செவ்வாய், 9 ஜூன், 2015

தன்வலி அறிதல்

#1
வெற்றி பெறுவதே ஒன்றே வாழ்க்கையில் எல்லாம் என்றில்லை. வெற்றி பெற வேண்டுமென்கிற எண்ணம் போதும் நம்மைச் சரியான பாதையில் செலுத்த.


#2
சாதனையாளர்களில் பலர் வெற்றியைப் பற்றிக் கனவு கண்டதில்லை. அதற்காக உழைத்திருக்கிறார்கள்..

#3
“நீங்கள் நேசிக்கும் விஷயத்தின் அழகு நீங்கள் செய்யும் விஷயத்திலும் இருக்கட்டும்.”_ரூமி


#4
 'உங்கள் பலத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். பலவீனங்களை மிகைப்படுத்திப் பார்க்காதீர்கள்.'



#5
 கடுமையாக உழைக்கத் தயாராக இருப்பவர்களைத் தேடிச் சென்றடைகிறது வெற்றி.

#6
அறிவு பெரும் சக்தி. ஆர்வமே உந்து சக்தி.’ 
Ivern Ball

#7
சேருமிடத்தைப் பற்றியே சிந்தித்திராமல் பயணத்தின் மீது இருக்கட்டும் நம் கவனம். _ Greg Anderson

#8
உங்களையும் உங்கள் சக்தியையும் முழுமையாக நம்புங்கள். எந்த ஒரு தடங்கலையும் விட வலிமை வாய்ந்த ஒன்று உங்களுக்குள் இருப்பதை உணர்ந்திடுங்கள். -  Christian D. Larson .


#9
அறிவு புகழைக் கொண்டு வரும். பண்பே மரியாதையைப் பெற்றுத் தரும்.


#10
தைரியம் என்பது செயல் புரியும் ஆற்றல் அன்று, பலகீனமான தருணங்களில் தளர்ந்து விடாமல் தொடர்வது.

**

எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொடருகிற தொகுப்பு..
***

10 கருத்துகள்:

  1. ஒவ்வொரு படமும் அழகோ அழகு... வரிகள் சிறப்போ சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை. கடைசி மொழி, "தோல்வி என்பது விழுவதில் இல்லை, விழுந்தும் எழாமல் இருப்பதில்தான்" என்னும் வரிகளை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  3. சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் தளத்திற்கு வருகிறேன். அழகிய பூக்களும் அதை விட அழகிய வரிகளும் என்னை வரவேற்கின்றன! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  4. வெளிச்சம் போட்டுக் காட்டியது "வெற்றிக்கான பாதையை தங்களது பதிவு!
    மிக மிக தர்மானது! தரணிக்கு நல்லுரமானது.

    நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. வரிகள் சிறப்பு
    பட்ங்கள் அழகோ அழகு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin