ஞாயிறு, 27 மார்ச், 2022

சூரியோதயம்

 #1

“நன்றியுணர்வு  உதிக்கும் பொழுதில் 
போராட்டம் முடிவுக்கு வருகிறது.”
_Neale Donald Walsh


#2
"நம்பிக்கை என்பது சூரியன். 
அது ஒரு வெளிச்சம். ஒரு பேரார்வம். 
வாழ்க்கை மலர்வதற்கான அடிப்படை உந்து சக்தி. ”
_Daisaku Ikeda


#3
"ஒவ்வொரு கார்மேகத்திலும் பிரகாசமான ஒளிப்பொட்டொன்று இருக்கும்."
 _ Bruce Beresford

#4

"வீசும் காற்றை செவிமடு. 
உதிக்கும் கதிரவனைக் கவனி. 
_ Fleetwood Mac

#5
“எங்கிருந்தும் நம்மால் புதியதைத் தொடங்க முடியும் 
என்பதை 
நினைவூட்டுகிறது சூரியோதயம்.” 
_ Rupal Asodaria

#6
“சூரியோதயம் அல்லது நம்பிக்கையை 
தோற்கடித்த ஓர் இரவோ அல்லது பிரச்சனையோ 
இதுவரை கிடையாது.”
_ Bernard Williams

**

பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன் எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.
***

13 கருத்துகள்:

 1. சூர்யோதயப் படங்கள் பிரமகுடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீராம்.

   தட்டச்சுகையில் ஏற்பட்டத் தவறெனப் புரிகிறது.

   நீக்கு
  2. ஆம். மன்னிக்கவும். கவனிக்கவில்லை.


   /பிரமாதம்/ என்றிருக்க வேண்டும்.

   நீக்கு
 2. ஆஹா....இந்த சூரிய காட்சிகள் என்றும் எனக்கு மிக பிடித்தவை ...பல விதமாக வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் திரும்ப திரும்ப எடுக்க ஆசைப்படுபவை ...


  இங்கு நீங்கள் பகிர்ந்த காட்சிகள் அனைத்தும் மிக சிறப்பு ...வாசகங்கள் மிக அருமை ..

  பதிலளிநீக்கு
 3. வாவ்! சூப்பர். பிரமாதமாக இருக்கின்ற்ன. வாசகங்களும் சிறப்பு.

  நானும் இப்படி சூரிய உதயம், சந்திரன் என்று பிடிப்பதுண்டு. பிடித்தும் வைத்திருக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. படங்கள் மிக அழகாக இருக்கின்றன. அதனோடு கூட தமிழாக்கம் செய்யப்பட்ட வாசகங்களும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. சூரியோதயம் மிக அழகாய் இருக்கிறது.
  மிக அருமை.
  உதிக்கும் கதிரவனை கவனிப்பது இனிய பொழுது போக்கு பிடித்த செயல். நம்பிக்கையோடு கும்பிடுவேன்.
  இங்கு வந்து கதிரவன் உதிப்பதை பார்க்க முடியவில்லை. வீட்டின் அமைப்பு அப்படி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், வீட்டின் அமைப்பைப் பொருத்தே பார்க்க இயலும். இங்கே சூரியன் மறைவதை மொட்டை மாடிக்குச் சென்றால்தான் பார்க்க முடிகிறது.

   கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 6. சூரியோதயம் படங்கள் அனைத்தும் அழகு. தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்யப்பட்ட அனைத்து வாசகங்களும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேமிப்புm பகிர்வும்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin