதால்தான் பூமித்தாய் இன்னும் பால் சுரக்கிறாள் !

  பதிலளிநீக்கு
 16. நமக்கு பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை விட நாம் பிறருக்கு என்ன செய்கிறோம் என்பது முக்கியம். அந்த வகையில், பிறர் நலனுக்காக உழைப்பவர்களை போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 17. கடைசி பாராவில் நீங்கள் சொல்லியிருப்பது நிச்சயமாக நம் எல்லோர் மனதிலும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும்.இப்ப தான் ஜனாகிரஹா பற்றி கேள்விபடுறேன்,நல்ல பகிர்வு.


  என்னுடைய பூங்கொத்தும்.

  பதிலளிநீக்கு
 18. இருதினம் முன்னே பாராட்டியிருக்கிறது இவர்களை ஒரு பத்திரிகை.

  என் பூங்கொத்துக்களும்.

  பகிர்வுக்கு நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 19. அரசு மட்டுமே வறுமை ஒழிப்புக்குப் பாடுபட வேண்டுமென்பதில்லை, குடிமக்களாகியத் தமக்கும் பங்கு உள்ளதெனக் காட்டியிருக்கும் இவர்களைப் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் அளவுக்கு நம் வட்டத்தை விரிக்கா விட்டாலும் நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே.//

  நம்பிக்கை நட்சத்திரத்திற்கு பூங்கொத்து.

  அவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட உங்களுக்கு பூங்கொத்து.

  பதிலளிநீக்கு
 20. நல்ல பகிர்வு.நாமும் நம்மால் முடிந்த
  உதவியை செய்யவேண்டும் என்ற
  எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 21. /*இவர்களைப் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் அளவுக்கு நம் வட்டத்தை விரிக்கா விட்டாலும் நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா*/
  உண்மை தான்

  பதிலளிநீக்கு
 22. /*இவர்களைப் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் அளவுக்கு நம் வட்டத்தை விரிக்கா விட்டாலும் நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா*/
  உண்மை...

  பதிலளிநீக்கு
 23. சராசரியிலிருந்து விலகி, யார் எதன்பொருட்டோ எதையோ செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்...

  மனம் நிறைந்த பாராட்டுகள்

  ஜனாகிரஹாவின் இணையமுகவரி இருந்தால் அதையும் சேர்த்துவிடுங்கள்!

  பதிலளிநீக்கு
 24. கணேஷ் said...
  //ஜனாகிரஹா போனற அமைப்புகள் நிறைய உருவாக வேண்டும். இறுதியில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி வலிமையானது. என்னிடம் செர்ல்ல பதில் இல்லை. யோசிக்கிறேன்...//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. மோகன் குமார் said...
  //நல்ல பதிவு.

  கடைசி பாரா: நீங்கள் சொல்வது உண்மை. இதற்கு எங்களால் ஆனதை நானும் நண்பர்களும் செய்து வருகிறோம், அவரவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை தங்கள் சுற்றத்தில் செய்ய வேண்டும்//

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 26. @ MANO நாஞ்சில் மனோ

  வருகைக்கு நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 27. வல்லிசிம்ஹன் said...
  //25 வயதில் இத்தனை முனைப்பும்
  முயற்சியும் அதிசயிக்கின்றன. யோசிக்க வைத்துவிட்டீர்கள்.//

  கருத்துக்கு நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 28. பாச மலர் / Paasa Malar said...
  //என்னுடைய பூங்கொத்தும் அவர்களுக்கு...//

  நன்றி மலர்.

  பதிலளிநீக்கு
 29. @ அமைதிச்சாரல்

  கருத்துக்கு நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 30. @ இராஜராஜேஸ்வரி

  கருத்துக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 31. asiya omar said...
  //கடைசி பாராவில் நீங்கள் சொல்லியிருப்பது நிச்சயமாக நம் எல்லோர் மனதிலும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும்.இப்ப தான் ஜனாகிரஹா பற்றி கேள்விபடுறேன்,நல்ல பகிர்வு.

  நேரம் கிடைக்கும் பொழுது பதிவுலகத்திற்கு வந்தால் கண்ணில் படும் பதிவுகளை வாசிப்பது வழக்கம்,இந்த முறை வரும் பொழுதேல்லாம் ரீடிங் லிஸ்டில் உங்கள் பதிவு வந்த வண்ணமிருக்கு.பாராட்டுக்கள்.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 32. geethasmbsvm6 said...
  //ஒரு சிலரே இம்மாதிரியான செயல்களைச் செய்கிறார்கள். பொதுவாக வரவேற்பு இருப்பதில்லை; ஒத்துழைப்பும் குறைவு. அதற்கு முக்கியத்தேவை மக்கள் மனமாற்றம். முதலில் மக்களுக்கே தாங்கள் முன்னேற்றப் பாதையில் செல்லவே இளைஞர்கள் பாடுபடுகின்றனர் என்ற நம்பிக்கை வரவேண்டும். அதிலும் இப்போதைய சூழ்நிலை தொலைக்காட்சி நெடுந்தொடர்களையும், அதில் வரும் போட்டிகள், பரிசுகளையும் தாண்டி சிந்திப்பவர் மிகக் குறைவு. எனினும் முயற்சி எடுப்போம்.

  இவர்களைப் பற்றி முன்னரே சிறிதளவு அறிந்தாலும் விபரங்களுக்கு நன்றி.//

  கருத்துக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 33. மாதேவி said...
  //மகிழ்ச்சியாக இருக்கின்றது.

  தங்கள் மக்களுக்காக விலை மதிப்பற்ற சேவைசெய்யும் இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 34. Innamburan said...
  //மக்கள் ஆலோசனை மன்றத்தை ஸ்தாபனம் செய்ய இந்தியா வந்த போது ஜனாகிரஹாவின் ராமநாதன் தம்பதியை சந்த்தித்து ஆலோசனை செய்தேன். திரு. ராமநாதனும், மிகுந்த ஊக்கத்துடன், பல பிரசுரங்களை தந்தார். ஒரு வித்தியாசத்தால், இணைந்து செயல் பட முடியவில்ல்லை. ஜனாகிரஹாவின் அணுகுமுறை ஆய்விலும், விழிப்புணர்ச்சியிலும், கவனம் செலுத்தியது. என்னுடைய அணுகுமுறை நேரடியாக, மக்கள் ஆலோசனை மன்றத்தை இலவசமாக நடத்துவதில் கவனம் செலுத்தியது. அதற்காக, நான் அலையாத அலைச்சல் இல்லை. படாத உளைச்சல் இல்லை.//

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி இன்னம்பூரான் சார். பதிவை வாசித்து விட்டு அங்கு பணியில் சேர முயன்ற தன் அனுபவத்தை ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டார். ‘நாணயத்துக்கு இருபக்கமும் போல ஒருசில குறைகள் இருப்பினும் இவர்களால் மக்கள் அடைந்து வரும் பயன் கண்கூடு.’ என்றார். முழுநேரப் பணியாக மட்டுமல்லாமல் பலபேர்கள் பகுதிநேரமாக இணைந்து சேவையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிய அவர்கள் அலுவலகத்துக்கு நேரில் செல்லும் எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 35. சத்ரியன் said...
  //சிறப்பான சமூக பகிர்வு.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 36. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //ஜனாக்ரஹாவினை உலகறியச் செய்த உங்கள் எழுத்து அருமை..:))

  இன்னும் பலர் உருவாகட்டும்..//

  நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 37. Kousalya said...
  ***//நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து//

  மிக இயல்பாக கூறிய விதம் மிக யோசிக்க வைக்கிறது...

  நிச்சயம் செய்யவேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது...

  நல்லதொரு பகிர்விற்கு என் நன்றிகள்.//***

  நன்றி கெளசல்யா.

  பதிலளிநீக்கு
 38. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  ***/நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா? கேட்டுக் கொள்வோம் நம்மை நாமே
  //
  நாமும் செய்வோம்/***

  நன்றி.

  பதிலளிநீக்கு
 39. ஹேமா said...
  //சில நல்லவர்கள் இன்னும் வாழ்வதால்தான் பூமித்தாய் இன்னும் பால் சுரக்கிறாள் !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 40. ஸ்ரீராம். said...
  //நல்ல பகிர்வு.//

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 41. அன்புடன் அருணா said...
  //என்னுடைய பூங்கொத்தும்!//

  நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 42. தமிழ் உதயம் said...
  //நமக்கு பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை விட நாம் பிறருக்கு என்ன செய்கிறோம் என்பது முக்கியம். அந்த வகையில், பிறர் நலனுக்காக உழைப்பவர்களை போற்றுவோம்.//

  ஆம் ரமேஷ், மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 43. Lakshmi said...
  //கடைசி பாராவில் நீங்கள் சொல்லியிருப்பது நிச்சயமாக நம் எல்லோர் மனதிலும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும்.இப்ப தான் ஜனாகிரஹா பற்றி கேள்விபடுறேன்,நல்ல பகிர்வு.

  என்னுடைய பூங்கொத்தும்.//

  நன்றி லக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 44. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //இருதினம் முன்னே பாராட்டியிருக்கிறது இவர்களை ஒரு பத்திரிகை.

  என் பூங்கொத்துக்களும்.

  பகிர்வுக்கு நன்றிகள்.//

  மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 45. கோமதி அரசு said...
  ***/நம்பிக்கை நட்சத்திரத்திற்கு பூங்கொத்து.

  அவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட உங்களுக்கு பூங்கொத்து./***

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 46. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //சிறப்பான பகிர்வு//

  நன்றி டிவிஆர் சார்.

  பதிலளிநீக்கு
 47. KSGOA said...
  //நல்ல பகிர்வு.நாமும் நம்மால் முடிந்த
  உதவியை செய்யவேண்டும் என்ற
  எண்ணத்தை ஏற்படுத்துகிறது.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 48. அமுதா said...
  ***/*இவர்களைப் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களின் அளவுக்கு நம் வட்டத்தை விரிக்கா விட்டாலும் நாம் இருக்குமிடங்களிலாவது சுற்றியிருக்கும் ஏழைகளின், ஆதரவற்றோரின் தேவையறிந்து நம்மால் ஆனதைச் செய்தபடி ஒவ்வொருவரும் இந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே வரவேண்டாமா*/
  உண்மை தான்//

  நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 49. ஈரோடு கதிர் said...
  //சராசரியிலிருந்து விலகி, யார் எதன்பொருட்டோ எதையோ செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்...

  மனம் நிறைந்த பாராட்டுகள்

  ஜனாகிரஹாவின் இணையமுகவரி இருந்தால் அதையும் சேர்த்துவிடுங்கள்!//

  பார்த்து இணைக்கிறேன். நன்றி கதிர்.

  பதிலளிநீக்கு
 50. சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்பதிவை
  வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நல்ல அறிமுகத்துக்கு
  நன்றி.

  உங்கள் பதிவினை இணைத்த எனது இடுகை:
  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_21.html

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin