வியாழன், 7 மே, 2015

விக்கி லவ்ஸ் ஃபுட் (WLF) - விக்கிமீடியா ஒளிப்படப் போட்டி - ரொக்கப் பரிசுகள்

விக்கிமீடியா காமன்ஸ் அறிவித்திருக்கும் அனைத்து மக்களுக்குமான ஒளிப்படப் போட்டி, Wiki Loves Food (WLF). போட்டிக்கு வரும் படங்களில் சிறந்தவை அனைத்தையும் விக்கிப்பீடியா பக்கங்களிலும், விக்கிமீடியாவின் ஆய்வுப்பக்கங்களிலும் பயன்படுத்திக் கொள்ளவதே இதன் முக்கிய நோக்கம் என்றாலும் கலந்து கொள்பவர்களை ஊக்கப்படுத்த பெரிய அளவில் ரொக்கப் பரிசுகளையும் அறிவித்திருக்கிறார்கள்.


பல்வேறு சுவைமிகு இந்திய உணவு வகைகளைக் கொண்டாடுவதே இப்போட்டியின் நோக்கமென்கிறார்கள். இந்திய உணவு வகை சம்பந்தமான எந்த ஒரு படமும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் போதே காமன்ஸ் அடிப்படையில் அதன் உரிமத்தை  நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு நன்கொடையாகக் கொடுக்கிறீர்கள் என்பது நினைவிலிருக்கட்டும். விக்கிப்பீடியா தகவல் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் உணவு வகைப் படங்களின் தரத்தை உயர்த்துவது மட்டுமே நோக்கமாக அன்றி, ஒரு பொது நன்மைக்காக படங்களை நன்கொடையாக அளிக்கும் காமன்ஸ் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக நாடெங்கிலும் எடுத்துச் செல்வதும் இப்போட்டியின் நோக்கம் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

எப்படிப் படங்களை அப்லோட் செய்வது? :
விக்கி மீடியா காமன்ஸ். இங்கே சென்று கணக்கை உருவாக்கிக் கொண்டு படங்களை அப்லோட் செய்ய வேண்டும். எல்லாப் படங்களும் “Wiki Loves Food” எனும் பிரிவின் கீழ் பதிய வேண்டும்.


போட்டிகள் இரண்டு கட்டமாக நடைபெறுகின்றன. படங்கள் எப்போது எடுத்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பதிவு செய்ய வேண்டிய தேதிகளில் கவனம் வேண்டும்.

படங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை:

முதல் கட்டப் போட்டி:

ஆரம்பத்தில் இந்த முதல் கட்டப் போட்டி முதலில் சமர்ப்பிக்கும் “early birds" ஐம்பது பேருக்கு மட்டுமென அறிவித்திருந்தார்கள். இப்போது கால அளவை நீட்டி அனைவருக்குமானதாக மாற்றியுள்ளார்கள்.

அதன் படி முதல் கட்டப்போட்டியில் கலந்து கொள்ள இன்றே கடைசி தினம். அதாவது,

15 ஏப்ரல் 2015 முதல் ஆரம்பமான  முதல் கட்டப் போட்டிக்கு 7 மே 2015 (இன்று) இந்திய நேரப்படி இரவு 11.59 மணியளவு வரையிலும் பதிவேற்றம் செய்யலாம்.

இரண்டாம் கட்டப் போட்டி:

இன்று பதிவு செய்ய இயலாது போனால் பொறுத்திருந்து இரண்டாவது கட்டப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.

இந்திய நேரப்படி 15 மே 2015 அதிகாலை 00.00 மணி முதல் ஒரு மாத காலத்துக்கு 15 ஜூன் 2015 இரவு 11.59 வரையிலும் படங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.


விதி முறைகள்:

*படங்கள் நீங்களே எடுத்ததாக இருக்க வேண்டும்.
* முதல் கட்ட, இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கான படங்களை மிகச் சரியாக அதற்கான கால அளவுக்குள்ளேயேதான் சமர்ப்பிக்க வேண்டும்.
* எல்லாப் படங்களும் இலவச காபிரைட் லைஸன்ஸுக்கு (Creative Commons Attribution-Share Alike 4.0 CC-BY-SA 4.0) உட்படும்.
* படங்கள் போட்டிக்குத் தகுதி பெற  "Wiki Loves Food" பிரிவின் கீழ் பதிவது அவசியமாகிறது.
* போட்டியில் கலந்து கொள்ள பயனர் கணக்கை உருவாக்கிய பின் பயனர் பெயருடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியும் தந்திருக்க வேண்டும். முறையாகப் பதிவு செய்தவர்கள் மட்டுமே பரிசுக்குத் தகுதி உடையவர்களாவார்கள்.

போட்டிக்குத் தகுதியற்றவை:

*ஒளிப்படங்களுக்கு மட்டுமே அனுமதி. சித்திரங்களுக்கோ கணினியில் உருவாக்கியப் படங்களுக்கோ அனுமதியில்லை.
* ஏற்கனவே நீங்கள் காமன்ஸ் உரிமம் கொடுத்த படங்களை மறுபதிவேற்றம் செய்ய அனுமதியில்லை.


பரிசுக்கான அடிப்படைத் தகுதிகள்:

* படத்தின் டெக்னிகல் தரம்
* தனித்தன்மையுடன் படைக்கும் விதம்
* விக்கிமீடியா பக்கங்களின் பயன்பாட்டுக்கு உதவும் தன்மை, லைஸன்ஸ் உட்பட படத்தின் ஒட்டுமொத்த மதிப்பு

பரிசுத் தொகை:

முதல் கட்டம்:

1. முதல் பரிசு - ரூ 12,000/--
2. இரண்டாம் பரிசு - ரூ 8,000/-
3. மூன்றாம் பரிசு - ரூ 5,000/-
4. மொழி வாரிய விருது - ரூ 5,000/-

இரண்டாம் கட்டம்:

1. முதல் பரிசு - ரூ 20,000
2. இரண்டாம் பரிசு - ரூ 15,000
3. மூன்றாம் பரிசு - ரூ 10,000
4. மொழி வாரிய விருது - ரூ 5,000


நடுவர்களாக இயங்க இருக்கும் மது மேனன்; மனு பஹுகுணா; சாஹில் கான்; கார்த்திக் நாடார்; கிரண் ரவிகுமார் ஆகியோரைப் பற்றி விரிவாக அறியவும், ஆங்கிலத்தில் போட்டி விவரங்களை அறியவும் இங்கே செல்லலாம்.

**

ளிப்படக் கலைஞர்கள் மட்டுமின்றி பதிவுலகில் சமையல் வலைப்பூக்கள் நடத்தி வரும் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விதவிதமான செய்முறைகளோடு நீங்கள் பதிந்த படங்களில் சிறந்தவற்றை இன்று இரவுக்குள் முதல் கட்டப் போட்டிக்கு அனுப்பி வைத்திடுங்கள். அல்லது புதிதாக எடுத்து அனுப்புங்கள். மற்றவர்கள் இரண்டாம் கட்டப் போட்டிக்குத் தயாராகுங்கள். படங்கள்தாம் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். உணவு நீங்கள் சமைத்ததாக இருக்க வேண்டியதில்லை:)!அருமையான லைட்டிங்கில் ரசனையுடன் உணவைப் படைத்து க்ளிக் செய்யுங்கள். பதிவேற்றம் செய்யுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்! வாழ்த்துகள்:)!***


10 கருத்துகள்:

 1. தகவல்களை விவரமாய் வழங்கியமைக்கு நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 2. கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. விவரமாய்த் கொடுத்துள்ளீர்கள். கலந்து கொள்பவர்களுக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 4. தகவல் தந்துதவியமைக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. அவசியம் கலந்து கொள்ளுங்கள் சாந்தி. உங்களிடம் ஏற்கனவே எடுத்த அருமையான படங்கள் பல உள்ளன. புதிதாகவும் முயன்றிடுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin