செவ்வாய், 1 ஜனவரி, 2019

தூறல்: 34 - முத்துச்சரம்.. ஃப்ளிக்கர் பக்கம்.. ஆல்பம்.. (2018)

குறிப்பிடும் படியாக எதுவும் செய்துவிடவில்லை என்பது தெரிந்தாலும் செய்தவற்றைத் திரும்பிப் பார்க்கையில் பரவாயில்லை என ஒரு ஆறுதல் ஏற்படுகிறது. அதிலேயே நிறைவு கண்டு விட்டால் அப்படியே நின்று விடக் கூடிய அபாயமும் உள்ளது. இருந்தாலும் “திரும்பிப் பார்த்தல்” என்பது தொடர்ந்து செயலாற்ற ஒரு உந்துதலைத் தரும் அல்லவா?
முத்துச் சரத்தில்.. மாதம் சராசரியாக ஐந்து அல்லது ஆறு பதிவுகள்.
புகைப்படத் தொகுப்புகளாக தமிழாக்கத்துடன் வாழ்வியல் சிந்தனைகள் (24 பதிவுகள்); பறவை பார்ப்போம் கட்டுரைகள் (13 பதிவுகள்), இவ்விரண்டு தொகுப்புகளிலும் உள்ளடங்கிய ‘என் வீட்டுத் தோட்டத்தில்..’ (26 பதிவுகள்);

இலங்கை பயணத் தொடர் (9 பாகங்கள்):

கொல்கத்தா பயணத் தொடர் (6 பாகங்கள்):


பெங்களூர் பிரமிட் வேலி

ஆகியன குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை.

த்திரிகை படைப்புகளாக,

தினமலர் பட்டம் இதழில் காட்டு மைனா, காட்டுச் சிலம்பன், வரி வாலாட்டிக் குருவி மற்றும் குண்டுக் கரிச்சான் பற்றியத் தகவல் கட்டுரைகள், நான் எடுத்த படங்களுடன்..

டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பில் ஐந்து முறைகள் குறிப்பிட்டத் தலைப்புக்குத் தேர்வாகி வெளியான படங்கள்..
கலைமகள் பத்திரிகையில்.. இலங்கையின் கலாச்சார உடைகள் பற்றிய அட்டைப்படக் கட்டுரை..

கல்கி தீபாவளி மலரில்.. தொடர்ந்து எட்டாவது வருடமாக எனது ஒளிப்படம்.. கரையும் அலையும்..

கல்கி வார இதழில்.. எனது கவிதை.. யாரோடும் பேசாதவள்..

“வளரி” பெண் கவிஞர்கள் சிறப்பிதழில்.. எனது கவிதை.. கேட்காத பாடல்..
மற்றும் எனது தோழி எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்..

ப்ளிக்கர் தளத்தின் எனது பக்கத்தில் முக்கியமான மைல் கல்லை எட்டிய வருடம். 2008_ல் தொடங்கிய கணக்கில் சராசரியாக நாளுக்கொன்றென பதிந்த படங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்தது ஜூலை மாதத்தில். அது குறித்த எனது பகிர்வு இங்கே: 
அப்போது இருபத்தியொரு லட்சத்து நாற்பதாயிரத்தில் இருந்த பக்கப் பார்வைகள், மேலும் ஐந்து மாதங்களில் அதாவது இன்றைய தேதியில்  28,57,400 ++ எனத் தொடர்ந்து உயர்ந்தபடி (இந்தப் பதிவின் முதல் படம்) உற்சாகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தினசரி பதியும் படங்களுக்கு மட்டுமின்றி முந்தைய பதிவுகளுக்கான வருகையும் இதில் சேர்த்தி.

ந்த வருடம் ஃப்ளிக்கர் தளத்தில் எக்ஸ்ப்ளோர் (Explore) பக்கத்தில் தேர்வான படங்கள் மூன்று. முறையே பத்தாயிரம், பனிரெண்டாயிரம் பக்கப் பார்வைகளைப் பெற்ற விநாயகர், முருகர் படங்களை மேலிருக்கும் சுட்டியிலுள்ள பதிவில் பகிர்ந்திருந்தேன். மூன்றாவதாக எக்ஸ்ப்ளோரில் தேர்வாகி 5700 பக்கப் பார்வைகளைப் பெற்றிருந்த கருப்பு வெள்ளைப் படம்:

அறுபடை வீடு கொண்ட திருமுருகா.. 
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/45856736021/

புகைப்படங்களுக்கான அங்கீகாரமாக வல்லமை மின்னிதழில் இந்த வருடம் 186 மற்றும் 193_வது படக் கவிதைப் போட்டிக்களுக்கு எனது படங்கள் தேர்வாகியிருந்தன. மொத்தத்தில் வல்லமையில் எட்டாவது, ஒன்பதாவது முறைகளாகத் தேர்வாகியுள்ளன எனது படங்கள். வல்லமை ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி.

#
படக்கவிதைப் போட்டி 186:
#
படக்கவிதைப் போட்டி 193:
ந்திப்பு.. ஆல்பம்:
பெங்களூர் வந்திருந்த கவிஞர் திரு. கலாப்ரியா மற்றும் திருமதி. சரஸ்வதி அம்மா ஆகியோரை இரு தினங்களுக்கு முன்னர் அவர்களது மகளது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒளிப்படக் கலை, எழுத்து, கணினியின் சில பயன்பாடுகள் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி இருவருடனும் அளவளாவியதில் ஒன்றரை மணி நேரங்கள் போனது தெரியவில்லை. இனிய சந்திப்பு. மனதிற்கு மகிழ்ச்சி.
2015_ஆம் ஆண்டு கவிஞரின் பெங்களூர் வருகையின் போது கப்பன் பார்க்கில் நடைபெற்ற நண்பர் கூட்டம் குறித்த பகிர்வு இங்கே: உலகக் கவிதைகள் தினம் .


டத்துளி:
நகரமயமாதல்
எஞ்சி இருக்கும் பசுமையையேனும் பாதுகாப்போமா?

***
புத்தாண்டு தீர்மானங்கள் என எதையும் எனக்கு நானே 
வாக்குக் கொடுத்துக் கொள்ளாமல் செய்து முடித்து விட்டு 
இந்த வருட இறுதியில் திரும்பிப் பார்க்க உள்ளேன் :))!

இந்தப் புத்தாண்டு
நண்பர்கள் அனைவருக்கும் 
ஒளிமயமாக அமைந்திட
என் நல்வாழ்த்துகள்!

***

20 கருத்துகள்:

  1. சாதனைகள் பல படைத்து இருக்கிறீர்கள்.
    இந்த ஆண்டும் நிறைய செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தொடரட்டும் பல ஆயிரங்கள் . வெற்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பல பதிவுகளை வழங்கி இருக்கிறீர்கள். மென்மேலும் தொடரட்டும். வரும் வருடத்தில் இன்னும் பல்சுவையில் பதிவுகள் தர வேண்டுகிறேன்.

    எங்கள் கே வா போ வுக்கு இந்த வருடம் மூன்று கதைகளாவது ( !! ) கொடுக்க வேண்டுகிறேன். போதிய இடைவெளிகளில்தான்! பேராசை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்சுவை.. மனதில் கொள்கிறேன். தமிழாக்கம், நூல் விமர்சனம் மீண்டும் செய்ய எண்ணம்.

      முதலில் வாக்களித்த கதையை தர வேண்டும். அது பட்டியலில் முக்கியமானதாக வைத்துள்ளேன்.

      நீக்கு
  4. உங்கள் தளத்தில் உங்கள் கவிதை பார்த்து நாளாச்சு...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவது குறைந்து விட்டது. மீட்டெடுக்க முயன்றிடுகிறேன். அக்கறைக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பு நன்றி.

      நீக்கு
  5. கருத்து செறிவு மிக்க பல ஆக்கங்கள், மிகச் சிறந்த கலையம்சம் நிறைந்த படங்கள், இயற்கை காட்சிகள், பறவைகள் குறித்து சுவாரஸ்யமான - அழகிய படங்களுடன் எளிமையான நடையில் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்வியல் சிந்தனை முத்துக்கள், கவிதை என இந்த வருடம் முழுவதும் நேர்மறையான இயற்கையை நேசிக்கும் பல படைப்புகளை வாசிக்கக் கொடுத்தீர்கள். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சாதனைப் பயணம்.
    உங்களுக்கும், படைப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்த உங்கள் கருத்துகளுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற வருடமும் இயன்றவரை நல்ல பதிவுகளை வழங்க முயன்றிடுவேன். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. 2019 புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

    உங்கள் படங்கள் எனக்கு பெரும் ஊக்கம் தருபவை ...

    நான் கைபேசியில் படம் எடுத்தாலும் உங்களின் கோணம் மற்றும் முறைகளை கண்டு பலவற்றை முயற்சித்து உள்ளேன் ..


    தொடரட்டும் உங்கள் சாதனை அழகிய படங்களுடன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் மனம் திறந்து கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகளுக்கு எனது நன்றி, அனுராதா.

      நீக்கு
  7. புகைப்படங்கள் & ஃப்ளிக்கர் பகிர்வுகள் அபாரம். வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி :) இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் கூட :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin