திங்கள், 3 ஜூன், 2013

மேகங்களும் அலைகளும் - தாகூர் கவிதை (2)


ம்மா, மேகத்தில் வாழுகிறவர்கள்
என்னை அழைத்துச் சொன்னார்கள்-
”கண்விழிக்கும் பொழுதிலிருந்து
நாள் முடியும் வரையிலும் விளையாடுவோம்.
பொன் எழில் வைகறையோடும்,
வெள்ளி நிலவோடும் விளையாடுவோம்.”
“உங்களோடு நான் எப்படி வந்து சேர்ந்திட?” எனக் கேட்டேன்.

"பூமியின் முனைக்கு வந்திடு, உன் கைகளை வான் நோக்கி உயர்த்திடு,
மேகங்களுக்குள் நீ வந்து சேர்வாய்” என பதிலளித்தார்கள்.
“வீட்டில் எனக்காகக் காத்திருக்கும் என் அம்மாவை
எப்படி விட்டு வர இயலும்?” என்றேன்.
புன்னகைத்தபடியே மிதந்து சென்று விட்டார்கள்.

ஆனால் அதை விடவும் அருமையான விளையாட்டு
எனக்குத் தெரியும், அம்மா.
நான் மேகமாக இருக்கிறேன். நீ நிலவாக இரு.
என் இரு கரங்களாலும் உன்னை மூடிக் கொள்கிறேன்,
நம் வீட்டுக் கூரையே நீல வானமாகட்டும்.

லைகளில் வாழுகிறவர்கள்
என்னை அழைத்துச் சொன்னார்கள்-
“நாங்கள் காலையிலிருந்து இரவு வரையில் பாடுவோம்,
எந்த இடத்தைக் கடக்கிறோம் என்றறியாமல்
எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்போம்.
“உங்களோடு எப்படி இணைந்திட?” எனக் கேட்டேன்.

அவர்கள் சொன்னார்கள்,
“கரையின் முனைக்கு வந்து கண்களை இறுக மூடி நில்,
அழைத்து வரப்படுவாய் அலைகளின் மேலாக.”
“என் அம்மா எப்போதும் நான்
வீட்டிலிக்க வேண்டுமென விரும்புகையில்
எப்படி விட்டுச் வருவது?” என்றேன்.
புன்னகைத்தவர்கள் நடனமாடியபடிக் கடந்து சென்றார்கள்.

ஆனால் அதைவிடவும் நல்ல விளையாட்டு
எனக்குத் தெரியும்.
நான் அலைகளாகி விடுகிறேன்.
நீ அதிசயமான கரையாகி விடு.
நான் உருண்டு உருண்டு உருண்டு,
உன் மடிமேல் புரண்டு சிரிக்கிறேன்.
உலகில் இருக்கும் எவருக்கும் தெரியாது
நாம் இருவரும் எங்கே இருக்கிறோமென.

***

மூலம்:
Clouds and Waves
by
Rabindranath Tagore

படம் நன்றி: இணையம்

அதீதம், 2013 ஜூன் முதலாம் இதழுக்காகத் தமிழாக்கம் செய்த கவிதை.

28 கருத்துகள்:

 1. மேகமாகவும் அலைகளாகவும் மாற விரும்பிய தாகூரின் கவிதை மனதுக்கு ரம்மியமான ரசனையைக் கொடுத்தது. அருமை!

  பதிலளிநீக்கு
 2. தாகூரின் கவிதை அருமை.
  மேகங்களும், அலைகளும் கற்பனை மிக அருமை.
  மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. மூலமும் அதற்கு ஏற்ப தமிழாக்கமும் மிக அருமையாக உள்ளன.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. தாகூரின் கவிதை ரொம்பவே பிடிக்கும்,அழகாக மொழி பெயர்த்து இருக்கீங்க,பாராட்டுக்கள் அக்கா!!

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான மொழியாக்கம்.
  தாகூர் இப்படி தாய்-சேய் உறவுக் கவிதைகள் எழுதினாரென்று தெரியாது.

  பதிலளிநீக்கு
 6. நல்ல கற்பனை! சிறந்த மொழியாக்கம்!

  பதிலளிநீக்கு
 7. அருமை.. அருமை.. தாகூர் கற்பனையை என்னவென்று சொல்வது? உங்கள் தமிழ் மொழிபெயர்ப்பும் அருமை மேடம்..

  பதிலளிநீக்கு
 8. தாயும் சேயும் கவிதை அழகு :)

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 10. @ரூபக் ராம்,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ரம்மியமான கவிதை. உங்கள் மூலம் நானும் தாகூரின் கவிதைகளை படிக்கிறேன். மகிழ்ச்சி சகோ.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin