#1
#2
பெங்களூரில் மிகப் பழமை வாய்ந்ததும் முக்கியமான பகுதியும் ஆகும் மல்லேஸ்வரம்.
#3 கோபுரமும் கொடி மரமும்...
இங்கே புராதான காலத்துக்குக் கோவில்களோடு புதிய பல கோவில்களும் எழுந்தபடியே உள்ளன. சம்பங்கி சாலையின் பின்புறம், கோவில் தெரு என்றே அழைக்கப்படும் 15ஆம் குறுக்குத் தெருவில் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட நந்தி தீர்த்த ஆலயம் குறித்து இங்கே பகிர்ந்திருந்தேன். அதே தெருவில் அதற்கு நேர் எதிரே உள்ளது காடு மல்லேஸ்வரர் ஆலயம்.
#4
சம்பங்கி சாலையிலிருந்தும் இதற்கு ஒரு நுழைவாயில் உண்டு.
# 5
வெகு காலம் இதுதான் பிரதான வாயில் என எண்ணியிருந்தேன். ஒரு நாள் தற்செயலாகக் கோவில் தெருவிலிருந்த கற்படிகள் வழியே குன்றின் மேல் ஏறிச் சென்ற போதே தெரிந்தது, அதுதான் பிரதான வாயில் என்று. அப்போது படிகளுக்கு பக்கச் சுவர்களோ, வண்ணப்பூச்சுகளோ இருக்கவில்லை. இருமருங்கிலும் பாறையும் பள்ளமுமாக இருக்கும். இப்போதோ சோலைவனமாகக் காட்சி தருகிறது கோவில். சுத்தமான பராமரிப்பும்.
#7 ஏகாந்தமாய்..
#8 இறைவனை நாடி..
சுமார் நாற்பது படிகள் உள்ளன. மேலேறிச் சென்றதும் நம்மை வரவேற்கும் பாரிஜாத மலர்ச் செடிகள்:
#9
சமீப வருடங்களில்தான் படிகளை அழகுபடுத்தி, சாலையிலிருந்தே முகப்பு வாயில் மற்றும் கோபுரம் ஆகியவற்றைக் கட்டியிருக்கிறார்கள்.
# 10
#11
#12
இது பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ரபதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லேயால் திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி எழுப்பப்பட்ட கோவில். இங்கே சிவ பெருமானை மல்லிகார்ஜுன் ஆக வழிபடுகிறார்கள். நந்தி தீர்த்த கோவிலும் இந்த சமயத்திலேயே கட்டப்பட்டு பூமிக்குள் சென்றிருக்க வேண்டும் என்பதும் ஒரு அனுமானம்.
#13 யாழி
#14 கொடிமரத்தின் நான்கு புறங்களிலும்..
இங்கே சுயம்பு வடிவில் இருக்கும் மல்லேஸ்வரரின் பெயராலேயே அப்பகுதிக்கும் அப்பெயர் வந்தது. ‘காடு’ எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப் படுகிறது.
#15 சுயம்பு லிங்கமாக மல்லிகார்ஜூன்
#16 தாயார் சன்னதி
#17 மல்லேஸ்வரரும் உற்சவ மூர்த்திகளும்
#18
#19 பிள்ளையார்
#20 முருகர்
#21 பிரகாரத்தில்..
மேலும் பிரகாரத்தில் அனுமார், தக்ஷணாமூர்த்தி ஆகியோருக்கும் சன்னதிகள் இருந்தன.
#22 ஆ..லயமணி
காடாக இருந்த இடம் என்பதன் அடையாளமாக இப்போதும் கூட படிகளுக்கு இடப் பக்கம் சோலை வனமாகவே உள்ளது.
#23
அதுமட்டுமின்றி நாக தேவர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கும் இடமாகவும் உள்ளது.
#24
#25
#26
# 27
இந்தச் சிலையின் அடிப்பாகத்தில் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் சிலையொன்று இருப்பது, உற்றுக் கவனித்தால் தெரியும்.
நூற்றுக்கும் அதிகமாக இருக்கலாம் சிலைகள்.
#28
கருங்கல்லினால் ஆன நந்தி தேவர் சிலைகளும் சிவலிங்கங்களும் ஆங்காங்கே உள்ளன.
#29
#30 சிவனைப் பார்த்து..
#32 தும்பிக்கையும்...
மரத்தடிகளில் இஷ்ட தெய்வ வழிபாடுகளையும் காணலாம்:
#33 எண்ணம் கை கூட..
#34 அன்பு வென்றிட..
#35 அன்பே சிவம்
ஒவ்வொரு மகாசிவராத்திரியின் போதும் இங்கே ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள்.
***
#2
பெங்களூரில் மிகப் பழமை வாய்ந்ததும் முக்கியமான பகுதியும் ஆகும் மல்லேஸ்வரம்.
#3 கோபுரமும் கொடி மரமும்...
இங்கே புராதான காலத்துக்குக் கோவில்களோடு புதிய பல கோவில்களும் எழுந்தபடியே உள்ளன. சம்பங்கி சாலையின் பின்புறம், கோவில் தெரு என்றே அழைக்கப்படும் 15ஆம் குறுக்குத் தெருவில் பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட நந்தி தீர்த்த ஆலயம் குறித்து இங்கே பகிர்ந்திருந்தேன். அதே தெருவில் அதற்கு நேர் எதிரே உள்ளது காடு மல்லேஸ்வரர் ஆலயம்.
#4
சம்பங்கி சாலையிலிருந்தும் இதற்கு ஒரு நுழைவாயில் உண்டு.
# 5
வெகு காலம் இதுதான் பிரதான வாயில் என எண்ணியிருந்தேன். ஒரு நாள் தற்செயலாகக் கோவில் தெருவிலிருந்த கற்படிகள் வழியே குன்றின் மேல் ஏறிச் சென்ற போதே தெரிந்தது, அதுதான் பிரதான வாயில் என்று. அப்போது படிகளுக்கு பக்கச் சுவர்களோ, வண்ணப்பூச்சுகளோ இருக்கவில்லை. இருமருங்கிலும் பாறையும் பள்ளமுமாக இருக்கும். இப்போதோ சோலைவனமாகக் காட்சி தருகிறது கோவில். சுத்தமான பராமரிப்பும்.
#6 எழில் வனத்தில்..
#7 ஏகாந்தமாய்..
சுமார் நாற்பது படிகள் உள்ளன. மேலேறிச் சென்றதும் நம்மை வரவேற்கும் பாரிஜாத மலர்ச் செடிகள்:
#9
சமீப வருடங்களில்தான் படிகளை அழகுபடுத்தி, சாலையிலிருந்தே முகப்பு வாயில் மற்றும் கோபுரம் ஆகியவற்றைக் கட்டியிருக்கிறார்கள்.
# 10
#11
#12
இது பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ரபதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லேயால் திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி எழுப்பப்பட்ட கோவில். இங்கே சிவ பெருமானை மல்லிகார்ஜுன் ஆக வழிபடுகிறார்கள். நந்தி தீர்த்த கோவிலும் இந்த சமயத்திலேயே கட்டப்பட்டு பூமிக்குள் சென்றிருக்க வேண்டும் என்பதும் ஒரு அனுமானம்.
#13 யாழி
#14 கொடிமரத்தின் நான்கு புறங்களிலும்..
அம்மை அப்பன், விநாயகர், முருகர் மற்றும் சூலாயுதம்
இங்கே சுயம்பு வடிவில் இருக்கும் மல்லேஸ்வரரின் பெயராலேயே அப்பகுதிக்கும் அப்பெயர் வந்தது. ‘காடு’ எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப் படுகிறது.
#15 சுயம்பு லிங்கமாக மல்லிகார்ஜூன்
#16 தாயார் சன்னதி
#17 மல்லேஸ்வரரும் உற்சவ மூர்த்திகளும்
#18
’ஈசனுக்கு எதிர் அமர்ந்து
இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்..’
#19 பிள்ளையார்
#20 முருகர்
#21 பிரகாரத்தில்..
‘செந்தூரப் பொட்டு வைத்து சிலிர்த்திருக்கும் நந்தியிது..
சோலையின் வண்ணப்பூவைச் சூடி நிற்கும் நந்தியிது..’
மேலும் பிரகாரத்தில் அனுமார், தக்ஷணாமூர்த்தி ஆகியோருக்கும் சன்னதிகள் இருந்தன.
#22 ஆ..லயமணி
#23
அதுமட்டுமின்றி நாக தேவர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கும் இடமாகவும் உள்ளது.
#24
#25
#26
# 27
இந்தச் சிலையின் அடிப்பாகத்தில் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் சிலையொன்று இருப்பது, உற்றுக் கவனித்தால் தெரியும்.
நூற்றுக்கும் அதிகமாக இருக்கலாம் சிலைகள்.
#28
கருங்கல்லினால் ஆன நந்தி தேவர் சிலைகளும் சிவலிங்கங்களும் ஆங்காங்கே உள்ளன.
#29
#30 சிவனைப் பார்த்து..
கோவில் மரம்
#31 நம்பிக்கையும்....
#32 தும்பிக்கையும்...
மரத்தடிகளில் இஷ்ட தெய்வ வழிபாடுகளையும் காணலாம்:
#33 எண்ணம் கை கூட..
#34 அன்பு வென்றிட..
#35 அன்பே சிவம்
***
அற்புதமான வர்ணனை & பதிவு
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//ஆ....லயமணி!//
பதிலளிநீக்கு:))
படங்கள் அழகு. கோவிலுக்குள் சுவாமியை (மூலவர்) படம் எடுக்க விடுகிறார்களா என்ன! என்ன மரம் அது?
இலைகளை வைத்துப் பார்க்கையில் அரச மரம் என எண்ணத் தோன்றியது. உறுதியாகத் தெரியவில்லை. சில கோவில்களில் கேமராவுக்கே அனுமதி இருக்காது. இங்கே மூன்று கோவில்களில் (நந்தீஸ்வரர், தேவி கங்கம்மா) மூலவர் உட்பட படங்கள் எடுக்க எந்தத் தடையும் இருக்கவில்லை. ஆ..லய மணிக்கு நீ..ளமாக ஒரு கயிறு தந்திருக்கலாம்தானே:)! நன்றி ஸ்ரீராம்.
நீக்குமுழுக் கோவிலையும் தரிசித்த திருப்தி
பதிலளிநீக்குஅருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி sir.
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
கருப்பு வெள்ளையில் அதிக அழகு
நன்றி சகோதரியாரே
மிக்க நன்றி.
நீக்குஉங்க படம் வழியாக காண்பது ....கண்களுக்கு விருந்து ....
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்குஇன்ன கோவில் என்று தெரியாமலேயே போய் வந்த நினைவு
பதிலளிநீக்குஇப்பகுதியின் கோவில்களுக்குச் சென்றிருப்பின் இதைத் தவறவிட்டிருக்க வாய்ப்பில்லைதான். நன்றி GMB sir.
நீக்குExcellent. Ramalakshmi.புதுத்தகவல்களுடன் சரியாக டிஸ்க்ரிப்ஷனுடன் படங்கள் , ஆலயத்தை தரிசித்து வந்த உணர்வு.
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும் :)!
நீக்குகண்ல ஒத்திக்கலாம் போலிருக்கு. அருமை. அழகு.
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
நீக்கு