பெங்களூர் அரண்மனை:
#1
இந்த அரண்மனை பெங்களூரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இதன் அருகாமையில் பல ஆண்டுகள் வசித்தபோதும் அப்போது ஏனோ செல்ல வாய்க்கவில்லை. சமீபத்தில் இதைப் பார்ப்பதற்காகவே ஒரு வாரநாளில் சென்று வந்தோம்.
இங்கிலாந்தில் உள்ள வின்ட்ஸர் கேஸில் என்னும் அரண்மனையை முன் மாதிரியாய் கொண்டு கட்டப்பட்டது. 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுற்றிலும் மரங்கள், தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, கோபுரங்கள் என கலைநயத்துடன் டியூடர் பாணிக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 454 ஏக்கர் கொண்டுள்ளது.
#2
தரைத் தளத்தில் மிகப் பெரிய கேளிக்கை அரங்கு உள்ளது. முதல் தளத்தில் தர்பார் அறை என்னும் அரசவை உள்ளது. தர்பார் அறையின் இருபுறங்களிலும் ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. இந்த அறையில்தான் ராஜாங்க அலுவல்கள் எல்லாம் நடக்கும். நாற்காலிகள், மேஜைகள் எல்லாம் சீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. உட்புறங்கள் நேர்த்தியான மரச் செதுக்கல்களையும், மலர் உருவங்களையும், அழகிய தூண்களையும் கூரை ஓவியங்களையும் கொண்டுள்ளன.
கீழ் தளத்து கேளிக்கை அரங்கு:
#5
#6சந்திரமுகி உட்படப் பல திரைப்படங்கள் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதல் தளத்திற்கு இட்டுச் செல்லும், கீழ் வரும் படிக்கட்டைப் பார்த்ததும் நினைவுக்கு வரக்கூடும், ஆளரவமற்ற அரண்மனையில் தனித்து விடப்பட்ட வடிவேலு தன்னுடன் வந்த ரஜினிகாந்தைக் காணாமல் தேடி அழுது புலம்பும் காட்சி:)!
#8
இந்த அரண்மனை கட்டிடத்தின் கட்டுமானம் ஏப்ரல் 1874_இல் தொடங்கப்பட்டு 1878_ஆம் ஆண்டு நிறைவடைந்தது. பெங்களூர் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியின் முதன் முதல்வராக இருந்த ரெவ். காரெட் என்பவரால் கட்டப்பட்டது.
லால்பாக் தோட்டத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த கண்காளிப்பாளர் ஜான் கேமரூன் இந்த அரண்மனையையும் இயற்கையோடு ஒன்றியதாக உருவாக்கினார். பல சேர்த்தல்கள் மற்றும் மேம்படுத்தல்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.
இச்சொத்துக்கான உரிமை தொடர்பாகப் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. மாநில அரசு கையகப்படுத்த முயன்று அது தோல்வியில் முடிந்தது. தற்சமயம் ராஜா ஸ்ரீகண்ட தத்தா நரசிம்ம உடையாரின் மகளது வசம் அரண்மனை உள்ளது.
#15
தகவல்கள்: விக்கிப்பீடியா உட்பட இணையத்தில் சேகரித்தவை.
***
எப்படி எல்லாம் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.... ஆனால் இப்போது அரசியல்வாதிகள் ஆடம்பரத்தில் அவர்களையும் மிஞ்சி விட்டார்கள்!
பதிலளிநீக்குஆம். நன்றி ஸ்ரீராம்.
நீக்குபெங்களூர் அரண்மனை பிரமாண்டம் .அதன் சரித்திரம் அறிந்தோம்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு