முக்தி
அடர்ந்த மரத்திலிருந்து
உதிர்ந்த இலையொன்று
காற்றின் போக்கில் பயணித்து
நதிக்கரையோரத்து
புதர்ச் செடி மேல் அமர்கின்றது.
கீழிருக்கும் நீரில் மிதக்கின்றது
மூழ்கி விட முனைந்த இலை
சுட்டு விடுமோ சூரியன் என
சற்றே அஞ்சி, பின்
வீழ்ந்து மூழ்கவும் இல்லை
வளிதனில் மிதந்து
வேறிடம் தேடவும் இல்லை
காய்ந்து சருகாகிக் காத்திருக்கிறது
காலத்திடம் தனை ஒப்படைத்து.
**
[படம்: AI உருவாக்கம்]
நவீன விருட்சம் இதழ் 130_ல்..
மற்றும் அதன் மின்னிதழில்..
நன்றி நவீன விருட்சம்!
***
கவிதை நன்று. நான் சில வருடங்களுக்கு முன் இதே மாதிரி ஒன்று எழுதி இருந்தேன்!
பதிலளிநீக்குவாடியதால்
வாசம் தொலைத்த
மலரொன்று
விழுந்து கிடக்கிறது
வற்றிய குளத்தில்
ஏற்கெனவே
விழுந்து கிடந்த
மஞ்சள் இலைகள்
காற்றில் நகர்ந்து
ஆதுரத்துடன்
அணைத்து மூடுகின்றன
மலரை
நீங்கள் ஒரு பதிவில் வெளியிட்டிருந்த உங்கள் இரண்டு கவிதைகளுக்கு, அதே பொருளில் நான் எழுதிய இந்தக் கவிதையையும், இன்னொன்றையும் உங்கள் பதிவிலேயே 2016 ஆம் வருடம் சொல்லி இருக்கிறேன் என்று என் டிராஃப்ட் சொல்கிறது!!
தங்கள் கவிதை நன்று. காய்ந்த சருகைப் பற்றி 2017_ல் எழுதிய ‘முடிவிலி’ கவிதை 'இங்கே' உள்ளது. மேலும் இரு கவிதைகளுடன் வெளியானது. இதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடமும் படத்திற்கான கவிதையும் நன்று. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு