Wednesday, December 30, 2015

பெங்களூர் சித்திரச் சத்தை 2015 ( Chitra Santhe )

இந்த வருடத்தின் முதல் மாதம் முதல் ஞாயிறில் நடைபெற்ற நிகழ்வைப் பற்றி வருடம் முடிய இரு தினங்கள் இருக்கும் போதாவது பகிர்ந்திட வேண்டாமா? Better late than never.. இல்லையா:)?

4 ஜனவரி 2015. சித்ரகலா பரீக்ஷத் வளாகத்திலும், இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள குமர க்ருபா சாலையிலும், அதன் பக்கவாட்டு சாலைகளிலுமாக மொத்தம் 1200 ஓவியக் கலைஞர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுமிருந்து வந்து தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். தீவிரக் கலை இரசிகர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள், தங்களையும் தங்கள் குழந்தைகளையும் ஓவியமாகத் தீட்டிக் கொள்ள ஆர்வம் காட்டியவர்கள், சிறு வியாபாரிகள் என அந்த சாலையில் அன்றைய தினம் கால் பதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தாண்டி விட்டதெனில் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்.

#1

#2
சித்ரகலா பரீக்ஷத் வளாகத்தின் உள்ளே..


2012_ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சென்று விட்டேன். வருடத்திற்கு வருடம் அலைமோதும் கூட்டம் அதிகரித்தபடியேதான் உள்ளது. முந்தைய வருடப் பகிர்வுகள் “சித்திரம் பேசுதடி” எனும் பகுப்பில் (label) தேடினால் கிடைக்கும்!  இவ்வருடம் எடுத்த படங்களில் சிலவற்றை வரிசையாகப் பகிருகிறேன். விளக்கங்கள் தேவையில்லை சித்திரங்களே பேசுகையில்..

#3
விதம் விதமாக வி்நாயகர்..


நான் சென்ற மாலை நேரத்தில் பெரும்பாலான கடைகளில் ஓவியர்கள் இருக்கவில்லை. வேறு வேலையாகவோ மற்ற ஓவியர்களின் படைப்புகளை இரசிக்கவோ சென்று விடுகின்றனர். அதனால் பெயர்களை படங்களோடு இணைக்க முடியவில்லை:( . சிலர் “புகைப்படங்களுக்குத் தடை” என எழுதி வைத்து விடுகின்றனர். சிலர் விளம்பரமாகட்டும் என அனுமதிக்கின்றனர். அப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே படமாக்கியுள்ளேன்.

# 4
நான்காவது வருடமாகக் கண்காட்சியில் தம்பி மனைவி செல்வியின் ஓவியங்கள்..

காஃபி பெயிண்டிங்ஸ் அனைவராலும் நின்று வியந்து இரசிக்கப்பட்டன. கண்காட்சி முடியும் நேரத்தில் ஒரே நபர் நான்கு படங்களை வாங்கிச் செல்ல மீதம் இரண்டு என் வீட்டுச் சுவரை தற்போது அலங்கரிக்கின்றன!

#5
ஓவியர்கள் விரும்பி மேற்கொள்ளும் பயிற்சியாக இருக்கின்றன இரவிவர்மாவின் சித்திரங்கள்..

# 6
திருவனந்த புரத்து அனந்த பத்மநாபர்


# 7
ஜெய் ஆஞ்சநேயா..

#8
சிவ தாண்டவம்

#9
 பீகாரிலிருந்து ‘மதுபானி’ ஓவியங்கள்..

#10
கேரளக் கலைஞரின் படைப்புகள்..

#11
மாற்றுத் திறனாளிகளின் திறன் மிகு படைப்புகள் ஒவ்வொரு வருடமும் இடம் பெறுகின்றன.

#12
பெண்களுக்கான அணிகலன்கள், காகிதத்தால் ஆன Lamp shades, மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனையையும் காண முடிந்தது..

#13
சிறுவியாபாரிகள்..

# 14
வண்ணக் கோலமாக ஊதல்கள்.. காற்றாடிகள்..

#15


இதோ அறிவிப்பாகி விட்டது 2016ஆம் ஆண்டின் சித்திரத் திருவிழாவும். வருடத்தின் முதல் ஞாயிறான 3 ஜனவரி அன்று. குமர க்ருபா சாலையின் பக்கவாட்டு சாலைகளிலும் நீளும் ஒவ்வொரு வருடமும் ஸ்டால்கள். ஆனால் அங்கு வசிக்கும் மக்கள், ஒரு நாளேயானாலும்.. போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கூட்டம் கூடுவது தங்களுக்கு இது பெரும் தொந்திரவாக இருப்பதாக புகார் அளித்து வந்த நிலையில் இந்த வருடம் பிரதான சாலையில் மட்டுமே ஸ்டால்கள் கொடுக்கப்பட முடிவாகியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் பிற மாநிலக் கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்த இடங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு செய்தி. எது எப்படியானாலும் கலைஞர்களும் மக்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் அடுத்த சித்திர சந்தைக்காக..


#16
ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு படம் நிகழ்வின் ஹைலைட்டாக அமைந்து போகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டில் பத்திரிகைகள் பிரபலப் படுத்தியபடம் இது. ஓவியருக்கு வாழ்த்துகள்!
 (வரைந்தவர் பெயர் யாருக்கேனும் தெரிந்திருப்பின் தெரிவித்தால் இணைக்கிறேன்.)
படங்கள், ஓவிய ஒளிப்படங்கள்: Ramalakshmi Photography

பாகம் இரண்டில்.. நெல்லை ஓவியர் மாரியப்பனின் படைப்புகள்
பாகம் மூன்றில்.. தமிழ்ப் பறவை, பரணிராஜனின் படைப்புகள்
பாகம் நான்கில்..  பென்சில் ஸ்கெட்ச்
ஆகியவற்றை விரைவில் அளிக்கிறேன்:).
***

18 comments:

 1. "......அம்மா நிமிர்ந்து உட்கார்ந்து... நேர பார்த்து ஓட்டுங்கள்..." என்று ஓங்கியகுரலில்... அப்பாவுடன்...அம்மாவுக்கு சைக்கிள் ஓட்டக் கத்துக்குடுத்த அந்த நாட்களை எப்படி மறக்கமுடியும்.... ஒரு திரைப்படம் பார்க்கும்போது நாம் கதாநாயகனாக நம்மை நினைப்பதுபோல... இந்த ஓவியமும் 52வயதான என்னை இளையவயதுக்கு இழுத்துச்சென்றது .... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.

   Delete
 2. superb collections... thanks Madam...

  ReplyDelete
 3. i try to visit what a lovely event...

  ReplyDelete
  Replies
  1. வருகிற ஞாயிறு நடைபெற உள்ளது. வாய்ப்புக் கிடைப்பின் சென்று வாருங்கள்:).

   Delete
 4. அற்புதமான புகைப்படங்கள்.. ரசித்தேன்..

  ReplyDelete
 5. ரவி வர்மா படம் மாதிரி இருக்கே என்று நினைத்தால் உங்கள் உறவினர் என்கிறீர்கள். இறுதி படம் தேர்வு படம்தான். பகிர்வுக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
  Replies
  1. அவை replica_தான். ‘ரவிவர்மா ஓவியங்களின்..’ எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை என நினைத்தேன் என்றாலும், படம் ஐந்திற்கு மேல் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறேன். கவனித்தீர்களா:)?

   இறுதிப் படத்திலிருக்கும் அற்புதமான ஓவியம் சுமார் 3'x 5' என, அளவிலும் மிகப் பெரியதாக இருந்தது. அனைவரது கவன ஈர்ப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. நன்றி :).

   Delete
 6. ஒவ்வொரு படமும் அற்புதம் சகோதரியாரே

  ReplyDelete
 7. சந்தையில் புகைப்படங்கள் இல்லையா நீங்கள் எடுத்த இந்தப் புகைப்படங்கள் தவிர.

  ReplyDelete
  Replies
  1. கேள்வி புரியவில்லையே, sir.

   Delete
 8. கடைசிப்படம் கவர்ந்திழுக்கிறது.

  ReplyDelete
 9. படங்கள் வண்ணமயம். சில தாண்டவம் கவர்ந்த ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஓவியங்களுள் ஒன்று சிவதாண்டவம். நன்றி.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin