# படமும் கவிதையும்..
'அங்க இங்க அசையப்படாது'
ஆற்றுப் பாறையில் மூட்டைத் துணியை
துவைக்க ஆரம்பித்த
பொன்னம்மை ஆச்சியின்
அதட்டலுக்கு அடங்கிப் போய்
அவளின் முதுகோடு முதுகாக
முகஞ்சுருங்கிப் போய்
அமர்ந்திருந்தாள் பொன்னி.
சாயங்கால வெயிலில்
தகதகத்துக் கொண்டிருந்தது
தாமிரபரணி.
காந்திமதியும் கோமதியும்
பாவாடையில் மீன் பிடிக்கிறார்கள்.
சைலப்பனும் மாரியப்பனும்
தண்ணீருக்குள் கரணம் அடிக்கிறார்கள்.
நதியில் இறங்க நடுங்கி நின்ற
பட்டணத்து அபிஷேக்கை
பக்கத்து வீட்டு மாமா
அலேக் ஆகத் தூக்கி
அலற அலற நனைத்தெடுத்த போது
பொங்கி வந்த சிரிப்பை
பொய்க் கோபத்துடன்
மறைக்கும் பொன்னியை
ஓரக் கண்ணால் கவனித்தபடி
குளிக்க இறங்குகிறது கோவில் யானை.
பராட் பராட் எனப் பாகன் தேய்க்க
கும்மாளத்துடன் குழந்தைகள்
நீர் வாரி இறைக்க
ஏக்கத்துடன் வெறிக்கிறாள் பொன்னி.
கரையேறிக் கடந்து போகையில்
தும்பிக்கைத் தண்ணீரை அவள்மீது
பூமாரி யானை பொழிய
கலகலவென்று சிரிக்கிறாள்.
‘அங்க இங்க’ அசைய இயலாதவளின்
அழகுச் சிரிப்பை அள்ளிக் கொண்டு
அசைந்து அசைந்து போகிறது
கோவில் யானை.
**
ஆற்றுப் பாறையில் மூட்டைத் துணியை
துவைக்க ஆரம்பித்த
பொன்னம்மை ஆச்சியின்
அதட்டலுக்கு அடங்கிப் போய்
அவளின் முதுகோடு முதுகாக
முகஞ்சுருங்கிப் போய்
அமர்ந்திருந்தாள் பொன்னி.
சாயங்கால வெயிலில்
தகதகத்துக் கொண்டிருந்தது
தாமிரபரணி.
காந்திமதியும் கோமதியும்
பாவாடையில் மீன் பிடிக்கிறார்கள்.
சைலப்பனும் மாரியப்பனும்
தண்ணீருக்குள் கரணம் அடிக்கிறார்கள்.
நதியில் இறங்க நடுங்கி நின்ற
பட்டணத்து அபிஷேக்கை
பக்கத்து வீட்டு மாமா
அலேக் ஆகத் தூக்கி
அலற அலற நனைத்தெடுத்த போது
பொங்கி வந்த சிரிப்பை
பொய்க் கோபத்துடன்
மறைக்கும் பொன்னியை
ஓரக் கண்ணால் கவனித்தபடி
குளிக்க இறங்குகிறது கோவில் யானை.
பராட் பராட் எனப் பாகன் தேய்க்க
கும்மாளத்துடன் குழந்தைகள்
நீர் வாரி இறைக்க
ஏக்கத்துடன் வெறிக்கிறாள் பொன்னி.
கரையேறிக் கடந்து போகையில்
தும்பிக்கைத் தண்ணீரை அவள்மீது
பூமாரி யானை பொழிய
கலகலவென்று சிரிக்கிறாள்.
‘அங்க இங்க’ அசைய இயலாதவளின்
அழகுச் சிரிப்பை அள்ளிக் கொண்டு
அசைந்து அசைந்து போகிறது
கோவில் யானை.
**
நன்றி குங்குமம்!
***
கவிதைக் காட்சிகள் :)
அங்க இங்க அசைய இயலாமல்..
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/22194471094/ |
பொன்னியின் சிரிப்பு
***
அருமையான புகைப்படங்கள். கவிதையும் மிக அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅழகான வரிகளுடன் கூடிய ஆக்கமும், அசத்தலான படமும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குநன்றி vgk sir.
நீக்குVery nice poem
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
நீக்குமிக அருமையான கவிதை...
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குகிராமத்து நீர்நிலையை படம்பிடித்துக் காட்டியது கவிதையும் அதற்கான படமும். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமை. உண்மையில் யானைகள் அந்த அளவு புத்திசாலிகள் ஆகி வருவதும் உண்மை.
பதிலளிநீக்குஇருக்கலாம்:). நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடமும் கவிதையும் அங்கெ இங்கெ அசையவிடவில்லை.
பதிலளிநீக்குநன்றி :)!
நீக்குபடங்களும் கவிதையும் அருமை! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅச்சோ எத்தனை அழகு. தாமிரபரணி, யானை ,குழந்தை, சிரிப்பு அனைத்தும் அற்புதம். மிக நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குமிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஅததுக்கு (திறமைன்னு) ஒண்ணு வேணும்லா !
பதிலளிநீக்குநன்றி :)!
நீக்குஅருமை ராமலெக்ஷ்மி. புகைப்படமும் கவிதையும் குங்குமம் கவிதைக்காரர்கள் வீதியில் அசத்தல் :)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை!
நீக்குஅருமையான பதிவுகள்
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
தொடருங்கள்
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
நன்றி!
நீக்குவரிகள் அழகு...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குகவிதையும் காட்சியும் அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குகவிதையும் படமும் நன்று!
பதிலளிநீக்கு