செவ்வாய், 11 ஜூன், 2013

வல்லமை தாராயோ..


1. தானாக நிகழ்வதுதான். ஆனாலும் உருவாக்கலாம் எதிர்காலத்தை.

2. தற்காலிகமாகவே நிறுத்தி வைக்க முடியும் மற்றவர்களால் நம்மை. அதை நிரந்தரமாக்குவது நாமே.

3. எழுதி வைக்கப்படும் இலக்குகளுக்கு உண்டு வல்லமை.. விருப்பங்களைத் தேவைகளாய், கனவுகளைத் திட்டங்களாய், திட்டங்களை நிஜங்களாய் மாற்றிட.

4. சக்திக்கேற்ற கனவுகள், கனவுகளுக்கேற்ற சக்தி. எது வேண்டும் நமக்கு?

5. கரையில் நின்று சோதிக்காமல், அலைகளை எழுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளவோம், தண்ணீரை.

6. கடந்து வந்த பாதையில் இடறிய கற்களையும் தைத்த முட்களையும் கணக்குப் பண்ணிக் கொண்டிருந்தால், கட்டுக்குள் வராது நிகழ்காலம்.

7. ஒவ்வொரு பிரச்சனைக்கும் இருக்கிறது தீர்வு.. அதைச் சுற்றியோ அல்லது அதற்குள்ளேயோ.

8. நட்பு, உறவுகளுடனான வாக்குவாதங்களில் பலநேரம் தோல்வியை விடக் கசப்பானதாகி விடுகிறது வெற்றி.

9. நன்றாகச் செய்தவை நன்றாக இருப்பதில்லை சிறப்பானவை எதிர்பார்க்கப்படுகிற இடத்தில்.

10. தொடங்கினால்தான் வெற்றி.
***

[தொகுப்பது தொடர்கிறது.. இத்தோடு நூறாகிறது!]
--------------------------------------------------------------27 கருத்துகள்:

 1. பத்தும் முத்துக்கள்... முக்கியமாக 3, 7

  வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. எல்லாமே அருமை.

  3 . அதனால்தான் கனவு காணுங்கள் (உங்கள் இலக்குகளை) என்று கலாம் சொன்னாரோ!

  4. இரண்டுமேதான். இல்லை? உங்கள் பதில் என்ன?

  7,8, 9..... சிறப்பு.

  பதிலளிநீக்கு
 3. @ஸ்ரீராம்.,


  என் பதில்.. தலைப்பில்:)!

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 4. எல்லாமே நன்றாக இருக்கின்றன.. சிந்திக்கவும் வைக்கின்றன.
  7 வது ரொம்பவும் நிஜம். பல சமயங்களில் அனுபவித்து இருக்கிறேன்.

  கனவுகளை நிறைவேற்ற வேண்டிய வல்லமையைத் தான் வேண்ட
  வேண்டும்!

  பதிலளிநீக்கு
 5. தொகுப்பு அருமை.பாராட்டுக்கள். 100வது தொகுப்புக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே ஒண்ணுக்கொண்ணு போட்டி போடுது.. ஜூப்பரு.

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே அருமை! பயனுள்ளவை. எனக்கு 7வது மிகப் பிடித்தது மற்றவற்றை விட! தொடரட்டும் தொகுப்புச் சேவை!

  பதிலளிநீக்கு
 8. அனைத்தும் அருமை மேடம்.. நன்றி

  பதிலளிநீக்கு
 9. அனைத்துமே அருமை. அதிலும் பத்தாவது எனக்கானது என நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 10. முத்துக்கள் பத்தும் அருமை.
  7 வது மிக அருமை. பிரச்சனைக்கு தீர்வு அதற்குள் அல்லது அதை சுற்றியே அருமை.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin