Thursday, June 11, 2015

நந்தி குனிதா - TOI சர்வதேச கிராமியத் திருவிழா 2014 - பாகம் 1

#1

சென்ற வருடம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச கிராமியத் திருவிழாவைப் பற்றி ஒரு பகிர்வு... 18 படங்களுடன்..

#2

ஆகஸ்ட் மாதம் 8,9,10 தேதிகளில் ஜெயமஹால் அரண்மனையை ஒட்டிய மைதானத்தில் நடைபெற்றது இத்திருவிழா.

#3
மாட்டு வண்டி என்றால் எப்படி இருக்கும் என்பதை நகரத்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள இப்படி ஒரு ஏற்பாடு..

பல்வேறு மொழி, கலாச்சாரங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஊராகிய பெங்களூரில் இதுபோன்ற திருவிழாக்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லைதான்.

#4

கர்நாடகத்தின் யக்‌ஷகானா உட்பட பல இந்திய மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகளுடன் இந்தோனேஷியா, நார்வே, இலங்கை ஆகிய நாட்டுக் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.
#5


நந்தி குனிதா(நடனம்):

சிவபெருமானின் மேல் இருக்கும் பக்தியை வெளிப்படுத்தும் விதமாக ஆடப்படும் நடனம், ‘நந்தி குனிதா’. ஆண் கலைஞர்களே ஆடுகிறார்கள். நந்தி கொலு என்பது அவர்கள் தலையில் வைத்து ஆடுகிற கம்பம். நந்திக கொலுவை முதன் முதலில் மைசூர் தசரா ஊர்வலத்தில் பார்த்தேன். அதன் பிறகு கர்நாடகத்தில் முதல் மரியாதை போல இந்த நந்தி குனிதாவுடனே பல விழாக்கள் தொடங்குவதைக் கவனிக்கிறேன். நடனம் முடிந்ததும் விழா அரங்கிலேயே நந்தி கொலுவை மரியாதையுடன் ஒரு மேடையில் நிறுத்தி வைக்கிறார்கள்.
#6


பல கம்பங்களால் ஆன இதன் ஒவ்வொரு கம்பமும் ஒரு தர்மத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. கம்பங்களின் உச்சியில் வெண்கலம் அல்லது வெள்ளியிலான கலசங்கள் இடம் பெறுகின்றன. அனைத்துக் கம்பங்களையும் இணைக்கிற கீழ்பாகத்திலும் ஒரு பெரிய கலசம் தலையில் வைத்து ஆடும் வகையில், அளவில் இருக்கிறது. தமிழகத்தில் கரகாட்டம் போல குறிப்பிட்ட தாளகதியில் வாசிக்கப்படும் மத்தள ஓசைக்கு ஆடுகிறார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன் ஒரு பின் மாலைப் பொழுதில் தற்செயலாக இந்த ஆட்டத்தைக் கண்டு பிரமித்திருக்கிறேன். அப்போது கேமரா கையில் இல்லாததால் மொபைலில் சிலபடங்கள் எடுத்தேன். போதிய ஒளி இல்லாததால் திருப்தியாக வரவில்லை. எப்போதேனும் மீண்டும் காணும், படமாக்கும் வாய்ப்புக் கிடைக்குமென நம்புகிறேன்.

பாரம்பரிய உடைகளுடன் அந்தந்த மாநில மக்களின் கலைப் பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

#7

#8

#9

#10
'உன் கையில் அந்த நூலா.. நீ சொல்லு நந்தலாலா..'

கீழ்வரும் இரண்டு கொலாஜிலும் இருக்கும் படங்கள் முன் பல்வேறு பதிவுகளில் நான் பகிர்ந்தவற்றின் தொகுப்பு. இந்த விழாவில் எடுத்தவை ஆதலால் மீண்டும் இங்கே..
#11

#12


குழந்தைகளைக் கவரும் வகையிலான அரங்கு அமைப்புகள் பெரியவர்களையும்  ஈர்த்தன.
#13

#14
பொதுயிடங்களில் சுத்தத்தைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொடுக்கும் பெரியவர்கள்

#15

#16

வளைத்து வளைத்து கலைப் பொருட்களையும் கலைஞர்களையும் படமெடுத்தபடி இருந்தார் இந்த அயல்நாட்டுப் பெண்மணி [என்னைப் போல:)!].

#17

அவர் எடுத்து முடிக்கக் காத்திருந்த என் பொறுமைக்காக சூப்பராகக் கொடுத்தார்கள் பாருங்கள் ஒரு போஸ், இந்த ராஜஸ்தானி சிறுவணிகர்கள்!

#18

***

பாகம் 2 விரைவில்..

20 comments:

 1. அனைத்து படங்களும் பிரமாதம்...

  ReplyDelete
 2. அழகான தெளிவான புகைப்படங்கள் வாயிலாய் சர்வதேச கிராமியத் திருவிழாவில் நாங்களும் கலந்துகொண்ட மகிழ்வு. மாட்டுவண்டி என்றால் எப்படியிருக்கும் என்று இக்கால குழந்தைகள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் தெருவின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கும்போதெல்லாம் மண்டை இடியோடான அந்த சுகமான பயண அனுபவம்... நம் தலைமுறையோடு போய்விட்டது. அழகான படங்களின் பகிர்வுக்கும் தகவல்களுக்கும் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி.

   சரியாகச் சொன்னீர்கள் கீதா. அன்றைய விஷயங்களை அறிமுகப்படுத்தலாம். அனுபவங்களைக் கொடுக்க முடியாது :( !

   Delete
 3. உன்னதமான படங்கள்.. ஒவ்வொன்றும் கவிதை! நன்றி.

  ReplyDelete
 4. கிராமிய மணம் வீசுகிறது! அழகிய புகைப்படங்கள்!

  ReplyDelete
 5. கண்ணில் ஒற்றிக்கொள்ளவென்று எது எதெற்கோ சொல்கிறோம்... உங்கள் பதிவின் படங்கள் தான் தகுதியானவை.

  பெங்களூர் வியக்க வைக்கிறது. தூங்குமூஞ்சியாக இருந்த ஊர் எப்படி விழித்துக்கொண்டு விட்டது!!

  ReplyDelete
  Replies
  1. இப்போதும் காலையில் கடைகள் எல்லாம் தாமதமாகதான் திறக்கின்றன:)! அதில் பெரிய மாற்றமில்லை.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 6. கவித்துவமான படங்கள் சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 7. படங்கள் பேசுகின்றன...வார்த்தைகள் சொல்லாததை விழிகள் சொல்கின்றன...மாட்டுவண்டி படம் அட்டகாசம் நேர்த்தியாய் நீங்கள் படம் எடுப்பதும் ஒரு அழகு! பாராட்டுக்கள் ராமலஷ்மி!

  ReplyDelete
 8. முன்னரே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

  அற்புதமான படங்கள். ராஜஸ்தானிய கலைஞர்களை இப்படி படம் எடுத்ததுண்டு. உதய்பூரிலும், ஜோத்பூரிலும்...

  ReplyDelete
  Replies
  1. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, வெங்கட்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin