பறந்து கொண்டிருந்தன பறவைகள்
எட்டுத் திக்குலுமாக
ஆனால் பாடவில்லை.
வீசிக் கொண்டிருந்தது காற்று
தென் கிழக்காக
ஆனால் அசையவில்லை இலைகள்.
வானளாவிய விருட்சங்களின்
ஊடாகப் பாய்ந்து கொண்டிருந்தது
உச்சிச் சூரியனின் கதிர்கள்
ஆனால் சுடவில்லை.
எழும்பி அடங்கிக் கொண்டிருந்தன
வனத்தின் குளத்தில் அலைகள்
ஆனால் காணவில்லை
நீரைக் கிழித்து விரையும் மீன்களையும்
குதித்து ஆர்ப்பரிக்கும் தவளைகளையும்.
ஒதுங்கிக் கிடந்தது கரையில்
ஆயிரம் வயதான ஆமை.
**
24 ஜனவரி 2016 இதழில்.., நன்றி கல்கி!
***
எட்டுத் திக்குலுமாக
ஆனால் பாடவில்லை.
வீசிக் கொண்டிருந்தது காற்று
தென் கிழக்காக
ஆனால் அசையவில்லை இலைகள்.
வானளாவிய விருட்சங்களின்
ஊடாகப் பாய்ந்து கொண்டிருந்தது
உச்சிச் சூரியனின் கதிர்கள்
ஆனால் சுடவில்லை.
எழும்பி அடங்கிக் கொண்டிருந்தன
வனத்தின் குளத்தில் அலைகள்
ஆனால் காணவில்லை
நீரைக் கிழித்து விரையும் மீன்களையும்
குதித்து ஆர்ப்பரிக்கும் தவளைகளையும்.
ஒதுங்கிக் கிடந்தது கரையில்
ஆயிரம் வயதான ஆமை.
**
24 ஜனவரி 2016 இதழில்.., நன்றி கல்கி!
***
’இரங்கல்’ கவிதை அருமை.
பதிலளிநீக்குகல்கியில் வெளிவந்துள்ளது பெருமை.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
நன்றி VGK sir.
நீக்குஆமையுமா. திமிங்கலங்கள் மட்டும் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குமிக வருத்தம்.
கவிதைக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
நன்றி வல்லிம்மா.
நீக்குஅருமை. ஆனால் இரங்கல் வருத்தம் தருகிறது ராமலெக்ஷ்மி. இயற்கையின் சீரழிவைச் சொல்லிய கவிதை. கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி தேனம்மை!
நீக்குவாழ்த்துகள். முன்னரே கேட்க நினைத்தேன். படம் நீங்கள் எடுத்த படமா?
பதிலளிநீக்குஅல்ல. கவிதைக்காக ஆசிரியர் வெளியிட்டிருக்கும் படமே.
நீக்குஅடுத்த பதிவில் நான் எடுத்த படத்துடன் கவிதை. நன்றி ஸ்ரீராம்:)!
அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்!
நீக்குஅருமையான கவிதை! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
நீக்குகவிதை நன்று!
பதிலளிநீக்கு