மஞ்சள் கண்கள்.
சின்னக் கொம்புகளில்
எப்போதோ தீட்டப்பட்ட
சிகப்பு வர்ணத்தின் மிச்சங்கள்.
பால்வெள்ளைக் கழுத்துக்கு
அழகு சேர்த்த
ஆழ்நீலக் கழுத்துப் பட்டையின் சங்கிலி
கட்டப்பட விட்டுப் போயிருந்ததை
உணர்ந்தும்
கொட்டடியில் ஆறஅமரப் பசும்புல்லை
அசைபோட்டுக் கொண்டிருந்த
ஆட்டுக்குத் தெரிந்திருக்க வேண்டும்
எப்படியும் வெட்டப்படப் பிறந்த
பிறப்பென்பதும்
தப்பித்தல் தரப் போவதில்லை
எதனிலிருந்தும்
விடுதலையை என்றும்.
**
படம்: இணையம்
18 நவம்பர் 2015 நவீன விருட்சம் வெளியீடு, நன்றி நவீன விருட்சம்!
***
சரியே...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குஇருக்கும்வரை அசைபோடுவோம்!
பதிலளிநீக்குஅது சரியே. நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅது சரியே. நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉண்மை
பதிலளிநீக்குஅருமை சகோதரியாரே
நன்றி.
நீக்குஇறந்தகாலம் பற்றியோ எதிர்காலம்பற்றியோ எந்தக் கவலையுமின்றி நிகழ்காலத்தில் நின்று நிதானமாய் அசைபோடும் ஆட்டின் வாழ்க்கை நமக்கும் பாடம்.. அருமை ராமலக்ஷ்மி. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா.
நீக்குசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குதொடருங்கள்
நன்றி.
நீக்குநன்றி.
நீக்குரொம்பவும் சரி..
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
நீக்குநல்ல கவிதை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா...
நன்றி குமார்.
நீக்குநல்ல கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவிருட்சத்தில் படிக்கும் போதே ரசித்தேன்...வெட்டுப்படப்போகுப் ஆட்டிற்குத் தப்பித்தல், விடுதலை இல்லை என வருந்தினேன்.
பதிலளிநீக்கு