வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

ஆட்காட்டிக் குருவி - Did you do it - பறவை பார்ப்போம் - (பாகம் 30)

ளவில் பெரிய கரைப் பறவைகள், ஆட்காட்டிக் குருவிகள் .  சுமார் 10 முதல் 16 அங்குல நீளத்தில் இருக்கும்.
ஆங்கிலப் பெயர்Lapwing 
இவை மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும்  ஆபத்தில் இருக்கும் பிற உயிரனங்களுக்கும் தெரியப்படுத்தும். உதாரணத்திற்கு பதுங்கி வரும் புலிகளின் வருகையை பக்கத்திலிருக்கும் மான்களுக்கு முதலிலேயே தெரிவித்து விடும்.

இப்படி இடையறாது இரவு மற்றும் பகல் நேரங்களில் தமது சுற்றுபுறத்தைக் கண்காணித்து, எச்சரிக்கைக் குரல் எழுப்புவதாலேயே இப்பறவை ஆட்காட்டி (ஆள்காட்டி) என்று அழைக்கப்படுகிறது. மற்றும் வேடர்களின் வருகையை எதிரிகளின் வருகையாய் இவை அறிவிக்கின்றன என்றால், இவற்றால் சிரமத்துக்குள்ளாகும் வேடர்கள் இப்பறவைகளை எதிரிகளாய்ப் பார்க்கின்றனர். இவ்விரண்டு தகவல்களைக் குறித்தும் விரிவாக திரு. கல்பட்டு நடராஜன் அவர்களின் அனுபவப் பகிர்வில் இங்கே வாசிக்கலாம். ஆட்காட்டிக் குருவிகளால் தரையில் கட்டப்பட்ட கூடுகளையும் படமாக்கியிருக்கிறார்:



ட்காட்டிக் குருவிகளில் இரண்டு வகைகள் உண்டு:
 சிவப்பு மூக்கு ஆள்காட்டி - Red wattled Lapwing (Vanellus indicus); 
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி - Yellow wattled Lapwing

நாம் இங்கே பார்க்கவிருப்பது சிவப்பு மூக்கு ஆள்காட்டி.

உயிரியல் பெயர்: Vanellinae

இவற்றின் இறக்கைகளும் முதுகுப் பகுதியும் ஊதா நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.  தலை, மார்பு, கழுத்தின் முன்பகுதி ஆகியன கருப்பு நிறத்திலும் இவ்விரண்டு நிறங்களுக்கு நடுவில் உள்ள பகுதி வெண்ணிறமாகவும் இருக்கும். இதன் கண்ணைச் சுற்றிலும் சிவப்பு நிறத்திலான தோல் இருக்கும். அலகுகள் சிவப்பாக நுனி மட்டும் கருப்பாக இருக்கும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஆண் மற்றும் பெண் பறவைகள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் 5% நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே துருத்தி கொண்டும் இருக்கும். இவை பொதுவாக இணைகளாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் உழுத நிலங்களிலும், மேய்ச்சல் பகுதிகளிலும், குளம், குட்டைகள் போன்ற நீர் நிலைகளின் ஓரங்களிலும் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் அல்லாத குளிர் காலங்களில் அரிதாக இப்பறவைகள் பெருங்குழுக்களாக சுமார் 26 பறவைகள் முதல் 200 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கின்றன. இவை மழை வளம் நிறைந்த வனங்களுக்கு அருகாமையிலும் வசிக்கின்றன.இவை தத்தி தத்தி, உடம்பை முன்னால் சாய்த்து உணவுகளை தேடி உட்கொள்ளும்.இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இரை தேடும் என்றும் பௌர்ணமி இரவுகளில் இதன் இயக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவை மேற்கு ஆசியாவில் (ஈரான், தென் மேற்கு ஈரான், அரேபிய, பாரசீக வளைகுடா) தொடங்கி கிழக்குப் புறமாக தென் ஆசியாவில் பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையிலுமாக முழு இந்தியத் துணை கண்டம் முழுவதிலும், நேபாளில் 1800 மீட்டர் உயரம் வரையிலும் மற்றும் இலங்கை வரைக்கும் பரவியுள்ளது. தேவையான வாழ்விடங்களின் பொருட்டு இவை மழைக் காலங்களில் ஏகமாக இடம்பெயர்ந்து காணப்படுகின்றன என்றாலும் பெரும்பாலும் இடம்பெயராமல் நிலையாக ஒரே இடங்களில் வாழக் கூடியவையே.

ப்பறவைகளின் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை. இணை சேர்வதற்கான முந்தைய காலங்களில் ஆண் பறவை தன் இறகுகளை சிலுப்பிப் பெரிதாக மாற்றியும் தன் அலகை மேல் நோக்கி காண்பித்தும் பெண் பறவைகளை கவர முயற்சிக்கும். பெண் பறவைகளைக் கவர ஆண் பறவைகளினிடையே பெருத்த போட்டி நிகழும். இப்பறவைகள் தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். ஒழுங்கற்ற சிறகடிப்புடன் மெதுவான வேகத்தில் பறக்க கூடியவை என்றாலும் கூட்டினைப் பாதுகாக்கும் போதும், பருந்தினால் வேட்டை ஆடப்படும் போதும், மிகுந்த வேகத்தோடு பறக்கக் கூடிய ஆற்றல் படைத்தவை.

#3
வேறு பெயர்: 'Did you do it' Bird
லமிடும் கீச்சுக் குரலைக் கொண்டவை இப்பறவைகள். தொடர்ச்சியாக இவை ஒலியெழுப்புகையில் “டிட் யு டு இட் - did you do it" எனக் கேட்பது போலவே இருக்குமாம்.  திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள் காலமாவதற்கு ஒரு மாதம் முன் மங்களூரிலிருந்து பேசும் போது, நான் இந்தப் பறவையைப் படமாக்கியிருக்கிறேனா என விசாரித்தார். ‘இன்னும் இல்லை. தோட்டத்துக்கு வரும், ஆனால் வெகு வேகமாக கடந்து விடும்’ என்றேன். முடியும் போது படமாக்குமாறும் அது ஒலியெழுப்புகையில் கவனிக்குமாறும் சொன்னதோடு ஆட்காட்டிக் குருவி எப்படி ‘டிட் யு டு இட்’ எனக் கூவுமென்பதை உற்சாகமாக ஒலியெழுப்பிக் காண்பித்ததை மறக்க முடியவில்லை. பறவைகளைப் படமாக்கும் ஆர்வம் என்னுள் வளர அவருடைய அறிவுரைகளும் அனுபவப் பகிர்வுகளும் ஒரு காரணம்.

அவரைப் பற்றிய எனது தினகரன் வசந்தம் கட்டுரை வாசிக்காதவர்களுக்காக இங்கே:
***

படங்கள்: இலங்கை விகரமகாதேவி பூங்காவில் படமாக்கியவை.
தகவல்கள்: விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து தமிழாக்கம் செய்தவை.
****


18 கருத்துகள்:

  1. நான் இந்த பறவையை தாமிர கோழி என்று பகிர்ந்து இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல்தான் அதன் சத்தம் இருக்கும்.
    அழகாய் இருக்கிறது உங்கள் படம். விவரத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமிர கோழி என்றும் அறியப்படுகிறதா? உங்கள் பதிவை மீண்டும் சென்று பார்த்தேன். அந்தப் பெயரை கூகுள் தேடலில் உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை. மீண்டும் முயன்று பார்க்கிறேன். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. இவை எச்சரிக்கின்றன என்று மற்ற விலங்குகளுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். இயற்கையின் ஆச்சர்யம். அது கூவும் விதம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படித்தால் நானும் இந்தப் பறவையைப் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள்.

    தகவல்கள் வியப்பளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அழகு... வியப்பை தரும் தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள்! மிக சுவாரஸ்யமான விபரங்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஆட்காட்டிக்குருவி பற்றி அறியாதன அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. இந்தப் பறவையின் புத்திக் கூர்மை, சாதுர்யம் பற்றிய திரு. கல்பட்டு நடராஜன் அவர்களின் அனுபவப் பகிர்வில் உள்ளக் குறிப்புகள் வாசிக்க வெகு சுவாரஸ்யம். முட்டைகளின் நிறம் குறித்த செய்தி ஒவ்வொரு உயிரினமும் தனது சந்ததியைக் காக்க நடத்தும் வேள்வியாகவே தோன்றுகிறது.

    இயற்கை படைப்புகளின் மேல் வாசிப்பவர்களுக்கு கரிசனையை உண்டு பண்ணும் உங்கள் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி மாலா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. கல்பட்டு நடராஜன் பகிர்வுகள் சொந்த அனுபவம் கலந்து சுவாரஸ்யமாக இருக்கும். PiT தளத்தில் முழுத் தொடரும் உள்ளது.

      இழையைப் பிடித்து அவரைப் பற்றியக் கட்டுரையை வாசித்ததோடு அங்கிருந்து இழை பிடித்து PIT கட்டுரையையும் வாசித்திருப்பது புரிகிறது:).

      நன்றி.

      நீக்கு
  8. ஆட்காட்டிக் குருவி படங்களுடன், செய்திகளும் வியப்பு ...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin