சனி, 8 மார்ச், 2014

ITHI மகளிர் அமைப்பின் FEMME VUE ஒளிப்படப் போட்டி

ஐடி துறையில் பணியில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் பெங்களூரில் இயங்கி வரும் அமைப்பு ITHI. அவ்வப்போது உழைக்கும் மகளிரின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த கருத்தரங்கங்கள், விவாதங்கள், கூட்டங்களை மகளிருக்காகவும், பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இன்று மகளிர் தினம்:

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்த மார்ச் மாதத்தில் ITHI விழிப்புணர்வுக்காக அறிவித்திருக்கும் ஒளிப்படப் போட்டிதான் FEMME VUE:


இந்தப் போட்டியின் நோக்கம் ஒத்த கருத்தும் புரிதலும் கொண்டவர்களை ஒன்று சேர்த்து மகளிர் குறித்த உலகின் பார்வையை, மகளிர் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வருவதேயாகும். வேறு எந்த விதத்திலும் சொல்ல முடியாத கதையை மனதில் தைப்பது போல அழுத்தமாகச் சொல்லக் கூடிய சக்தி வாய்ந்தவை ஒளிப்படங்கள் என நம்புகிற அமைப்பு, அனைவரையும் இதில் பங்கு கொண்டு தம்மைக் கெளரவிக்கக் கேட்டுக் கொள்கிறது.

படங்கள் கண்டிப்பாகப் பின் வரும் கருக்களை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும்:

  • வெவ்வேறு சமுதாயங்கள் பெண்களை எப்படிப் பார்க்கின்றன.. சித்தரிக்கின்றன..
  • சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு.. அரசியல், கலை, கல்வி, ஆய்வுத் துறை, தொழில் துறை,  ஊடகங்கள் ஆகியவற்றில் பெண்களின் இடம்..
  • இன்றைய உழைக்கும் மகளிர்.. சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது..

பிரிவுகள்:

  • A பிரிவு, தனிப்படங்களுக்கானது.
  • B பிரிவு, ஒளிப்படக் கதைக்கானது (அதாவது 2 அல்லது 5 படங்கள் ஒரு குறிப்பிட்டக் கருவை வெளிப்படுத்துவதாக.. அல்லது ஒரு கதையைச் சொல்வதாக.. இருக்க வேண்டும்).
கவனிக்க வேண்டிய முக்கிய  விதிமுறைகள்:
  • படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 27 மார்ச் 2014 மாலை ஐந்து மணி.

  • உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஆண், பெண் இரு பாலினரும், எந்த வயதினரும், எந்த நாட்டினரும் என யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
  • ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் ஒரே படத்தை இரண்டு பிரிவுகளுக்கும் கொடுக்கக் கூடாது.
  • அடிப்படை திருத்தங்கள் செய்து படங்களை மேம்படுத்த அனுமதி உண்டு.
  • வண்ணம், கருப்பு வெள்ளை இரண்டு வகைப்படங்களும் தரலாம்.
  • JPG file ஆக சமர்ப்பிக்க வேண்டும்.
  • 1500x2100 பிக்ஸல்; 150-க்கு அதிகமான dpi மற்றும் 20 MB அளவு வரை இருக்கலாம். [வெற்றி பெற்றவர்கள் print செய்யும் வசதிக்காக, அதிக resolution படங்களை போட்டிக்குப் பிறகு சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.]
போட்டிக்குத் தரப்படும் படங்கள் creative commons License_கு கீழ் வரும். அதாவது அவற்றைப் பிரசுரிக்க.., கண்காட்சியில் பயன்படுத்த.., print செய்ய.., விநியோகிக்க.., இணையத்தில் பயன்படுத்த அனுமதியை விரும்புகிறது அமைப்பு. இதற்கென சன்மானங்கள் எதிர்பாராமல், பயன்படுத்தும் ஒவ்வொரு சமயமும் தெரிவிக்க வேண்டுமென நினைக்காமல் இந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் என்றால் மட்டுமே கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறது.

படங்களைச் சமர்ப்பிக்கவும் மேலும் விரிவான விவரங்களுக்கும் இங்கே http://itecentre.co.in/ithi/#events செல்லவும்.

30 மார்ச் அன்று போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். பெங்களூரில் எந்த இடத்தில்.. என்பது அவர்களது தளத்தில் விரைவில் அறிவிப்பாகும். அத்துடன் அமைப்பின் FB பக்கத்தில் https://www.facebook.com/Ithiforwomen வென்றவர்களது ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்

ஒளிப்பட நுட்பங்கள் பிரமாதமாக அமைய வேண்டும் என்பதை விடவும் எத்தனை வலுவாக படம் கருவை வெளிப்படுத்துகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படும்.

போட்டி நடுவர்களில் ஒருவராக இயங்கும் வாய்ப்பை அளித்திருக்கும் ITHI-க்கு என் நன்றி.

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இப்போட்டியில் ஆர்வத்துடன் அனைவரும் பங்கு பெறக் கேட்டுக் கொள்கிறேன்.

**
மகளிர் தின வாழ்த்துகள்!
***

11 கருத்துகள்:

  1. சிறப்பான போட்டியில் கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. //வெவ்வேறு சமுதாயங்கள் பெண்கள் எப்படிப் பார்க்கின்றன//

    பெண்களை எப்படிப்....

    //பயன்படுத்தும் ஒவ்வொரு சமயமும் தெரிவிக்க வேண்டுமென நினைக்காமல்//

    பங்களிப்பவர்கள் தங்கள் படங்கள் இங்கெல்லாம் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது என்று தெரிந்தால் மகிழ்ச்சி அடைவார்களே...!! :))

    //போட்டி நடுவர்களில் ஒருவராக//

    வாழ்த்துகள். உங்கள் விருப்ப தளம்.

    என்னென்ன மாதிரி படங்கள் பங்களிக்கப்படப் போகின்றன என்று பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு தினத்திற்கான
    சிறப்பான போட்டி
    நாங்களும் வெற்றியாளர்களின்
    திறனைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. @ஸ்ரீராம்.,

    நன்றி. திருத்தி விட்டேன்:).

    கிரியேட்டிவ் காமன்ஸ் குறித்து இந்த ஒரு கேள்வி பலருக்கும் உண்டு. (ஒளிப்படங்கள் மட்டுமின்றி மின்னூல்கள், மற்றும் சில தளங்களில் நம் படைப்புகள் கூட இந்த லைசன்ஸ் அடிப்படையில் வெளியிட அனுமதி வேண்டுகிறார்கள்.) நடைமுறையில் ஒவ்வொரு முறையும் படைப்பாளிகளைத் தொடர்பு கொள்வது சாத்தியபடுவதில்லை என்பதாலேயே இப்படியொரு விதிமுறை எனக் கூறப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  5. @Ramani S,

    நன்றி. போட்டியில் கலந்து கொள்ளும் படங்களை நேரடியாகக் காணும் இணைப்பு இல்லையென்றாலும், தேர்வாகும் படங்கள் அமைப்பின் FB பக்கத்தில் வெளியாகும்.

    பதிலளிநீக்கு
  6. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நடுவராக தெரிவானது மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin