#1
“சக்தி என்பது
பிழைப்புக்கானப் போராட்டத்திலிருந்து
நாம் பெறுவது.”
#2
“பெண் என்பவள் ஒரு முழு வட்டம்.
அவளுக்குள் இருக்கின்றது
உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் மற்றும்
உருமாற்றுவதற்குமான சக்தி.”
_ Diane Mariechild
#3
“உங்கள் அத்தனை நினைவுகளையும் பாதுகாத்திடுங்கள்,
_ Bob Dylan
#4
“தலை நிமிர்ந்து நிற்க,
பிரார்த்தனையின் போது
தலை வணங்குங்கள்.”
_ Lori Wilhite
#5
“சில சமயங்களில் வாழ்வின் சிறிய விஷயங்கள்
அதிக அர்த்தமுள்ளதாகின்றன.”
_ Ellen Hopkins
#6
“நேசத்துக்குரியவர்கள் நினைவாகிப் போகும் போது,
அந்த நினைவுகள் பொக்கிஷம் ஆகின்றன.”
#7
“வாழ்வின் சின்னச் சின்ன அற்புதங்களைத்
தேடிக் கண்டடையுங்கள்.”
#8
“உலகம் ஒரு தெய்வீகக் கனவு,
அதனிலிருந்து நாம் விழித்து எழுந்து சந்திக்கிறோம்
அன்றாட சிறப்புகளையும் நிதர்சனங்களையும்.”
_ Ralph Waldo Emerson
#9
“சொல்லும் உண்மை
பேசும் பல கன பரிமாணங்களை.”
பொன்மொழிகள் சிந்திக்க வைக்கின்றன. படங்கள் ரசிக்க வைக்கின்றன. முதல் படத்திலிருப்பது என்ன மலர்?
பதிலளிநீக்குகோழிக் கொண்டைப் பூ. Cock's comb. நன்றி ஸ்ரீராம்.
நீக்குபூக்கள் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
பதிலளிநீக்குநேசிப்பவர் நினைவில் என்றானபின் நினைவுகள் பொக்கிஷம் தான்.
ஆம். நன்றி கோமதிம்மா.
நீக்கு# பொன்மொழிகள் 3, 5, 6 & 7 இடையில் ஒரு மெல்லிய தொடர்பு இருக்கிறதோ?
பதிலளிநீக்குவாழ்வின் சிறிய அர்த்தமுள்ள நிகழ்வுகளின் அனுபவங்கள் பொன்மொழிகளது கருத்துக்களோடு இசைந்து செல்லும் போது அதன் பொருள் மிக நெருக்கமாக உணரப்படுகிறது.
சின்ன வயதில் நிகழ்ந்த அற்புதங்களான பால்ய கால குறும்புகள், பள்ளிப் பருவ இனிய நிகழ்வுகளைப் போல [வா முருகா வா! - நாளை நமதே] ):.
அது போல சில இனிதான பயணங்கள், ஆழ்ந்த நட்பு, அன்பான உறவுகள், கடித பரிமாற்றங்கள், நெஞ்சம் நிறைந்த நிகழ்வுகள் போன்ற இனிதான சிறிய சிறிய அர்த்தம் நிறைந்த சம்பவங்களால் நினைவு அடுக்குகள் நிறையும் போது அவை அனைத்தும் பொக்கிஷம் தான்:).
சில கசப்பான அனுபவங்களும் கூட படிப்பினையாக மாறும் போது மிகச் சிறந்த பொக்கிஷம் எனது தோன்றுகிறது:).
3,5,6,7 இருக்கலாம். பொதுவாகவே வாழ்வியல் குறித்த எவற்றையும் சிந்தித்தால் தொடர்பு படுத்தி விட இயலும்.
நீக்குஎனது பள்ளிப் பருவ அனுபங்கள் குறித்த பதிவிலிருந்து குறிப்பிட்டிருப்பது வியக்க வைக்கிறது.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி.