புதன், 17 செப்டம்பர், 2025

கோபுர தரிசனம் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்

 #1

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 6_ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வைணவக் கோவில் பார்த்தசாரதி வடிவிலான விஷ்ணு பகவானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. ' பார்த்தசாரதி ' என்ற பெயருக்கு ' அர்ஜுனனின் தேரோட்டி' என்று பொருள்படும். 

மூலவரான பார்த்தசாரதி பெருமாள் சுமார் ஒன்பது அடி உயர சிலையாக மீசையுடன் தனித்துவமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

பாரதப் போருக்கு முன்னர் துரியோதனனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது இல்லை எனக் கொடுத்த வாக்கிற்கு ஏற்ப இவரது வலது கரத்தில் சக்கராயுதம் காணப்படவில்லை. சங்கு வலக்கரத்தில் உள்ளது. இன்னொரு கையில் சாட்டையுடனும், இடையில் வாளுடனும், முகத்தில் விழும்புண்களுடனும் தேரின் முன்பாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

#2

இக்கோயிலில் விஷ்ணு பகவானின் ஐந்து வடிவங்களில் உள்ளார். யோக நரசிம்மர் , ராமர் , கஜேந்திர வரதராஜர் , ரங்கநாதர் மற்றும் பார்த்தசாரதியாக கிருஷ்ணர். 

மேலும், வேதவல்லி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதர், நரசிம்மர், ஆண்டாள் , அனுமன் , ஆழ்வார்கள், ராமானுஜர் , சுவாமி மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாச்சாரியார் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. 

#3

ஐந்து புனிதக் கிணறுகளைக் கொண்ட ஒரு புனித தொட்டி ஒன்று இக்கோயிலில் உள்ளது. கைரவணி என அறியப்படும் இது இந்திர, சோம, அக்னி, மீன மற்றும் விஷ்ணு என்று பெயரிடப்பட்டுள்ளன.

பார்த்தசாரதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகளுக்குத் தனித்தனி நுழைவாயில்கள் மற்றும் கொடிமரங்கள் (த்வஜஸ்தம்பங்கள்) உள்ளன. 

#4


இந்த கோவில் சென்னையில் உள்ள பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக, திராவிட கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோபுரங்களும், மண்டபங்களும், தூண்களும் விரிவான வேலைப்பாடுகளுடன் மிளிர்கின்றன. 

#5

கோயில் வளாகத்தின் உள்ளே புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் வெளி மண்டபங்களில் சில படங்கள் எடுக்க முடிந்தது. வெளியில் வரும் போது இருட்டி விட்டதால் ராஜகோபுரத்தைத் தெளிவாக எடுக்க முடியவில்லை. ராஜ கோபுரத்திற்கு நேர் எதிரே பெரிய திருக்குளம் ஒன்றும் உள்ளது.

#5

*

[இணையத்தில் சேகரித்து எழுதப்பட்டத் தகவல்கள்.]

*

4 கருத்துகள்:

  1. புரட்டாசி முதல் நாள் அன்று பார்த்தசாரதி கோயில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. மீசைக்காரரின் தரிசனம் காலையில். கோமதி அக்கா சொல்லி இருப்பது போல புரட்டாசி முதல் நாளுக்கு பெருமாள் கோவில் கோபுர தரிசனம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin