வியாழன், 3 செப்டம்பர், 2026

தொடப்படாத கோப்பைகள் - சொல்வனம் இதழ்: 373


1.
மாலை வெயில்
சிறுகல்லின் நிழல்
நீண்ட கதை.

2.
துருவேறிய வாயில்
பருவங்கள் மட்டுமே
விருந்தாளிகள்.

3.
கருப்புச் சிற்றெறும்பு
அதனினும் பெரிய விதை
ஒன்றாக நகர்கின்றன.

4. 
சலசலக்கும் காற்றில்
உதிரும் சருகு
மண்ணின் அழைப்பு.

5.
மழை இரவு 
நத்தை கடந்த பாதை 
வெள்ளிக் கோடு.

6.
கடுஞ்சொற்கள் ஓய்ந்த மேசை
தொடப்படாத கோப்பைகள்
குளிரும் தேநீர்.

7.
மாலை மைதானம்
கரையும் ஓசைகள்
தனித்த பந்து.

8.
விலகும் மேகங்கள்
கூவலை நிறுத்திய ஆந்தை
நிலவின் பதில்.

9.
வெற்றுக் கூடு
தென்றலில் ஆடுகிறது
தாலாட்டு கேட்கிறது.

10.
இலையுதிர்க் காற்று
ஊசலாடும் கடைசிப்பூ
முடியாத வாக்கியம்.
*
படங்கள்: AI உருவாக்கம்
*

நன்றி சொல்வனம்!
***

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin