சனி, 15 பிப்ரவரி, 2014

இரா. குணா அமுதன் பார்வையில்.. - இலைகள் பழுக்காத உலகம்

ஒளிப்படக் கலைஞரும் எழுத்தாளருமான இரா. குணா அமுதன் அவர்களின் ‘இலைகள் பழுக்காத உலகம்’ குறித்த ஃபேஸ்புக்கில் பகிர்வை இங்கும் பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி.
விதைகளுக்கான களத்தில் இருந்து சற்று விலகி நின்று கொண்டே இதை எழுதுகிறேன்.வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருமே கவிஞர்கள் ஆகி விட்டபடியால் நல்ல கவிதைக்கான சாத்தியங்கள் வெகுவாகக் குறைந்து போனதாக எனக்குத் தோன்றியது.இதே மன நிலையில் வெகு எளிதாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையோடு தான் இராமலக்ஷ்மி அவர்களின் "இலைகள் பழுக்காத உலகம்" கவிதை நூலைக் கையில் எடுத்தேன்.

ஆனால் துவக்கத்திற்கும் முடிவிற்கும் இடையே முதல் கவிதையிலேயே என் சிந்தனை அலைவுறத் துவங்கிய போது அடுத்த கவிதைக்கு மீள்வதே கடினமாகிப் போனது.கவிதைகளின் ஒவ்வொரு வரியும் நமது மனத்தை அன்பாக வருடிச் செல்கின்றன.வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து கண நேரத்தில் விலகி "ஆடுகளம்", "உயிர்க்கூடு","நிழல்","விட்டு விடுதலை" என கவிதைகளின் ஊடாகப் பின் தொடர முடிகிறது. இப்போதைக்கு என் புத்தக அலமாரியில் அதிக பட்ச வாசிப்பைக் கோரும் புத்தக வரிசையில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது என்பது மிக்க மகிழ்வைத் தருகிறது.

நன்றி சகோதரி இராமலக்ஷ்மி அவர்களுக்கு....

- இரா.குண அமுதன்.

*

மிக்க நன்றி குணா அமுதன்!

**

இணையத்தில் வாங்கிட.  http://aganazhigaibookstore.com/

மற்றும் கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம், 390,
அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com
**

தொடர்புடைய முந்தைய பதிவு:

‘எங்கள் Blog' ஸ்ரீராம் பார்வையில்.. இலைகள் பழுக்காத உலகம்

10 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சி...! வாழ்த்துக்கள்...

  திரு. குணா அமுதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. திரு. குணா அமுதன் சரியாக சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 3. நல்ல விமர்சனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin