#1
“வாழ்க்கையைப் பற்றி எழுதுவதற்கு முன்
முதலில் அதை நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.”
_ Ernest Hemingway
#2
“எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருக்கையில்
நாம் வளர்வதில்லை,
சவால்களை எதிர்கொள்ளுகையில் வளர்கிறோம்.”
#3
எப்படியும் ஒரு வழியைக் கண்டறிவீர்கள்.
இல்லையேல்,
சாக்குப் போக்கைக் கண்டு பிடிப்பீர்கள்.”
_ Ryan Blair
#4
“நம்பிக்கை பலத்தைப் பெருக்குகிறது.”
#5
“இது அனைத்தும் முடிந்ததும்
நீங்கள் இன்னும் உறுதி வாய்ந்தவராக வெளிவருவீர்கள்.”
#6
“தூய அன்பென்பது
பிரதிபலனை எதிர்பாராது கொடுக்க விழைவது.”
_ Peace Pilgrim
#7
“தலைசிறந்த படைப்பு
எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருப்பதில்லை.”
_ Albert Camus
#8
“நாளைய மலர்கள் யாவும்
இன்றைய விதைகளில் உள்ளன.”
மிக அழகான பூக்கள். முதலில் காட்டி இருக்கும் பூ இங்கும் இருக்கு, நானும் பதிவு போட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅப்பதிவை நான் பார்த்திருக்கக் கூடும். ஆயினும் இணைப்பு இருந்தால் கொடுங்கள். Flame vine கொடி பற்றிய விரிவான கட்டுரை தினமலரில் வந்திருந்தது. நீங்கள் பத்திரிகையிலேயே படித்ததாகவும் சொல்லியுள்ளீர்கள் கீழ் வரும் பதிவில்:
நீக்குhttps://tamilamudam.blogspot.com/2017/02/8.html
வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குநம்பிக்கையூட்டும் வரிகள். அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகிய மலர்களின் படங்களும் தன்னம்பிக்கை தரும் வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குஒரு சில வரிகளில் வெளிப்படும் வாழ்வியல் உண்மைகளை உணரும் தருணத்தில் எழும் புன்னகை, அதைத் தொடர்ந்து மலரும் சிந்தனை ஓட்டம்.., அழகான தருணங்கள்.
பதிலளிநீக்கு#7 அர்ப்பணிப்போடு தீவிரமாக தேடுபவர்களுக்கே, எந்த ஒரு சிறந்த படைப்பும் தம்மை வெளிப்படுத்துகிறது எனவும் தோன்றுகிறது.
#3 உண்மை :)
நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
பதிலளிநீக்குபணிகள் மற்றும் பயணங்கள் உடன் சோம்பலும் இணைந்து, தொடர்ந்து பதிவுகளை வாசித்தாலும் கருத்திடுவதில் சுணக்கம்:)
நீக்குபதிவுகள், ஒளிப்படங்கள், எனக் கவனத்துடன் பதிவேற்றுவது அதில் ஆழமான ஈடுபாடு, பணியில் உறுதி, அதை மேன்மையாக மதித்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கே சாத்தியம். அது உங்களது இயல்பான பண்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி :).
நீக்கு