வியாழன், 3 நவம்பர், 2011

என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1)

# 1 புதிய லாண்ட் மார்க் ? விரிந்த சாலைகள், உயர்ந்த கட்டிடடங்கள், எங்கும் சுத்தம், எதிலும் ஒழுங்கு என்று பாராட்டப்படும், உலக நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகளைப் பெறுகிற ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர் உங்களில் பலரும் சென்ற வந்த இடமாகவே இருக்கக் கூடும். சென்றிராதவருக்கு சில தகவல்கள் உதவலாம் என்றும், சென்ற வந்த நினைவுகள் மறக்காமல் இருக்கவும் என் பயண அனுபவத்தை.. என் கேமரா பார்வையில், வழக்கம் போலவே சிறுகுறிப்புகளாக, சிலபல பாகங்களாகப் பகிர்ந்து கொள்ள உள்ளேன். விரிவான பயணக்கட்டுரையாக இல்லாமல் அதாவது பயணக் கதைக்குப் ‘படங்கள்’ என்றில்லாது, எடுத்த ஐநூறுக்கும் அதிகமான படங்களில் வடிகட்டித் தரவுள்ள சுமார் நூறு படங்களுக்கான ‘கதை’ எனக் கொள்ளலாம்:)!

# 2 அதிர்ஷ்டத்தின் அடையாளச் சின்னம்
சிங்கப்பூருக்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வருகிற அடையாளச் சின்னமாகக் கொண்டாடப்படும் மெர்லயன் சுற்றுலா செல்லுபவர்கள் தவறவிடாத இடம். ‘மெர்’ என்றால் கடல். கீழுள்ள மீனுடல் ஒருகாலத்தில் இந்நாடு மீன்பிடி கிராமமாகத் திகழ்ந்ததின் குறியீடாகவும், சிங்கத் தலை சிங்கப்புரா (லயன் சிட்டி) எனும் அதன் புராதனப் பெயரின் குறியீடாகவும் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் நதியோரமிருக்கும் இவ்விடத்திலிருந்தே எஸ்ப்ளனேட், மெரினா பே சான்ட்ஸ் (Marina Bay Sands) , தென்கிழக்கு ஆசியாவின் உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றான Swissotel The Stamford ஹோட்டல், உலகின் அதி உயர சிங்கப்பூர் ஃப்ளையர் அனைத்தும் காணக் கிடைப்பதால் சுற்றலாப் பயணிகள் சுழன்று சுழன்று அவற்றைப் படமாக்கியபடி இருந்தார்கள் இப்படி:
# 3 Marina Bay Sands
அந்த ஜோதியில் நானும் ஐக்கியமானேன். சிங்கப்பூர் என்றாலே மெர்லயனே முக்கிய லாண்ட்மார்க்காக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது போய் அந்த இடத்தை சாண்ட்ஸ் ஹோட்டல் பிடித்துக் கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. அதனாலாயே ஒரு மாறுதலுக்கு முதல் படமாக அதைப் பகிர்ந்தேன்! 57 மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் மூன்று கட்டிடங்களையும் இணைக்கிறது நீர்ச்சறுக்குப் பலகை போன்ற தோற்றத்துடனான ஸ்கை பார்க் எனும் மேல் தளம். அதில் 150 மீட்டர் நீள நீச்சல் குளம் அமைந்திருப்பது கூடுதல் ஈர்ப்பு.
# 4
ஆடம்பர ஹோட்டலான இதில் தங்குபவர் தவிர்த்து மேலிருந்து சிங்கப்பூரினை ரசிக்க ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக தலைக்கு இருபது டாலரை வசூலித்து அனுப்பி வைக்கிறதாம் நிர்வாகம். இரவு நேரத்தில் விளக்கின் ஜாலத்தில் இந்த ஹோட்டல் ஜொலிக்கும் அழகைக் காணவே பலர் மாலையில் மெர்லயன் பக்கம் செல்வதுண்டு. எங்கள் பயணத்திட்டத்திலும் மாலையாக இருந்த சிடி டூரை நாங்கள்தான் காலை நேரத்துக்கு மாற்றி விட்டிருந்தோம். பிறகுதான் ஏன் மாலையில் செல்ல வற்புறுத்தப்பட்டோமெனப் புரிந்தது.

சற்றுத் தள்ளி அமைந்த, 2002 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட எஸ்ப்ளனேட் கட்டிடம் உலகின் அதிமுக்கிய கலை அரங்கமாக செயல்பட்டு வருகிறது.
# 5 Esplanade Mall

டுரியன் பழத்தை இரண்டாக வெட்டிக் கவிழ்த்தது போன்ற கட்டுமானத்தைக் கொண்டது:
# 6

# 6 Swissotel The Stamford Singapore
741 அடி உயரத்தில் இன்னொரு பக்கம் ஸ்டாம்ஃபோர்ட் ஹோட்டல் உலகின் உயர்ந்த கட்டிடமாக கின்னஸில் தான் பெற்றிருந்த இடத்தை, சென்ற வருடம் துபாய் புர்ஜ் காலிஃபாக்கு விட்டுக் கொடுத்திருந்தாலும் தென்கிழக்கு ஆசியாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றாகக் கம்பீரம் குறையாமல் காட்சி தருகிறது.

அருகாமையில் வாகனத்திலிருந்து எடுத்தது. கிராப் செய்த படம் அன்று:
# 7


சிங்கப்பூர் ஃப்ளையர்
# 8
பார்ப்பதற்குத் தீம் பார்க் ஜெயண்ட் வீல் போலத் தெரிந்தாலும் 44 மாடிகளின் உயரம், அதாவது சுமார் 541 அடி உயரம் கொண்டது இந்த ஃப்ளையர். ஒரு சுற்றுச் சவாரி அரைமணியில் சென்றுவந்து விடலாம். பறவைப் பார்வையில் சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியா வரை பார்த்திடலாமென்றும் நீந்தும் ஆகாய மேகங்களின் அருகாமையில் செல்லுவது அற்புத அனுபவமென்றும் சொல்லப் படுகிறது.
# 9
2005-ல் தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது. லண்டன் ஐ, மற்றும் சைனாவின் ஸ்டார் ஆஃப் நன்சங் ஆகிய சவாரி சக்கரங்களையும் விட உயர்ந்தது.
# 10
குளிர்சாதன வசதியுடனான 28 கூடைகள் ஒவ்வொன்றும், 28 பேர் அமரும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சின்ன வயதிலிருந்து எங்க ஊர் பொருட்காட்சி ஜெயண்ட் வீலில் ஏறவே பயப்படும் வீராங்கனை நான். எந்த மலைப் பிரதேசத்துக்குச் சென்றாலும், திருப்பதி போன்ற உயரம் குறைந்த குன்றானாலும். குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வண்டி ஏற ஏற அசெளகரியமாக உணர ஆரம்பித்து விடுவேன். எலுமிச்சையை மூக்குக்கு அருகே வைத்துக் கொள்வேன். நகர்வதே தெரியாமல் மிக மிக மெதுவாகவே சுற்றுமெனச் சொல்லப்பட்ட போதிலும், வந்த இடத்தில் எதற்கடா வம்பு என இதில் ஏறி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. படம் எடுத்ததோடு நிறுத்திக் கொண்டேன். பிரச்சனை இல்லாதவர்கள் தவறவிடக் கூடாத ஒன்றே இந்த வான் உலா.

# 11 செல்வம் தரும் நீருற்று
The Fountain of Wealth என சீன நம்பிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட இது சன்டெக் சிட்டி ஷாப்பிங் மாலினுள் உள்ளது. 1998-ல் உலகின் மிகப்பெரிய நீருற்றாக கின்னஸில் இடப் பெற்றதாகும். ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் நீர் நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் செல்வமும் அதிர்ஷ்டமும் அடைய வேண்டி நீருற்றின் நடுவே அமைந்த குட்டி நீருற்றைச் சுற்றி நடக்க அனுமதிக்கப் படுகிறார்கள். தினம் இரவு 8 முதல் 9 மணிவரை லேசர் ஒளியில் பாட்டுக்கு ஏற்ற மாதிரியாக அசைந்தாடும் இந்த நீருற்று. சன் டெக் மாலுக்கு மக்களை ஈர்க்கவும் இது உதவுவதாகச் சொல்லப்படுகிறது.


# 12 நதிபார்த்து வான் தொட்டுக் கட்டிடங்கள்

வெள்ளை நிறத்திலிருப்பது ஆண்ட்ர்சன் பாலம். இடது பக்கம் தெரிவது எஸ்பளனேட் பாலம். சிங்கப்பூர் நதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் இங்கு ஆரம்பித்து வெகுதூரம் நீளுகிற இந்தப் பாலத்துக்கடியிலிருந்து நுழைந்தது நீஈஈஈண்ட படகொன்று.
# 13 படகு சவாரி (river cruise) மூலமாகவும் சுற்றிப்பார்க்கிறார்கள் நகரினை. படம் 5-ல் உள்ள படகு மற்றும் இது போன்ற ட்ராகன் போட்களில்..
# 14
நாங்கள் சென்றிருந்தது கஸ்டமைஸ்ட் பேக்கேஜ் என்பதால் ஒவ்வொரு இடத்துக்கும் செல்ல இரண்டு குடும்பங்களுக்கு ஒரு வாகனம் என ஏற்பாடு செய்திருந்தார்கள். சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொரு நாள் வந்த ஓட்டநர்களும் கஸ்டமர்கள் நேரத்துக்கு சாப்பிட்டார்களா என்பதில் அக்கறை காட்டினார்கள். இல்லையெனில் எங்கே ஓட்டலில் நிறுத்த வேண்டுமானாலும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். சிட்டி டூருக்கு மட்டும் தனிவாகனம் கேட்டுப் பெற்றோம் விருப்பப்படி விருப்பமான இடத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாமென. ஆனால் சிட்டி டூருக்கு அதற்காகவே பிரத்தியேகமாக இயக்கப்படும் இரண்டு தளம் கொண்ட பேருந்தைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என ஆதங்கப்பட்டார் சிங்கப்பூர் வாழ் நண்பர். ஆம், வித்தியாசமான அனுபவமாக, படமெடுக்கக் கூடுதல் வசதியாக இருந்திருக்கும்தான். இருப்பினும் கூட நகரும் வாகனத்தின் உள்ளிருந்து ஓரளவு வெற்றிகரமாகவே பல இடங்களைப் படமாக்கிவிட்டுள்ளேன்:)!

# 15 பழைய உச்சநீதி மன்றம்


# 16 இஸ்தானா பார்க் நுழைவாயில், தேசியக் கொடிகளுடன்..
சிங்கப்பூர் அதிபரின் குடியிருப்பாகிய இஸ்தானாவிற்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது.

தங்கியிருந்த ஐந்து நாட்களில் நேரமின்மையால் உள்ளே செல்ல இயலாத இடங்களாயினும், காட்சிப் படுத்தியப் படங்களை அதன் சிறப்புகளுடனேயே பகிர்ந்திருக்கிறேன் இனி செல்ல இருப்பவர் திட்டமிட உதவுமென.

[தொடரும்]

103 கருத்துகள்:

 1. வாவ்..செலவில்லாமல் சிங்கப்பூரை சுற்றிக்காட்டிவிட்டீர்கள்.படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்!

  பதிலளிநீக்கு
 2. நேரில் பார்ப்பதுபோல பிரமிக்கவைக்கிறது படங்கள் !

  பதிலளிநீக்கு
 3. நாங்களும் சிங்கப்பூர் சென்று வந்த மாதிரியாயிற்று. படங்களுடன் அருமை.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் நிஜமாவே சூப்பர்.
  அசத்தறீங்க

  பதிலளிநீக்கு
 5. படங்கள் ஒவ்வொன்றும் நானே நேரில் சென்று வந்த உணர்வை அளிக்கிறது. அந்த ப்ளையர்... நினைத்தாலே தலை சுற்றுகிறது. அருமையான படங்கள் வழங்கியமைக்கு மிகமிகமிக நன்றி!

  பதிலளிநீக்கு
 6. எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் .....நன்றி ராமலஷ்மி

  பதிலளிநீக்கு
 7. சிங்கப்பூரை அழகாக படம் பிடித்து காண்பித்து,நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வை தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. பகிர்வும் போட்டோகிராஃபியும் சூப்பர்..தொடருங்கள் ராமலஷ்மி..

  பதிலளிநீக்கு
 9. அழகழகான் படங்களுடன் அருமையான பதிவு. நேரில் சிங்கப்பூருக்கே கூட்டிச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பகிர்வுக்கு நன்றிகள்.vgk

  பதிலளிநீக்கு
 10. அட்டகாசம்...அமர்க்களம்...அற்புதம் !! ஒரு போட்டோவை பார்த்து பிரமிப்பா இருக்கே என்று நினைச்சா அடுத்த படம் அதைவிட அசத்தலா இருக்கு...

  கேமரா கோணம் பிரமாதம் ராமலக்ஷ்மி . மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது....!!

  வர்ணனைகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

  பதிலளிநீக்கு
 11. இலவசமா சிட்டிகாட்டீங்க,புகைப்படங்கள் மிக அழகு..........

  பதிலளிநீக்கு
 12. தங்கள் படங்கள் மூலம் சிங்கப்பூரை
  மிக அழகாகப் பார்த்து ரசித்தோம்
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 13. சிங்கப்பூரைப் பற்றிய அருமையான பதிவு.
  அற்புதமான புகைப்படத் தொகுப்புகள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. மேகத்தின் பின்னணியில் ஆறாவது படம், சற்று கண்ணிமைத்தால் மேகம் நகர்வது போல பிரமை! படங்களின் துல்லியம் அசர வைக்கிறது. அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 15. உங்களுக்கும் எலுமிச்சையா.. ஹையா.. சூப்பர்.. நானும்தான் நிறைய வாட்டர் தீம் பார்க்குகள் போய் எதையும் முழுமையா சுத்த முடியாம வந்திருக்கேன்..

  சிங்கைக்கு நானும் போனேன். ஆனா இவ்வளவு தெளிவா ஃபோட்டோஸ் எடுக்கலை..:)விவரங்களும் அருமை.. வீட்டு மனுஷங்க விட்டாங்களா.. நம்மை விட்டுட்டு வேகமா ஓடுவாங்களே..:)))))

  பதிலளிநீக்கு
 16. நான் சிங்கப்பூர் சென்று நேரில் பார்த்தப்போ கூட இப்படி ரசிக்க முடியல்லே. உங்க படங்கள்மூலமாக நன்கு ரசிக்க முடிந்தது. நன்றி

  பதிலளிநீக்கு
 17. ஐந்து நாட்கள் சிங்கப்பூருக்குப் போதாதுதான். என்ன செய்யலாம். எல்லாருடைய வசதிகளையும் பார்க்க வேண்டியிருக்கிறதே,.
  சிங்கப்பூர் நல்லபடியாகவே பதிவாகி இருக்கிறது உங்கள் காமிராவில்./நானும் பாரீஸ் நகரப் படங்களை சுற்றுலா பேருந்திலிருந்துதான் எடுத்தேன்.ஒரு சில படங்கள் நெருங்கிச் சென்று எடுக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 18. படங்கள் எல்லாமே அருமைங்க ராமலக்ஷ்மி!:)

  நான் இன்னும் சிங்கப்பூர் போனதில்லை :(

  பதிலளிநீக்கு
 19. ஒரு வருஷம் குப்பை கொட்டிய இடம். பழைய ஞாபங்கள், கட்டடங்களைப் பார்த்ததும்.
  ஆனா, கட்டடத்தை தவிர வேறு ஒன்றும் இல்லாதது, சிங்கையின் மைனஸ்.

  பதிலளிநீக்கு
 20. அக்கரைச்சீமை அழகினை இந்த படங்களில் கண்டேனே...! :):):):)

  பதிலளிநீக்கு
 21. அய் ஜாலி.. எங்களுக்கு செலவில்லாம சிங்கப்பூர் டூர் :)

  அழகான படங்கள் அக்கா :))

  பதிலளிநீக்கு
 22. நல்ல படங்கள். உங்கள் கேமரா என்ன மேக் என்று சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
 23. எங்கள் நாட்டை / நகரைப் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ராமலக்ஷ்மி. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 24. ராமலக்ஷ்மி, உங்கள் கேமரா பார்வை அருமை.

  உங்கள் பயண அனுபவம் சிங்கப்பூர் பார்க்காதவர்களுக்கு கண்டிப்பாய் உதவும்.

  பதிலளிநீக்கு
 25. படங்கள் அனைத்தும் நம்மை
  பயணப்படகில் அழைத்துச் செல்கின்றன

  பதிலளிநீக்கு
 26. படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. கட்டிடத்தை தவிர சிங்கையில் வேறு என்ன இருக்கிறது :-)

  பதிலளிநீக்கு
 27. அழகான படங்களின் சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 28. படங்கள் எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!!!!

  எத்தனை நாள் டூர்?

  பதிலளிநீக்கு
 29. படங்கள் எல்லாம் அருமை...நேரில் சென்று பார்பது போல அருமை.

  பதிலளிநீக்கு
 30. படம்னா ... இப்படி எடுத்தா அது படம்!

  பதிலளிநீக்கு
 31. ஸாதிகா said...

  //வாவ்..செலவில்லாமல் சிங்கப்பூரை சுற்றிக்காட்டிவிட்டீர்கள்.படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்!//

  மிக்க நன்றி ஸாதிகா. 6 அல்லது 7 பாகங்களாவது வரும் ஆகையால் வாரம் ஒன்று அல்லது இரண்டென வெளியிட எண்ணம்.

  பதிலளிநீக்கு
 32. ஹேமா said...

  //நேரில் பார்ப்பதுபோல பிரமிக்கவைக்கிறது படங்கள் !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 33. ஈரோடு கதிர் said...

  //ஆஹா..... அருமை!//

  நன்றி கதிர்!

  பதிலளிநீக்கு
 34. தமிழ் உதயம் said...

  //நாங்களும் சிங்கப்பூர் சென்று வந்த மாதிரியாயிற்று. படங்களுடன் அருமை.//

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 35. புதுகைத் தென்றல் said...

  //படங்கள் நிஜமாவே சூப்பர்.
  அசத்தறீங்க//

  நன்றி தென்றல்.

  பதிலளிநீக்கு
 36. கணேஷ் said...

  //படங்கள் ஒவ்வொன்றும் நானே நேரில் சென்று வந்த உணர்வை அளிக்கிறது. அந்த ப்ளையர்... நினைத்தாலே தலை சுற்றுகிறது. அருமையான படங்கள் வழங்கியமைக்கு மிகமிகமிக நன்றி!//


  மிக்க நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 37. அப்பாதுரை said...
  //breathtaking photographs!//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 38. goma said...
  //எவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் .....நன்றி ராமலஷ்மி//

  மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 39. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //படங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கே..//

  நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 40. புதுகை.அப்துல்லா said...
  //சூப்பர்க்கா.//

  நன்றி அப்துல்லா.

  பதிலளிநீக்கு
 41. வே.நடனசபாபதி said...
  //சிங்கப்பூரை அழகாக படம் பிடித்து காண்பித்து,நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வை தந்தமைக்கு நன்றி!//

  மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 42. மோகன் குமார் said...
  //Excellent. Yarukkum sollaama eppo poittu vantheenga???//

  ஆகஸ்டில்:)! நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 43. asiya omar said...
  //பகிர்வும் போட்டோகிராஃபியும் சூப்பர்..தொடருங்கள் ராமலஷ்மி..//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 44. வை.கோபாலகிருஷ்ணன் said...

  ..அழகழகான் படங்களுடன் அருமையான பதிவு. நேரில் சிங்கப்பூருக்கே கூட்டிச் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பகிர்வுக்கு நன்றிகள்.vgk//

  மிக்க நன்றி vgk sir.

  பதிலளிநீக்கு
 45. Kousalya said...
  /கேமரா கோணம் பிரமாதம் ராமலக்ஷ்மி . மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது....!!

  வர்ணனைகள் ரொம்ப பிடிச்சிருக்கு.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கெளசல்யா.

  பதிலளிநீக்கு
 46. ஜோதிஜி திருப்பூர் said...
  //ரொம்ப நல்லாயிருக்கு.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 47. S.Menaga said...
  //இலவசமா சிட்டிகாட்டீங்க,புகைப்படங்கள் மிக அழகு..........//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 48. Ramani said...
  //தங்கள் படங்கள் மூலம் சிங்கப்பூரை
  மிக அழகாகப் பார்த்து ரசித்தோம்
  மிக்க நன்றி//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 49. ப்ரியமுடன் வசந்த் said...
  //அழகுப்படங்கள்..!//

  நன்றி வசந்த்.

  பதிலளிநீக்கு
 50. Rathnavel said...//சிங்கப்பூரைப் பற்றிய அருமையான பதிவு.
  அற்புதமான புகைப்படத் தொகுப்புகள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ரத்னவேல் சார் தங்கள் பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 51. ஸ்ரீராம். said...

  //மேகத்தின் பின்னணியில் ஆறாவது படம், சற்று கண்ணிமைத்தால் மேகம் நகர்வது போல பிரமை! படங்களின் துல்லியம் அசர வைக்கிறது. அருமையான பகிர்வு.//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 52. அமைதி அப்பா said...
  //பிரமாண்டம்...!//

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 53. தேனம்மை லெக்ஷ்மணன் said...//உங்களுக்கும் எலுமிச்சையா.. ஹையா.. சூப்பர்.. நானும்தான் நிறைய வாட்டர் தீம் பார்க்குகள் போய் எதையும் முழுமையா சுத்த முடியாம வந்திருக்கேன்..//

  தீம் பார்க் போனால் நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி:)!

  // வீட்டு மனுஷங்க விட்டாங்களா.. நம்மை விட்டுட்டு வேகமா ஓடுவாங்களே..:)))))//

  இந்த விஷயத்தில் பொறுமையும் ஒத்துழைப்பும் அதிகம் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும் நான்:)! நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 54. Lakshmi said...
  //நான் சிங்கப்பூர் சென்று நேரில் பார்த்தப்போ கூட இப்படி ரசிக்க முடியல்லே. உங்க படங்கள்மூலமாக நன்கு ரசிக்க முடிந்தது. நன்றி//

  மிக்க நன்றிங்க லக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 55. வல்லிசிம்ஹன் said...

  //ஐந்து நாட்கள் சிங்கப்பூருக்குப் போதாதுதான். என்ன செய்யலாம். எல்லாருடைய வசதிகளையும் பார்க்க வேண்டியிருக்கிறதே,.
  சிங்கப்பூர் நல்லபடியாகவே பதிவாகி இருக்கிறது உங்கள் காமிராவில்./நானும் பாரீஸ் நகரப் படங்களை சுற்றுலா பேருந்திலிருந்துதான் எடுத்தேன்.ஒரு சில படங்கள் நெருங்கிச் சென்று எடுக்க முடிந்தது.//

  பாரீஸ் படங்கள் பார்த்தேன் வல்லிம்மா. நன்றாக வந்திருந்தன. ஆம் ஐந்து நாட்கள் போதவில்லைதான். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 56. விழித்துக்கொள் said...

  //arumaiyana padhivu vaazhthukkal
  nandri//

  மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 57. வருண் said...

  //படங்கள் எல்லாமே அருமைங்க ராமலக்ஷ்மி!:)

  நான் இன்னும் சிங்கப்பூர் போனதில்லை :(//

  ஒருமுறையேனும் செல்ல வேண்டிய இடமே:)! நன்றி வருண்!

  பதிலளிநீக்கு
 58. SurveySan said...

  //ஒரு வருஷம் குப்பை கொட்டிய இடம். பழைய ஞாபங்கள், கட்டடங்களைப் பார்த்ததும்.
  ஆனா, கட்டடத்தை தவிர வேறு ஒன்றும் இல்லாதது, சிங்கையின் மைனஸ்.//

  தொடர்ந்து வாழ எப்படியோ தெரியாது. சுற்றுலாவாகச் செல்ல ஏற்ற இடமே. குறிப்பாக ஜுராங், செண்டோஸா, நைட் சஃபாரி பிடித்திருந்தன.

  அதுசரி, சிங்கையில் எப்படி உங்களை ‘குப்பை’ கொட்ட விட்டாங்க:)?

  பதிலளிநீக்கு
 59. நம்பிக்கைபாண்டியன் said...

  //அக்கரைச்சீமை அழகினை இந்த படங்களில் கண்டேனே...! :):):):)//

  நன்றி நம்பிக்கைபாண்டியன்:)!

  பதிலளிநீக்கு
 60. சுசி said...//அய் ஜாலி.. எங்களுக்கு செலவில்லாம சிங்கப்பூர் டூர் :)

  அழகான படங்கள் அக்கா :))//

  மிக்க நன்றி சுசி:)!

  பதிலளிநீக்கு
 61. DrPKandaswamyPhD said...
  //நல்ல படங்கள். உங்கள் கேமரா என்ன மேக் என்று சொல்ல முடியுமா?//

  மிக்க நன்றிங்க. Nikon D5000.

  பதிலளிநீக்கு
 62. கோவி.கண்ணன் said...
  //எங்கள் நாட்டை / நகரைப் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ராமலக்ஷ்மி. பாராட்டுகள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும். தொடர்ந்து பதிய இருக்கும் படங்களையும் பார்க்கக் கேட்டுக் கொள்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 63. Kanchana Radhakrishnan said...
  //படங்கள் சூப்பர்.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 64. கோமதி அரசு said...
  //ராமலக்ஷ்மி, உங்கள் கேமரா பார்வை அருமை.

  உங்கள் பயண அனுபவம் சிங்கப்பூர் பார்க்காதவர்களுக்கு கண்டிப்பாய் உதவும்.//

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 65. அமுதா said...
  //சூப்பர்//

  நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 66. திகழ் said...
  //படங்கள் அனைத்தும் நம்மை
  பயணப்படகில் அழைத்துச் செல்கின்றன//

  மிக்க நன்றி திகழ்:)! தங்கள் வலைப்பூவில் முன்னர் நீங்கள் பகிர்ந்திருந்த அழகான சிங்கைப் படங்கள் நினைவுக்கு வருகின்றன.

  பதிலளிநீக்கு
 67. மனோ சாமிநாதன் said...
  //புகைப்படங்கள் அனைத்தும் அருமை!//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 68. Thekkikattan|தெகா said...
  //படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. கட்டிடத்தை தவிர சிங்கையில் வேறு என்ன இருக்கிறது :-)//

  வரும் பதிவுகளில் பாருங்களேன்:)! நன்றி தெகா!

  பதிலளிநீக்கு
 69. இராஜராஜேஸ்வரி said...
  //அழகான படங்களின் சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 70. துளசி கோபால் said...
  //படங்கள் எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!!!!

  எத்தனை நாள் டூர்?//

  ஐந்து நாட்கள். நன்றி மேடம்:)!

  பதிலளிநீக்கு
 71. முகுந்த் அம்மா said...
  //படங்கள் எல்லாம் அருமை...நேரில் சென்று பார்பது போல அருமை.//

  நன்றி முகுந்த் அம்மா.

  பதிலளிநீக்கு
 72. தருமி said...
  //படம்னா ... இப்படி எடுத்தா அது படம்!//

  தங்கள் முதல் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சியைத் தருகின்றன. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 73. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு
 74. //தங்கள் முதல் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சியைத் தருகின்றன. மிக்க நன்றி. //

  அப்படியா?

  உண்மையானால் தவறுதான்; ஏனெனில் உங்கள் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்படி இதுவரை ஏதும் சொல்லாது விட்டேன்! மயக்கத்தோடு நின்று விட்டேனோ... நண்பனுக்கு அனுப்பிய நினைவுகூட இருக்கிறது.

  ஆனாலும் இதுபோல் படங்களைப் பார்த்து பொறாமையால் நொந்து பின்னூட்டமின்றி போயிருந்திருப்பேன்.

  :)

  பதிலளிநீக்கு
 75. தருமி said...

  // நண்பனுக்கு அனுப்பிய நினைவுகூட இருக்கிறது.//

  இன்னும் மகிழ்ச்சி:)! உங்கள் ஊர் கோவில் படங்கள் சில இந்தப் பதிவில் உள்ளன. முன்னரே பார்த்திருக்கிறீர்களா தெரியாது. இல்லையெனில் நேரமிருக்கையில் பாருங்கள். மீள் வருகைக்கும் பதிலுக்கும் மீண்டும் என் நன்றி:)!

  பதிலளிநீக்கு
 76. நாங்களும் கூடத்தான் சிங்கப்பூர் சென்றோம். ம்ம் .. ம் ..

  அதென்னங்க படத்துக்குப் பின்னால நிக்கிற மேகங்கள்கூட உங்க சொன்ன பேச்சைக் கேக்குது!

  பதிலளிநீக்கு
 77. //நகரும் வாகனத்தின் உள்ளிருந்து ஓரளவு வெற்றிகரமாகவே பல இடங்களைப் படமாக்கிவிட்டுள்ளேன்:)!//

  !!!!!!!

  பதிலளிநீக்கு
 78. @ தருமி சார்,
  படங்கள் 4,7,9,10,11,15,16 இவை ஓடிய வாகனத்திலிருந்து எடுத்தவையே.

  பதிலளிநீக்கு
 79. ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வர்ரேன். அப்பாடா கொள்ளை அழகு. சிங்கப்பூரும் சரி உங்க கேமிரா கையாளும் திறனும் சரி... போட்டு போடுது போட்டி! அருமை!

  பதிலளிநீக்கு
 80. கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க.பகிர்விற்கு நன்றி மேடம் :-)

  பதிலளிநீக்கு
 81. Singapore beautiful Singapore.... கழுத்தின் வலிகளோடு வலம் வந்தப் பயணத்தில் கனமான புகைப்படங்கள் அனைவருக்கும் அழகான காட்சிகளாய்... நன்றி ராமலக்ஷ்மி...

  பதிலளிநீக்கு
 82. @ குமரி எஸ். நீலகண்டன்,

  கேமராவைக் கையில் எடுத்ததும் வலி பறந்து போகாவிட்டாலும் மறந்து போகிறது:)! மிக்க நன்றி நீலகண்டன்.

  பதிலளிநீக்கு
 83. raji said...
  //கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க.பகிர்விற்கு நன்றி மேடம் :-)//

  வாங்க ராஜி. மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 84. @ பாத்திமா ஜொஹ்ரா,

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 85. எப்படியோ . ..இந்த மாதிரி படங்களை போட்டு எங்களையும் சிங்கப்பூர் வர வச்சி விடுவீங்க போல இருக்கே ...

  பதிலளிநீக்கு
 86. @ கோவை நேரம்,

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 87. தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

  http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin