அடுத்த
தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லப் போகிற உலகம் எப்படியானதாக இருக்கப்
போகிறது? இந்தக் கேள்விக்கான பதில் அச்சத்தையே தருகிறது. விளைவுகளை நமது
காலத்திலேயே சந்திக்க ஆரம்பித்து விட்டோம். தலையாய இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வு வேண்டித் தலைப்பைத் தந்திருக்கிறார் இம்மாத PiT போட்டிக்கான
நடுவர் நவ்ஃபல்.
தலைப்பு: சூழல் மாசடைதல்
சுத்தமான தண்ணீரும், காற்றும் எத்தனை அவசியம் என்பதை உணராமல் தன்னை ஐடி நகரமாக முன்னிலைப்படுத்துவதிலேயே அக்கறை காட்டி வந்த அரசு சென்ற வருடத்தில் பெங்களூரில் அகற்றப்படாமல் குன்றுகளாய்க் குவிந்த குப்பைப் பிரச்சனை சர்வதேசச் செய்தியில் அடிபட்டபோதுதான் அவசரமாக விழித்துக் கொண்டு ஆணைகள் பிறப்பித்தது. அது குறித்த என் பகிர்வு இங்கே: மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூர்? இதற்கான விடை இப்போது வரை எதிர்மறையாகதான் உள்ளது.
#1
அலை குளத்தில்
கோபுர நிழல்.
அருகே..
கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கும் ஜனத்தொகை தினம் வெளியேற்றும் 4000 டன்
குப்பையைக் கழித்துக் கொட்ட புதிய நிலக்குழிகளைதான் தேடுகிறார்களே தவிர
திட்டமிட்டபடி அவற்றை மாற்று சக்தியாக்கப் போதுமான ஆலைகளை அமைப்பதில்
நாட்டம் காட்டவில்லை. 15-20% குப்பைகள் மட்டுமே மாற்று
சக்தியாக்கப்படுவதாய் தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் நிலக்குழிகளைச்
சுற்றியிருக்கும் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதுதான் சென்ற வருடம்
பிரச்சனை வெடித்தது. மாநகராட்சி பொதுமக்கள் ஒத்துழைப்பதில்லை எனக் குற்றம்
சாட்டுகிறது. பதிலுக்கு மக்கள் போதுமான பணியாளர்களும் இல்லை, தேவையான
கருவிகளும் இல்லை என மாநகராட்சியைச் சாடுகிறது. பெரும் அளவில் குப்பைகளை
வெளியேற்றுகிறவர்கள் கூட அதற்கான ஆலைகள் நிறுவ அக்கறை எடுக்கவில்லை.
பெங்களூரின் முக்கிய இடமாகக் கருதப்படும் ஹல்சூர் ஏரியில் கிடைத்த சில காட்சிகள் (படங்கள் 1 முதல் 6 வரை):
தலைப்பு: சூழல் மாசடைதல்
சுத்தமான தண்ணீரும், காற்றும் எத்தனை அவசியம் என்பதை உணராமல் தன்னை ஐடி நகரமாக முன்னிலைப்படுத்துவதிலேயே அக்கறை காட்டி வந்த அரசு சென்ற வருடத்தில் பெங்களூரில் அகற்றப்படாமல் குன்றுகளாய்க் குவிந்த குப்பைப் பிரச்சனை சர்வதேசச் செய்தியில் அடிபட்டபோதுதான் அவசரமாக விழித்துக் கொண்டு ஆணைகள் பிறப்பித்தது. அது குறித்த என் பகிர்வு இங்கே: மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூர்? இதற்கான விடை இப்போது வரை எதிர்மறையாகதான் உள்ளது.
#1
அலை குளத்தில்
கோபுர நிழல்.
அருகே..
![]() |
| ”Cleanliness is next to Godliness” எனும் தலைப்போடு Bangalore AID கண்காட்சியில் இடம் பெற்ற படம். |
பெங்களூரின் முக்கிய இடமாகக் கருதப்படும் ஹல்சூர் ஏரியில் கிடைத்த சில காட்சிகள் (படங்கள் 1 முதல் 6 வரை):