ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

வாழ்வின் எல்லை

  #1

“உங்கள் குரலைக் கண்டடைய ஒரே வழி, 
நீங்கள் அதனை உபயோகிப்பதே.”
_ Jen Mueller


#2
“நீங்கள் எங்குவரை சென்றாலும், 
என்னவெல்லாம் செய்தாலும், 
உங்கள் மொத்த வாழ்க்கையையும் 
உங்கள் மனதின் எல்லைக்குள்ளேயே வாழ்கிறீர்கள்!”
_ Terry Josephson

#3
“பேரார்வத்தை உருவாக்குகிறது, 
எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை.” 
_  Bill Hybels


#4
“நீங்கள் நம்புவதை விடவும் நீங்கள் தைரியசாலி,
உங்கள் தோற்றத்தையும் மீறிய பலசாலி, மற்றும்
நீங்கள் நினைப்பதை விடவும் சாமர்த்தியசாலி.”
_ A.A. Mine 



#5
“கடினமாகத்தான் இருக்கப் போகிறது, 
ஆனால் கடினம் என்பதற்கு 
இயலாது என்பது அர்த்தமன்று.”


#6
“வெகு சுலபம். 
உனக்கு வேண்டுமா, செல், 
சென்றடைந்திடு.”

#7 
“உண்மையான நட்பென்பது 
இரு நண்பர்கள் எதிரெதிர் திசைகளில் நடந்தாலும், 
ஒருவருக்காக ஒருவர் எப்போதும் இருப்பது.”

#8
“பிரச்சனைக்குத் தீர்வு காணுங்கள், 
அல்லது விட்டு வெளியில் வாருங்கள். 
அதனுடனேயே வாழாதீர்கள்.”
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 195
பறவை பார்ப்போம்.. - பாகம்: 113

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. கூடுதல் படங்கள்.  கூடுதல் வரிகள்.  ரசிக்க வைத்தன.  நம்பிக்கைதான், பாஸிட்டிவ்தான் என்றாலும் நான்காவது புன்னகைக்க வைத்தது!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம். கூடுதல் படங்கள் என்பதையும் அவதானித்திருக்கிறீர்கள்:).

      நீக்கு
  2. அனைத்துன்பறவைகளும் அவை சொல்லும் வாழ்வியல் உண்மைகளும் அருமை. கருப்பு, வெள்ளை படங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. கருப்பு வெள்ளையிலும் பறவைகள் அழகாக உள்ளன என்பதால் இந்த முயற்சி :). நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  4. பறவைகளின் படங்களும் அதற்கான வாசகங்களும் ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin