திங்கள், 11 மே, 2015

போர்ட்ரெயிட் (Portrait) என்றால் என்ன? - ஒரு அறிமுகம்




போர்ட்ரெயிட் அல்லது போர்ட்ரெய்ச்சர் என்பது ஒரு நபரின் முகம், முக அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலை வடிவம். அது ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ இருக்கலாம். இவை சப்ஜெக்ட் நகராத நிலையில் இருக்கும் போது எடுக்கவோ, வரையவோ, வடிக்கவோ படுகின்றன. குறிப்பாக சப்ஜெக்ட் படம் எடுப்பவரையோ வரைபவரையோ நேராகப் பார்ப்பது போல் இருக்க வேண்டும்.  அப்போதுதான் பார்வையாளரைப் படத்துடனோ ஓவியத்துடனோ வெற்றிகரமாக ஒன்றிடச் செய்ய முடியும். அதுதானே ஒரு கலைஞனுக்கு தேவையானதும் :)?
**

ரி, நாம் இப்போது போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபிக்கு வருவோம்.

I.  TRADITIONAL PORTRAIT எனப்படும் வழமையான மரபு: இதைத்தான் இம்மாதப் போட்டிக்கான தலைப்பாக நடுவர் அறிவித்திருப்பது.

* முகத்துக்கு முக்கியத்துவம்..

* நபரின் தனித்தன்மையைப் பிரதிபலிப்பது..


* நபர் நேரடியாகக் கேமராவைப் பார்ப்பது..



* நபரின் கழுத்து வரை..


நெஞ்சு அல்லது உடலின் மூன்றில் இரண்டு பாகம் வரை...

இந்த அளவுகளில் படம் அமைந்தாலே முகபாவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க முடியும். நபரை கால் வரைக்கும் முழுமையாகக் காட்டுவதும் போர்ட்ரெயிட் வகையில் வந்தாலும் அவற்றை விட மேற்சொன்ன மூன்று வகையே போர்ட்ரெய்ட்டின் அம்சமாகும்.

போர்ட்ரெயிட் பற்றி ஆரம்பித்தாயிற்று. அதிலிருக்கும் மேலும் சில வகைகளைப் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுவோமா?

II. ENVIRONMENTAL PORTRAIT எனப்படும் நபர் இருக்கும் சுற்றுச் சூழலைப் பிரதிபலிக்கும் படங்கள். உதாரணமாக மார்க்கெட் அல்லது தெருவோர வியாபாரி, ஒளிப்படம் எடுக்கும் கலைஞர், உணவு விடுதியில் சமைப்பவர், சுவருக்கு வர்ணம் தீட்டுபவர்.. போன்றவர்களைச் சொல்லலாம்.
முகத்தோடு அவர்கள் ஈடுபடுட்டிருக்கும் செயலையும் சேர்த்து நமக்குக் காட்டுவதாக இருக்கும்.


முகபாவம் முக்கியம் என்றாலும் நேரடியாகக் கேமராவைப் பார்த்தேயாகும் கட்டாயம் கடைபிடிக்கப்படுவதில்லை. கேமராவைப் பார்த்தால் கூடுதல் சிறப்பு.

III.  CANDID PORTRAIT என்பது சப்ஜெக்ட்டுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களை இயல்பு நிலையில்.. கேமராவைப் பார்த்திராத வேளையில்.. படமாக்குவது.

பெரும்பாலும் பத்திரிகையியல் (JOURNALISM), பயணப் படங்கள் (TRAVEL PHOTOGRAPHY),  சாலைக் காட்சிகள் ( STREET PHOTOGRAPHY), விழாப் படங்கள் ( EVENT PHOTOGRAPHY) ஆகியவற்றுக்கு கேன்டிட் வகை சிறப்பு சேர்க்கும். இன்னும் சொல்லப்போனால் ஒரு தருணத்தை உறைய வைப்பதன் மூலமாக அந்நபரின் உணர்வுகளை பார்ப்பவருக்குக் கடத்துவது.


 IVLIFE STYLE PORTRAIT என்பது ஒரு தனிநபர் அல்லது நபர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பது. என்விரோன்மென்டல் மற்று கேன்டிட் இரண்டையும் கலந்து செய்த கலவையாக இருக்கலாம். சுற்றுச்சூழலைப் பிரதிபலிப்பதாக, நபர்கள் இயல்பு நிலையில் கேமராவைப் பார்க்காமலும் இருக்கலாம். அல்லது பார்க்கவும் செய்யலாம்.


இங்கே முக்கியத்துவம் சப்ஜெக்ட்டின் [நபர் (அ) நபர்களின்] வாழ்க்கை அனுபவம் அழுத்தமாக வெளிப்பட வேண்டும். பெரும்பாலும் விளம்பரப் படங்கள் இவ்வகையைச் சார்ந்ததாக இருப்பது கவனித்தால் புரியும். ஃபேஷன், மருந்து மற்றும் உணவுத் தொழிலகங்கள் போன்றவை இத்தகு வாழ்க்கை முறைகளைப் படங்களில் காட்டுவதன் மூலம் மக்களின் உணர்வுகளை எளிதாகத் தொடுகிறார்கள். திருமண விழாக்கள் மற்றும் ஃபேமிலி போர்ட்ரெய்டுகளும் LIFE STYLE வகையைச் சார்ந்தவையே ஆகும்.

மேற்சொன்ன மூன்று வகைக்கும் ஒவ்வொரு மாதிரிப்படத்தை மிகச் சிறிதாகப் பகிர்ந்திருப்பதன் காரணம், சரியாக வாசிக்காமல் இவையே போட்டிக்கான மாதிரிப்படமென நினைத்து எவரும் குழப்பம் அடைந்து விடக்கூடாது.

இந்தப் பதிவின் நோக்கம் போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபி  அறிமுகம் என்பதால் தெளிவான புரிதலுக்காக மேலும் சிலவகைகளை நாம் பார்த்தோம். இந்த வகைகளும் கூட எதிர்காலத்தில் போட்டித் தலைப்பாகலாம்:).
**
ப்போது இம்மாத PiT போட்டிக்கு வருவோம்.

தலைப்பு ‘அறிமுகமற்றவரின் உருவப்படம்’ (Portrait of the unknown). 

முதல் வகையான ட்ரெடிஷனல் போர்ட்ரெயிட் வகைப் படங்களே இப்போட்டிக்கு ஏற்றவை.

‘அறிமுகமற்றவர்களின்’ உருவப்படம் என்றதும் படத்தில் இருக்க வேண்டியது ஒரு நபரா, அல்லது பல நபர்கள் இருக்கலாமா எனும் சந்தேகம் பலருக்கு வருகிறது. பொதுவாகப் போர்ட்ரெயிட் என்றாலே ‘ஒரு தனி நபரின் முகபாவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் உருவப்படம்’ என்பது புரிதலுக்குரிய ஒன்றென்பதால் அவ்வாறாக அறிவிக்கப்பட்டது. ‘போர்ட்ரெயிட் என்றால் என்ன?’ எனும் கேள்வியே சிலருக்கு இருக்கும் நேரத்தில் தலைப்பை இப்போது “அறிமுகமற்றவரின்” என ஒருமையில் திருத்தம் தரப்பட்டுள்ளது. ஆக முதல் வகையான ட்ரெடிஷனல் போர்ட்ரெய்ட்டின் கீழ் தரப்பட்டுள்ள குறிப்புகளை மனதில் நிறுத்திப் படங்களை அனுப்புங்கள்.
**
றிமுகமற்றவரின் போர்ட்ரெயிட் படங்களை எடுப்பது எப்படி?

முன்னர் இந்தியாவின் பெருநகரங்களில் மட்டுமே தென்பட்டு வந்த ஃபோட்டோகிராஃபி குழுமங்கள் இப்போது பரவலாகப் பல இடங்களிலும் தோன்றி இயங்கி வருகின்றன. குறிப்பாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றன. ஒளிப்படக் கலைஞர்கள், ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்து வாரயிறுதிகளில் ஃபோட்டோ வாக் செல்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். இப்படிக் குழுவாகச் செல்வது பாதுகாப்பானதும் மனிதர்களை அணுக எளிதான ஒன்றும் ஆகும். அறிமுகமற்றவர்களும் உடனடியாக ஒரு புரிதல் ஏற்பட்டு ஒத்துழைக்கிறார்கள்.

பெங்களூரிலும் இப்படிப் பல குழுமங்கள் உண்டென்றாலும் அவற்றில் இணைந்து செயல்படுவது எனக்கு வசதிப்படவில்லை. அன்றாட வெளி வேலைகள், பெங்களூரின் முக்கிய வீதிகளுக்கு வேறு வேலையாகச் செல்லும் சமயங்கள், மக்கள் கூடும் பல்வேறு கண்காட்சிகள், ஏரிகள் மற்றும் பூங்காக்களில் நடைப் பயிற்சி செல்லும் வேளைகள் என கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சிலருக்கு உபயோகமாய் இருக்கலாம் எனக் கருதி எனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழும் காலத்தில் முடிந்தவரையிலும் விதம் விதமான மனிதர்களை இயல்பு நிலையில் படமாக்கிப் பதிந்திட வேண்டும் எனும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, ஆரம்பத்தில் புதியவர்களை அணுகுவதில் நிறைய தயக்கம் இருந்தது.  அதனால் கேன்டிட் வகை போர்ட்ரெய்ட்டுகளையே அதிகம் எடுத்து வந்தேன். ஆனால் ஃப்ளிக்கர் நண்பர்கள் பலரின் பதிவுகளில் அறியாத நபராயினும்  கேமராவைப் பார்க்கிற மாதிரியாக எடுக்கப்பட்டவற்றில் இருந்த உயிர்ப்பு என்னைக் கவர்ந்தது. அவர்களிடமிருந்து கிடைத்த சில ஆலோசனைகளை செயல்படுத்திப் பார்க்க முடிவு செய்தேன்.

அதில் ஒன்று சப்ஜெக்டுக்கு சற்று தொலைவில், சாலையின் மறுபக்கமோ கூட நின்றபடி சுற்றிவர கேமரா மூலமாக நாம் கம்போஸ் செய்வதாக பாவ்லா செய்தோ அல்லது சில படங்களை எடுத்தபடியோ இருந்தால் சப்ஜெக்ட் “சரிதான். இவர் போற வாரவங்கள, கண்ணுல படற விசயங்கள எல்லாம் படமாக்கித் தள்ளுவாரு போல” எனும் எண்ணத்துக்கு வந்து விடுவார்.  ஏதோ ஒரு நொடியில் அவரது “கண் தொடர்பு” (eye contact) நமக்குக் கிடைத்து விடும். இந்த ஆலோசனை எனக்கு அத்தனை வசதியானதாக இல்லை. உங்களுக்குச் சரிப்பட்டு வருமாயின் முயன்று பாருங்கள்!

ஒருவர் நம்மைப் பார்க்க அவரிடம் கேட்காமல் நிமிடக் கணக்கில் காத்திருப்பதை விட மனிதர்களை அணுகிச் சம்மதம் பெறுகிற இரண்டாவது ஆலோசனை எனக்குப் பொருந்தி வந்தது. இதற்காக நீங்கள் அவர்களோடு பேசியே ஆக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. கேமராவைக் கோணம் பார்ப்பது போல் வைத்துக் கொண்டு நட்பாக ஒரு தலையசைப்பில் சம்மதம் கேட்டால் போதுமானது. அதே போன்ற தலையசைப்பைப் பதிலாகத் தந்து விட்டு விருப்பமானால் போஸ் கொடுப்பார்கள். இல்லையானால் “எடுத்துக்கலாம் ஆனால் நேரடி போஸ் எல்லாம் வேண்டாம்” என்பது போல வேறு திசையில் பார்ப்பார்கள். கண் தொடர்பு கிடைத்தால் அதிர்ஷ்டம்.  இல்லையேல் கேண்டிட் ஆக முடிந்தாலும் பாதகம் இல்லை.

சிலர் தலையசைப்பைத் தாண்டி சிநேகமாகக் புன்னகைக்கவோ ஒரு சில வார்த்தைகள் நம்மோடு பேசவோ செய்வார்கள். நாமும் நலம் விசாரிக்கலாம். அதே சமயம், அட பேசுகிறார்களே என “எங்கே இப்படி நில்லுங்க. அப்படி போஸ் கொடுங்க. இப்படிச் சிரிங்க” என அட்வான்டேஜ் எடுக்காதிருப்பது நல்லது. அவர்களின் பொன்னான நேரத்தையும் மதிக்க வேண்டும்.  அரை நிமிடத்துக்குள் ஒன்றிரண்டு படங்களோடு முடித்துக் கொள்வது சாலச் சிறந்தது. அணுகும் முன்னரே கேமராவில் அதற்கான செட்டிங்குளை தயாராக வைத்துக் கொண்டு அணுக வேண்டும்.

#


மேலே இருக்கும் வயதான பெரியவர் வீடு வீடாகச் சென்று உப்பு, கோலப்பொடி விற்கும் வியாபாரி. நெல்லையில் அம்மா வீட்டுக்குப் போயிருந்தபோது சந்தித்தேன். கேட்கும், பார்க்கும் திறன்கள் குறைந்து வருகிற நிலையில் இருக்கும் இவரை இந்த ஒரு படம் மட்டுமே கேமராவைப் பார்ப்பது போல எடுத்தேன். மற்றபடி இவரது நடை உடைகளை இயல்பு நிலையிலேயே படமாக்கி விட்டிருந்தேன். நம்மால் வயதானவர்களுக்குத் தொந்திரவு இருக்கக் கூடாது.

அறியாத குழந்தைகளை எடுக்கும் போது உடன் வந்திருக்கும் பெற்றோரிடம் தலையசைத்துக் கேட்கலாம். விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைத் தொந்திரவு செய்யாமல் இயல்பு நிலையிலேயே எடுக்கலாம். அவர்களே நம்மைப் பார்க்கும் பட்சத்தில் நாம் சிரித்தால் அவர்களும் அழகாகச் சிரிப்பார்கள்.
சில பெற்றோர்கள் அவர்களாக முன் வந்து ‘கேமரா பார், சிரி’ என்றும் சொன்னதுண்டு.  விருப்பமில்லாவிடில் நகர்ந்து விடலாம். விருப்பமின்மையைக் கணித்து விடவும் முடியும். என் அனுபவத்தில் அப்படி ஆட்சேபித்தவர்கள் இல்லை. சிறு வியாபாரிகளில் அபூர்வமாகச் சிலர் ’வேண்டாமே’ என்பது போல மறுத்திருக்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால் மனிதர்கள் பழக இனிமையானவர்களே. அணுகும் விதத்தில் பக்குவம் வேண்டும். சடாரென ஒருவர் முன் கேமராவுடன் போய் நின்று ‘எடுக்கட்டுமா’ எனத் தலையசைத்தீர்களானால் பூசை விழக் கூட வாய்ப்பிருக்கு. இடம், பொருள், ஏவல் என ஒன்றிருக்கிறது அல்லவா? எனவே பக்குவமாய் அணுகுங்கள்.

முத்தாய்ப்பாக ஒன்று. அறியாத மனிதரின் போர்ட்ரெயிட் படங்கள் காலத்தின் பதிவுகள். ஈடுபட்டிருக்கும் கலையில் மூலமாக சமகால வரலாற்றுக்கு நமது சிறு பங்களிப்பு. இத்தகு படங்களின் மூலமாக சமகால மனிதர்களின் உடை நடை வாழ்வியல் சூழல் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறோம் நாம்.

**

PiT 2015 மே மாதப் போட்டி அறிவிப்பு இங்கே. அப்பதிவில் “Portraitனா என்ன? கொஞ்சம் சொல்ல இயலுமா?” எனக் கேட்டிருந்த வாசகருக்காக PiT தளத்தில் இன்று பதிந்ததை இங்கும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

படங்களை அனுப்பக் கடைசித் தேதி 20 மே 2015. இதுவரை வந்திரு \க்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்.

***

21 கருத்துகள்:

  1. அனைவருக்கும் பயன்படும் அருமையான தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11 மே, 2015 அன்று 11:00 PM

    தெளிவான உரை!

    பதிலளிநீக்கு
  3. அருமையான விளக்கங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அந்த தாடிக்கிழவர் படம்! ஊஞ்சலாடும் சிறுமி..

    அழகு.

    விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. அறிந்த வார்த்தை
    ஆனாலும்
    அறியாத செய்திகள் சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. அருமையான விளக்கம்... அழகான படங்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  7. ஜீஎம்பி ஐயா உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள். தங்களது இப்பதிவின்மூலமாக அறியாதன அறிந்தேன்.
    http://drbjambulingam.blogspot.com
    http://ponnibuddha.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin