ஞாயிறு, 7 ஜனவரி, 2024

எதற்காகக் காத்திருக்கிறாய்?”

 #1

“ஒவ்வொரு நொடியும் அளவற்ற மதிப்பு வாய்ந்தது.”

[தேன் சிட்டு (ஆண்)]
#2
உன் கனவு உனக்காகக் காத்திருக்கிறது. 
நீ எதற்காகக் காத்திருக்கிறாய்?”
[இந்திய சாம்பல் இருவாச்சி]
#3
எதைச் செய்ய அதிகம் அச்சப்படுகிறோமோ 
அதுவே நாம் அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகிறது.
_ Timothy Ferriss

[செந்தூர்ப் பைங்கிளி]
#4
“உனக்கு எல்லாம் தெரியும் என நீ நினைத்தால்; 
உனக்கு எதுவும் தெரியாது. 
உனக்கு எதுவும் தெரியாது என நீ நினைத்தால்; 
உனக்கு சில விஷயங்களாவது தெரியும்.”
_ Jayce O'Neal
[மணிப்புறா]

#5
உன்னை நீயே மறைத்துக் கொள்ளாதே. 
எழுந்து நில், தலை நிமிர்த்தி, உன்னிடமிருப்பதைக் காட்டு.”
_Joe Mari Fadrigalan
[வெண்கன்னக் குக்குறுவான்]
#6
 ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் இருப்பது போல, 
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முடிவு இருக்கும்.”
_ Greg Plitt

[தேன் சிட்டு (பெண்)]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 189
பறவை பார்ப்போம்.. - பாகம்: 110
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

4 கருத்துகள்:

  1. முதல் படம் - மலரைப்  பார்க்கிறதா,மழை வருமா என்று பார்க்கிறதா, மனதிலுள்ள கவலையை யோசிக்கிறதா?!

    இரண்டாவது படம் - பார்க் பென்ச்சில் அமர்ந்திருக்கும் வயதான கிழவர் போல கழுத்தை உள்புதைத்து அமர்ந்து யோசனையில் இருக்கிறதோ...

    மூன்றாவது படத்தின் வரி எரிச்சலுடன் அல்லது வெறுப்புடன் ஆமாம் என்று நினைக்க வைத்தது.  அச்சம் அல்ல, அலர்ஜி.

    வழக்கம்போல படங்களும் வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதான கிழவர் போல அமர்ந்திருப்பது இளம் இருவாச்சிக் குஞ்சு :).

      தங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வெகு நாட்களாக கிளியை படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து நேற்று நிறைவேறியது. பக்கத்தில் எடுக்க முடியவில்லை, எல்லாம் தூரமாக தான்.
    செந்தூர் பைங்கிளி அழகு.

    அனைத்து படங்களும் அருமை. தேன் சிட்டு முருங்கைப்பூ வாடி விட்டதை பற்றி யோசிக்கிரது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எடுத்த படங்களைக் காணக் காத்திருக்கிறேன். நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin