#1
முன்னர் எவ்வாறு இருந்ததோ
அல்லது
நீங்கள் எவ்வண்ணம் விரும்புகிறீர்களோ
அவ்வாறன்றி
நிசர்சனத்தை
உள்ளது உள்ளவாறே எதிர்கொள்ளுங்கள்.
_ Jack Welch
#2
அதன் ஒரே சக்தியை அப்புறப்படுத்தி விடுங்கள்:
அதன் மீதான உங்கள் கவனம்.”
__ James Duigan
#3
உங்கள் இலக்கை அபத்தமான உயரத்தில் வைத்து
அது தோல்வியைத் தழுவுமானால்,
மற்ற அத்தனை பேரின் வெற்றிக்கும் முன்னே
தோற்றுப் போவீர்கள்.
#4
நான் புத்திசாலி என்பது எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.
_ Socrates
#5
“எந்த யோகாசனத்தை நீங்கள் கடினமெனத் தவிர்க்க நினைக்கிறீர்களோ,
அதுவே உங்களுக்கு மிக அத்தியாவசியமானது.”
#6
“உங்களுக்கான பாடம் நிமிர்ந்து நிற்பது,
நிமிர்த்திப் பிடிக்கப்பட்டிருப்பது அன்று.”
_ Marcus Aurelius
#7
“என்னிடம் என்ன இருக்கிறது எனக் கேட்காதீர்கள்,
நான் யார் என்பதைக் கேளுங்கள்.”
_ Heinrich Heine
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
இன்றைய படங்களை வெகுவாக ரசித்தேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது படத்தின் செய்தி ஏதோ ஒரு வார்த்தை அல்லது வரி விட்டுப்போனது போல இருக்கிறது.
4 மிக அருமை. எனக்கானது!
மகிழ்ச்சி.
நீக்குபுரியும்படியாக இல்லையோ? என் வரையில் சரியாகவே தோன்றுகிறது.
4 :)).
நன்றி ஸ்ரீராம்.
அனைத்து பூனையார் படங்களும் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.நம் நேரம் வரும் வரை காத்து இருக்க வேண்டும் தான்.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு#2 & #8, கவனத்தை விலக்குவது, காத்திருப்பது சிறந்த ஆலோசனை, ஆனால் எளிதாகக் கைகூடுவதில்லை:).
பதிலளிநீக்குஆம், இரண்டும் சிரமமானவை :).
நீக்குநன்றி.