2015 நவம்பர் இதழில்.. |
சுழன்று வீசிய ஐப்பசிக் காற்றுக்கு
தலையைத் திருப்பியவனின்
செவியை உரசிச் செல்கிறது
பள்ளி மைதானத்திலிருந்து
பறந்து வந்த சிக்ஸர் பந்து.
நெடுநாள் வசித்த வேப்பமரப் பொந்தினை
கிளியிடம் இழந்த மைனாவின் கூச்சலால்
கலைகிற ஞாயிறு பகலுறக்கம்
காட்டிக் கொடுக்கிறது
சமையல் வாயுக் கசிவை.
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய்
தொடர்ந்து அலைபேசி அறிவித்த எண்ணை
விடாது முயன்றிட ஒதுங்கி நடந்தவள்
தவிர்த்திருந்தாள்
முந்தைய நாள் மழையில்
மூழ்கிப் போயிருந்த
மூடாத பாதாளச் சாக்கடையை.
துரோகம் இழைத்தவர் துயரில் இருப்பதாய்
அறிய வந்த நொடி
உதவ விரைந்தவன் உள்ளங்கால் வழி
ஏறிக் கொண்டிருந்தது கணக்கில்
மற்றுமோர் தேவ கணம்.
**
நன்றி மல்லிகை மகள்!
***
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குநல்ல பதிவு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகதையோடிய கவிதை நன்று சகோ
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாட்டிக் கொடுக்கிறது
பதிலளிநீக்குசமையல் வாயுக் கசிவை
வரிகள் முதல் பத்தியுடன் இணைந்தே இருந்தால் பொருளுணர வசதியாய் இருக்கும் என்று தோன்றுகிறது!
அருமை. ரசிக்கத் தக்கதாய் இருந்தது.இருந்தது.
முந்தைய பத்தியுடன் இணைந்த வரிகளே. பதிவிடும் போது alignment சரியில்லாமல் போயிருக்கிறது. கவனிக்கவில்லை. திருத்தி விட்டேன். நன்றி ஸ்ரீராம்:).
நீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமையான, அர்த்தமுள்ள கவிதை!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவாழ்த்துக்கள் அக்கா,,,
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குநல்ல கவிதை. மல்லிகை மகளில் வந்தமைக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி அமைதி அப்பா.
நீக்குமற்றுமோர் தேவ கணம்... மற்றுமோர் சிறந்த கவிதை. மல்லிகை மகளில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு