செவ்வாய், 22 நவம்பர், 2011

பெங்களூர் புத்தகத் திருவிழா 2011 - 27 நவம்பர் வரை (நேர் காணல்களுடன்)

# பத்து நாள் புத்தகத் திருவிழா


தொடங்கி விட்டது கோலாகலமாக பெங்களூரில் புத்தகக் கண்காட்சி 2011. இம்மாதம் 17ஆம் தேதி ஆரம்பித்து வருகிற ஞாயிறு, 27 நவம்பர் வரை நடக்க இருப்பதால் அது குறித்த ஒரு பகிர்வை இப்போது தருவதே சரியாக இருக்கும்.

புத்தகம் வாங்குபவர் எண்ணிக்கையும் கூட்டமும் கண்காட்சியில் அதிகரித்தாலும் தமிழ் கடைகளின் எண்ணிக்கை மட்டும் வருடத்துக்கு வருடம் குறைந்தபடியேதான் உள்ளது. ஆரம்பித்த மூன்றாவது நாள் அதிக கூட்டமில்லாத காலை பதினொரு மணியளவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன், பைக்குள் கையடக்கக் கேமரா Sony W80-வுடன்.

# நல்ல நேரம்


சென்னை போல் எல்லாப் பதிப்பகங்களும் இங்கே ஸ்டால் எடுப்பதில்லை. ஒரு கண்காட்சியையும் தவறவிடாமல் ஸ்டால் எடுப்பவர்கள் வரிசையில் காலச்சுவடு, விகடன், உயிர்மை, கிழக்குப் பதிப்பகம், திருமகள் நிலையம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்வருடமும் அவ்வாறே.

நாகர்கோவிலில் இருந்து வந்து ஸ்டால் எடுத்திருந்தனர் காலச்சுவடு பதிப்பகத்தார். இந்தமுறை கண்காட்சியின் முதல் வரிசையிலேயே, அதுவும் தமிழ் கடைகளில் முதலாவதாகவும் தங்களுக்கு இடம் கிடைத்து விட்டதால் விற்பனை எப்போதையும் விடச் சற்று அதிகமாகவே இருக்குமென நம்பிக்கை தெரிவித்தனர்.

ஒருபக்கம் ஒருநாவல் வாங்கினால் ஒன்று இலவசமென ஒரு மேசையில் அடுக்கியிருந்தார்கள். நான் ஏற்கனவே வாங்கி வாசித்து விட்டிருந்த கவிதைத் தொகுப்புகள் பலவும் அங்கிருந்தன. (இப்போதெல்லாம் கண்காட்சி வரை காத்திராமல், நல்ல புத்தகமென அறியவருபவற்றை உடனுக்குடன் ந்யூபுக் லேண்ட் மூலமாக தருவித்துக் கொள்வது வழக்கமாகி விட்டது). இணையத்தில் பெரும்பாலோர் பரிந்துரைத்திருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ வாங்கிக் கொண்டேன்.

# திரு பதிநாதன்
நாவல்களே மிக அதிகம் விற்பனையாவதாகத் தெரிவித்தார் திரு. பதிநாதன். காலச்சுவடு பின்பற்றும் முன்வெளியீட்டுத் திட்டம் குறித்து விளக்கினார். புத்தகம் வெளிவரும் முன்னரே சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்வது. ‘கு. அழகிரிசாமி சிறுகதைகள்’ -முழுத்தொகுப்பினை இப்படி சென்ற முறை வழங்கியபோது பயனடைந்தவர்கள் பலபேர் எனக் குறிப்பிட்டார். பதிப்பகத்தின் புத்தகப்பட்டியலில் க.நா.சு அவர்களின் பரிந்துரை: “கு. அழகிரிசாமி சிறுகதைகளைச் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல “ஐயோ!’ வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது. தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிருதம் இவர்களுடன் சேர்த்து கு. அழகிரிசாமியையும் சொல்லி இவர்கள் மூவரும் இந்தத் தலை முறையின் ‘சிறு’ சிறந்த கதாசிரியர்கள் என்று போற்ற எனக்குத் தோன்றுகிறது.

தற்போதைய முன் வெளியீட்டுத் திட்டத்தில் வர இருக்கும் புத்தகமே சோஃபியின் உலகம்:

# சலுகை விலையில்..
விருப்பமானவர் காலச்சுவடை அணுகலாம்.

# வருடம் தவறாமல் விகடன்
மதுரை மீனாக்ஷி புத்தகக் கடை விகடன் பிரசுரங்களுடன் கடை எடுத்திருந்தார்கள். கண்ணில் பட்டதுமே காலப்பெட்டகத்தை வாங்கிக் கொண்டேன், பெட்டகத்தின் கடைசி 25 வருட நிகழ்வுகள் விகடனில் வெளியானபோதே வாசித்த வகையில் அவை தரக் கூடிய சுவாரஸ்யத்துக்காகவும்.

# காலப் பெட்டகம்


விகடன் பிரசுரங்களில் எல்லாவருடமும் விற்பனையில் சாதனை படைப்பது ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ என்றார். தற்போது அத்துடன் சத்குருவின் புத்தகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார். போகவும் சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’-யும் எல்லா வருடமுமே அதிகம் விற்கிறதாம்.

# திரு மோகன்


# இதுதான் முதல் வருடம்
வி ஓ சி பதிப்பகத்தார் இப்போதுதான் முதன்முறையாக பெங்களூர் கண்காட்சியில் கடை எடுத்துள்ளார்களாம். விற்பனை இங்கு எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை என்றார். ஆன்மீகம் மற்றும் பிற இடங்களில் காணக்கிடைக்காத பாவேந்தர், கலைவாணர் புத்தகங்களுடன் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் அதிகமிருந்தன. பொதுவாக தங்கள் கடையில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களே அதிகம் விற்குமென்றார். அவர் குறிப்பிட்டுச் சொன்னவை:
 • டால்ஸ்டாய் கதைகள்
 • போரும் அமைதியும்
 • குற்றமும் தண்டனையும்
 • மார்க்கபோலோ

# திரு செந்தில் குமார்
‘மார்க்கபோலோ’

# குறிப்பறிந்த சேவை

உயிர்மை பதிப்பகத்தில் 361 டிகிரி சிற்றிதழில் வாசித்துப் பிடித்துப்போன தேவசச்சனின் கவிதைகளால் ‘யாருமற்ற நிழல்’ வாங்கிக் கொண்டேன். ஒருமுறை அனுஜன்யா தன் பதிவொன்றில் பரிந்துரைத்திருந்த முகுந்த் நாகராஜனின் கவிதைத் தொகுப்புகளை வாங்க விரும்பி இணையத்தில் தேடியும் புத்தகங்களின் பெயர்கள் கிடைக்கவில்லை. நியூபுக்லேண்டில் கவிஞர் பெயரைச் சொல்லி ஒவ்வொரு முறையும் விசாரிப்பதுண்டு. சென்ற முறை ‘K அலைவரிசை’ அனுப்பி வைத்திருந்தார்கள். உயிர்மையில் அதுவும் ‘ஒரு இரவில் 21 சென்டி மீட்டர் மழை பெய்தது’ம் அடுத்தடுத்து இருந்தன. இரண்டாவதை எடுத்துக் கொண்டேன். பணம் செலுத்தப் போகையில் வேகமாக ‘K அலைவரிசை’யைக் கொண்டு வந்து நீட்டினார் அங்கிருந்த விற்பனையாளர். ‘இருக்கிறது’ என்றதும் மின்னல் வேகத்தில் ‘க்ருஷ்ணன் நிழல்’ எடுத்துத் தந்தார். தேடிய தொகுப்புகளில் இரண்டு கிடைத்ததிலும், பதிப்பகத்தின் குறிப்பறிந்த சேவையிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

# திரு நிஜாமுதீன்
பணம் செலுத்தும் போது திரு நிஜாமுதீனிடம் கேட்டதில் உயிர்மையில் “ஜெயமோகன், சாரு, சுஜாதா புத்தகங்கள் அதிக விற்பனையில்..” என்றார். அனுமதியுடன் படம் எடுத்துப் பெயரையும் குறித்து வாங்கிக் கொண்டேன். உயிர்மை சிற்றிதழைப் பார்க்கச் சொன்னார். ‘நான் சந்தாதாரர்’ என்றேன். உடனே அருகிலிருந்த விற்பனையாளார் “இவர்தான் சாரின் (ஆசிரியரின்) அண்ணன்” எனத் தெரிவித்தார்.

விகடனைப்போல பெரிய ஸ்டாலாக எடுத்திருந்தார்கள் கிழக்குப் பதிப்பகம். டாலர் தேசம், கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் மற்றும் ஆர் முத்துகுமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள் ஆகியன கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுக்கியிருந்தார்கள் மேசையின் முதல் வரிசையில்.

# பெரிய ஸ்டால்


திரு விஜயகுமார்


கிழக்குப் பதிப்பகத்தைப் பொறுத்தவரையில் விற்பனையில் நெம்பர் ஒன் என்றால் எழுத்தாளர் ஜெயமோகன், அடுத்து எழுத்தாளர் சுஜாதா என்றார் திரு விஜயக் குமார்.

# அதிக விற்பனையில்..
இவை யாவும் ஒரு தகவலாகவே சேகரித்துத் தந்துள்ளேன்:)! அவரவர் விருப்பங்களுக்கும் ரசனைகளுக்குமாக புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன வாசிப்போர் வரவை எதிர்பார்த்து.

# பெங்களூர் பாலஸ் க்ரவுண்ட் காயத்ரி விஹாரில்...
27 நவம்பர் வரை..
****

பிகு: படங்கள் நான் எடுத்தவை.

44 கருத்துகள்:

 1. பெங்களூரில் புத்தகக் கண்காட்சியா. கொண்டாடுங்கள்! சென்னையில் இந்த வருடம் நடக்குமோ, நடக்காதோ என்று கேள்விக் குறியில் இருக்கிறது. பெருமூச்சுடன் படித்தேன் பதிவை. சுஜாதா எல்லாப் பதிப்பகங்களிலும் ஹாட் செல்லர் என்பது தெரிகிறது. மகிழ்ச்சி- எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பதால். மேலும் மகிழ்ச்சி தங்களின் பதிவைப் படித்ததில். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அருமையான நேர்காணலுடன் புகைப்படப்பகிர்வும்,தமிழ் புத்தக ஸ்டால்கள் குறித்த அலசலும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. கண்காட்சி சுற்றிப்பார்த்தோம் ஆனால்,புத்தகம்தான் வாங்கவில்லை ....

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு,தமிழ்மண நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!!

  பதிலளிநீக்கு
 5. நாங்களும் புத்ததக கண்காட்சியை சுற்றிப்பார்த்த உணர்வு.

  பதிலளிநீக்கு
 6. சலுகை விலையில் முன்பதிவு செய்து புத்தகம் பெறுவது நல்ல முயற்சி. திருமகள் நிலையம், எல் கே எம் பப்ளிகேஷன்ஸ் வர்த்தமானன் பதிப்பகங்கள் கூட இந்த முறையைப் பின்பற்றுகின்றன.

  முதலில் ஜெமோ, அடுத்து சுஜாதா....கொஞ்சம் இடறல்...! ஒருவேளை சுஜாதாவின் நூல்கள் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும் என்று கொள்ளலாம்!

  முகப்பில் பெங்களூரு என்றில்லாமல் பெங்களூர் என்றிருப்பது ஆட்சேபத்தைக் கிளப்பவில்லையா...தமிழ் புத்தக விற்பனைகளுக்கு எதிர்ப்பு இல்லையா?!!

  குறு பேட்டிகளுடன் பதிவை ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 7. புத்தகங்களுக்கு நடுவில்....கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு !

  பதிலளிநீக்கு
 8. நல்ல பகிர்வு.

  புத்தகம் படிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது என்பதைக் காட்டும் புத்தகத் திருவிழா மனதுக்கு மகிழ்ச்சி ஏற்ப்டுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 9. இப்படி பதிவு போட்டால் புத்தக கண்காட்சிக்கு போவது குறையும் போல தோணுது! இது என்ன சன் தொலைகாட்சியின் பட ப்ரமோஷன் போல புத்த காட்சி ப்ரமொஷனா?

  பதிலளிநீக்கு
 10. சுசி said...
  //நல்ல பகிர்வு அக்கா :)//

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 11. கணேஷ் said...
  //பெங்களூரில் புத்தகக் கண்காட்சியா. கொண்டாடுங்கள்! சென்னையில் இந்த வருடம் நடக்குமோ, நடக்காதோ என்று கேள்விக் குறியில் இருக்கிறது. பெருமூச்சுடன் படித்தேன் பதிவை. சுஜாதா எல்லாப் பதிப்பகங்களிலும் ஹாட் செல்லர் என்பது தெரிகிறது. மகிழ்ச்சி- எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பதால். மேலும் மகிழ்ச்சி தங்களின் பதிவைப் படித்ததில். நன்றி.//

  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 12. Elamparuthi said...
  //chennai book fair jan 5-17//

  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. asiya omar said...
  //அருமையான நேர்காணலுடன் புகைப்படப்பகிர்வும்,தமிழ் புத்தக ஸ்டால்கள் குறித்த அலசலும் சூப்பர்.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 14. சசிகுமார் said...
  //பகிர்வுக்கு நன்றி.. அக்கா...//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 15. செ.சரவணக்குமார் said...
  //மிக நல்ல பகிர்வு. நன்றி./

  நன்றி சரவணக்குமார்.

  பதிலளிநீக்கு
 16. goma said...
  //கண்காட்சி சுற்றிப்பார்த்தோம் ஆனால்,புத்தகம்தான் வாங்கவில்லை ....//

  சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில்:)! வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. S.Menaga said...
  //நல்ல பகிர்வு,தமிழ்மண நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் அக்கா!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 18. Lakshmi said...
  //நாங்களும் புத்ததக கண்காட்சியை சுற்றிப்பார்த்த உணர்வு.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 19. தமிழ் உதயம் said...
  //நிறைவான பகிர்வு.//

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 20. ஸ்ரீராம். said...
  //முகப்பில் பெங்களூரு என்றில்லாமல் பெங்களூர் என்றிருப்பது ஆட்சேபத்தைக் கிளப்பவில்லையா...தமிழ் புத்தக விற்பனைகளுக்கு எதிர்ப்பு இல்லையா?!!

  குறு பேட்டிகளுடன் பதிவை ரசிக்க முடிந்தது.//

  நல்லவேளையாக எதிர்ப்பு இல்லை. மலர்கண்காட்சி பதிவொன்றில் பெங்களூருவைக் காட்டியிருந்தேன். நன்றி ஸ்ரீராம்:)!

  பதிலளிநீக்கு
 21. ஹேமா said...
  //புத்தகங்களுக்கு நடுவில்....கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 22. அமைதிச்சாரல் said...
  //நல்ல பகிர்வு..//

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 23. துளசி கோபால் said...
  //அருமை! பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 24. ஓசூர் ராஜன் said...
  //இப்படி பதிவு போட்டால் புத்தக கண்காட்சிக்கு போவது குறையும் போல தோணுது! இது என்ன சன் தொலைகாட்சியின் பட ப்ரமோஷன் போல புத்த காட்சி ப்ரமொஷனா?//

  ஒரு பத்திரிகையாளாராக உங்கள் பார்வையைப் பதிந்துள்ளீர்கள். இதனால் குறையுமா கூடுமா என்பது தெரியவில்லை. பதிவில் சொல்லியிருப்பது போல ஒரு தகவலாகவே தந்துள்ளேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 25. பதிப்பகத்தாரின் நேர்க்காணல்களுடன் நன்றாக கவர் செய்து இருக்கிங்க , புத்தக விழாவை, 2009 இல் பெங்களூர் புத்தக விழா(கண்க்காட்சி) போய்ப்பாத்தேன்னப்புறம் போவதில்லை அப்போ விட இப்போ ஸ்டால்கள் கம்மியாகிடுச்சா? தமிழ் நூல்கள் சரியா விற்பனை ஆவதில்லை அங்கே, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  இனிமே சென்னை விழாவைத்தான் போய் எட்டிப்பார்க்கனும்.

  என்னோட 2009 புத்தக விழா சுட்டி இங்கே:

  பெங்களூரு புத்தக விழா

  பதிலளிநீக்கு
 26. புத்தகக் கண்காட்சி கண்டுகொண்டோம்.

  பதிலளிநீக்கு
 27. பாச மலர் / Paasa Malar said...
  //பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி//

  வருகைக்கு நன்றி மலர்.

  பதிலளிநீக்கு
 28. வவ்வால் said...
  //பதிப்பகத்தாரின் நேர்க்காணல்களுடன் நன்றாக கவர் செய்து இருக்கிங்க , புத்தக விழாவை, 2009 இல் பெங்களூர் புத்தக விழா(கண்க்காட்சி) போய்ப்பாத்தேன்னப்புறம் போவதில்லை அப்போ விட இப்போ ஸ்டால்கள் கம்மியாகிடுச்சா? //

  பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்டால்கள் போக இன்னும் ஒரு நான்கு இருந்தன. முந்தைய வருடங்களை விடக் குறைவே. மேலும் இப்போது பல பதிப்பகங்களைப் பற்றியும், சென்னை புத்தக விழா போன்றவற்றின் பகிர்வுகளையும் இணையம் மூலம் அறிய வருவதால் இங்கு பலர் வருவதில்லை என்பதைக் கணிக்கவும் முடிகிறது.

  உங்கள் பதிவும் பார்த்தேன்:)!

  பதிலளிநீக்கு
 29. மாதேவி said...
  //புத்தகக் கண்காட்சி கண்டுகொண்டோம்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 30. நல்ல விரிவான பதிவு. பதிப்பகத்தார் பலரை நேர்காணல் செய்திருக்கிறீர் வாழ்த்துகள்.
  சென்னையில் புத்தகக் காட்சி வரும் ஜனவரி 5 ம் தேதி அன்று தொடங்குகிறது.
  தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 31. நாங்களும் புத்ததக கண்காட்சியை சுற்றிப்பார்த்த உணர்வு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 32. @ -தோழன் மபா, தமிழன் வீதி,

  சென்னை கண்காட்சி பற்றி நானும் அறிய வந்தேன். தகவலுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 33. @ வை.கோபாலகிருஷ்ணன்,

  மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 34. ‘யாருமற்ற நிழல்’// எனது நூலகத்திலும் இருக்கிறது இது இப்பொழு பிக் ஷாப்பர் இல் உறங்கிக் கொண்டுள்ளது. அதில் என் வீடு என்ற சிறந்த கவிதை சுஜாதாவினால் கற்றதும் பெற்றதுமில் மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. சிறிய நூல் பொருளடக்கத்தில் பெரிது. பெங்களுரு காட்சிக்கு ஒரே முறை சென்றுள்ளேன் அது என்னை ஈர்க்கவே இல்லை பெரும்பாலும் ஆங்கில நூல்கள். தமிழ் பதிப்பகங்களும் சொல்லிகொள்ளும்படி கலக்சன் இருப்பதில்லை நாம் வாங்க நினைக்கிற நூல்களை சென்னை காட்சியில் சுமார் தொண்ணூறு விழுக்காடு வாங்க முடியும் ஆனால் இங்கு முடியாது ஆங்கில நூல் பிரியர்களுக்கான இடம்.

  பதிலளிநீக்கு
 35. @ செந்திலான்,

  நீங்கள் சொல்வது சரியே. ஆங்கில நூல்களுக்கே முக்கியத்துவம். தமிழில் வாங்க விரும்பும் அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அதனாலாயே கண்காட்சிக்கு காத்திராமல் தபாலில் தருவித்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin