ஞாயிறு, 3 ஜனவரி, 2016

பாரீஸைப் பின்பற்றி..

டைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று,  பெங்களூர் குமர க்ருபா சாலையின் சித்திரச் சந்தையின் 13_ஆம் பதிப்பு. வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய புனிதப் பயணம் போலக் கூடி விடுகிறார்கள் கலைஞர்களும், மக்களும்.

சித்ரகலா பரீக்ஷத் கல்லூரி நிர்வாகம் மற்றும் சித்திரச் சந்தை குழுவின் பொதுச் செயலாளரான DK செளடா, “பாரீசுக்கு சென்றிருந்த போது அங்கே பூங்காக்களிலும், சந்தைகளிலும் கலைஞர்கள் சாவதானமாக அமர்ந்தபடி ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருப்பார்கள். சிலர் மக்களை அமர வைத்து வரைந்து கொண்டிருப்பார்கள். அது வரை உலகத்தினர் பார்வைக்கு வந்திராத பல கலைஞர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டே வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள். அதைப் பார்த்த பின்னரே நாமும் ஏன் பெங்களூரில் இது போல நடத்தக் கூடாது என்கிற எண்ணம் உதித்தது.
எங்கே நடத்தலாம் என்கிற கேள்வி அடுத்து எழுந்தது.  பெரும்பாலான மக்களுக்கு கேலரிகளுக்குள் சென்று ஓவியங்களை இரசிப்பதில் தயக்கம் உள்ளது. கலைஞர்களுக்கும் சாமானிய மனிதர்களுக்கும் இடையே இருந்த அந்தத் தடையை உடைக்க விரும்பினோம். "Art for all" என்பதைக் குறிக்கோளாகக் கொண்டோம். பாதிப்பு இல்லாதபடி ஞாயிறுக் கிழமையும் இந்தச் சாலையும் அதற்காகத் தேர்வானது”  என இந்தத் திருவிழா தோன்றிய வரலாற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார் டைம்ஸ் ஆஃப் இன்டியா நாளிதழில் .

“சித்ரகலா கல்லூரியின் பேராசிரியர்களே குவியும் பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிருத்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள்.  கர்நாடகாவின் பல மாவட்டங்கள், கிராமங்களில் இருந்து வருகிற புதியவர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் முக்கியத்துவம் தருகிறோம். போகவும் மற்ற மாநிலத்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த வருடம் இரண்டு வெளிநாட்டுக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார். இரசித்து விட்டு நகர்ந்து விடுகிறவர்களை மட்டுமின்றி வாங்குவதற்கென்றே வருகிற மக்களும் பெங்களூரில் இருப்பது ஒரு வரப் பிரசாதம். அதுவே இந்நிகழ்வு தொடர்ந்து நடப்பதற்கும் கலைஞர்கள் உற்சாகமாகக் கலந்து கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது என அவர் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.

ந்த வருடம் நான் செல்லவில்லை என்றாலும், சித்திரச் சந்தை 2015 பகிர்வின் மூன்றாம் பாகமாக ஓவியர் பரணிராஜன் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன். [பாகம் 1 'இங்கே' ]. தமிழ்ப் பறவை என்ற பெயரில் பதிவுகள் எழுதி வந்தவர் தற்போது முகநூல், ட்விட்டர் ஆகியவற்றிலேயே அதிகம் இயங்கி வருகிறார். மகளதிகாரம் என்கிற பகுப்பில் குழந்தையைப் பற்றி இவர் பகிரும் அனைத்தும் அழகிய கவிதைகள். அவரைத் தனித்து விட்டு ஓவியங்கள் வரையே தனியே உட்கார முடியவில்லை என்பதால் இவ்வருடம் கலந்து கொள்ளவில்லை என்றார்.  வளரும் குழந்தையோடு செலவழிக்கும் காலமே முக்கியம். கலை காத்திருக்கும், இல்லையா?

# ஞானி

# இசைஞானி


ஒவ்வொரு வருடமும்  இவர் இசைஞானியின் படங்களை வரைந்து காட்சிப் படுத்துவதும், அவை நாளின் ஆரம்பித்திலேயே விற்று விடுவதும் வாடிக்கை.

# பரணி ராஜன்

#


# காலம்


# கண் பேசும் வார்த்தைகள்..

# தேசப் பிதா

**

 ஓவியங்களின் ஒளிப்படங்கள்: Ramalakshmi Photography
**

 தொடர்புடைய முந்தைய பகிர்வுகள்:
தமிழ்ப் பறவை 
கல்கி கேலரியில்..
**

20 கருத்துகள்:

  1. படங்கள் அருமை. வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான ஓவியங்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. திறமையைப் பாராட்டுவோம். அழகிய படங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள்...
    அவரின் திறமையைப் பாராட்டுவோம்....

    பதிலளிநீக்கு
  5. ஓவியர் பரணி ராஜ் ஓவியங்கள் எல்லாம் அருமை. கண்பேசும் வார்த்தை அழகு.
    வாழ்த்துக்கள் ஓவியருக்கு.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆளுமை மனிதர்களின் ஓவியங்கள் அழகு. "கண் பேசும் வார்த்தைகள்" பரிட்சயமான தெரிந்த முகம் போல் இருக்கிறது.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரையேனும் மனதில் கொண்டும் வரைந்திருக்கக் கூடும். நன்றி:).

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin