ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் உரிமைகள், பெண் கல்வி, பாலின சமத்துவம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் பயன்பட்டு வருகிறது. 2024_ஆம் ஆண்டின் மகளிர் தினக் கருப்பொருளாக பெண்களில் முதலீடு: முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல். இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது: ‘பெண்களிடத்தில் முதலீடு - முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துதல்’! பெண்களின் வளர்ச்சி மற்றும் அவர்களது தலைமைத்துவதிற்கு முக்கியம் அளித்தல் இக்கருப்பொருளின் நோக்கமாக உள்ளது.
#1
“பெண்களாக நாம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு
எல்லையே இல்லை.”
__ Michelle Obama
#2
#3
“நாங்கள் இப்போது என்னவாக இருக்கிறோமோ,
இனி எவ்வாறாக முன்னேறுகிறோமோ, அத்தனைக்கும் எங்கள் தேவதையான அம்மாவுக்கே
கடமைப் பட்டிருக்கிறோம்!”
முதல் படத்தில் இருப்பவர் உங்கள் சகோதரியா, திருமதி ஷைலஜா அவர்களா? படங்களும் வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்குமுதல் படத்தில் இருப்பவர் என் அத்தை மகள். நன்றி ஸ்ரீராம் :)!
நீக்குஅனைத்து படங்களும் அருமை.மகளிர் தினத்தில் போட்ட பதிவை பார்க்கவே இல்லை, மன்னிக்கவும். சிந்தனைகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி கோமதிம்மா. தவற விடுவது எல்லோருக்கும் நிகழ்வதே. பரவாயில்லை.
நீக்குபடங்களும் சிந்தனைகளும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு