வெள்ளி, 12 ஜூலை, 2013

Frangipani - அரும்பிலிருந்து அழகு மலராக..

Frangipani, Temple Tree எனப் பரவலாக அறியப்படும்   Plumeria,  ஏழெட்டு வகைகளில் குறுஞ்செடிகள், சிறு மரங்களில் பூக்கிறது. தமிழில் அரளி, நாவில்லா அரளி, அலரி, பாதிரிப்பூ, நாகவல்லிப்பூ போன்ற பெயர்களால் அறியப்படுகிறது. (முதலில் தலைப்பிட்டிருந்தபடி ‘சம்பங்கி’ அல்ல. Tuberose மலரே தமிழில் சம்பங்கி.) தேன் அற்ற இம்மலர்கள் இரவில் மணம் பரப்புகின்றன விட்டில் மற்றும் அந்துப் பூச்சிகளை ஈர்க்க.  தேனைத் தேடித் தேடி ஒவ்வொரு மலராக அமரும் பூச்சிகள் மகரந்தத்தைக் கடத்துகின்றன ஏமாந்தபடியே.

நடுவில் மஞ்சளும் இதழோரங்கள் வெண்மையிலுமாக இருக்கும் இம்மலர் அரும்பு விடுவதோ ஆழ் பழுப்பு வண்ணத்தில்..

#1 இளம் அரும்புகள்

#2 முறுக்கிப் பிழிந்த துவாலையாக.. வெண்மொட்டுகள்


#3 கொத்தாக..


#4 இளம் வெயிலில் இதழ் விரித்து..

#5 மின்னுகிறது பொன்னாக..
சின்னஞ்சிறு மலர்!
***

43 கருத்துகள்:

 1. அத்தனையும் அருமை!

  இதை சம்பங்கின்னா சொல்றாங்க?
  பாதிரிப்பூன்னு சொல்வாங்க இல்லையோ?

  சமீபத்தில் பாலிப்பயணத்தில் இந்தப்பூக்களை பலநிறங்களில் கண்டேன்.

  ஹப்பா....என்ன ஒரு மணம்!

  பூமாலை கட்டுறாங்க பாருங்க அதில் இருக்கும் வெள்ளைப்பூவை நில சம்பங்கி என்றும் ப்ச்சையும் மஞ்சளும் கலந்து இருக்கும் சின்னப்பூவை கொடி சம்பங்கின்னும் நாங்க சொல்வோம்.

  பதிலளிநீக்கு
 2. //இதை சம்பங்கின்னா சொல்றாங்க?// அதே கேள்விதான் எனக்கும்! :) இது நாவில்லா அரளி என எங்கூருப்பக்கம் சொல்லுவோம். இளமஞ்சளுக்குப் பதிலாக இளஞ்சிவப்பு நிறத்திலும் இந்தப் பூ இருக்கும். அழகான படங்கள்!

  பதிலளிநீக்கு
 3. யாருடைய கை?

  எம்புட்டு முக்கியமான கேள்வி கேட்டுட்டேன்!!!

  எங்க வீட்லயும் இந்த மரம் இருக்கு. ஆனால் இப்படி கவித்துவமெல்லாம் படைக்கத் தெரியவில்லை. :(

  பதிலளிநீக்கு
 4. @துளசி கோபால்,

  ஆம். நல்ல மணம் கொண்டது. இன்னொரு தமிழ் பெயரை அறிந்து கொண்டேன். நன்றி.

  Frangipani, இந்தியாவில் Champa (சம்பா) எனவும், தமிழில் அதனையொட்டியே சம்பங்கி எனவும் அழைக்கப்படுகிறது என எண்ணுகிறேன். மற்ற வர்ணங்களில் இதுவரை நேரில் பார்த்ததில்லை. காண ஆசை:)!

  பதிலளிநீக்கு
 5. @Mahi,

  பாதிரிப்பூ, நாவில்லா அரளி.. புதிய பெயர்களை அறிந்து கொள்கிறேன். சம்பங்கி என இணையத்தில் தரப்பட்டிருந்தாலும், அதிகமாக இப்பெயரில் அழைக்கப்படுவதில்லை போலும். நன்றி மஹி:)!

  பதிலளிநீக்கு
 6. @தருமி,

  ஃப்ளிக்கர் நண்பர்கள் சந்திப்பில் எடுத்த படம். பூ உயரத்தில் இருந்தபடியால் அதன் உள்பாகத்தைப் படமெடுக்க மற்றவர்களுக்கு உதவினார் இப்படி, நண்பர் ஜோ. நன்றி தருமி sir. உங்கள் தோட்டத்து மலர்களின் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 7. படமும் விளக்கமும் கொள்ளை அழகு..

  பதிலளிநீக்கு
 8. சம்பங்கிப்பூவின் அழகான பருவ் மாற்ற்ங்களை சூப்பராகக் காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. படத்தில் இருப்பது பொதுவாக அரளி எனப்படும். Plumeria இனத்தில் இதுவும் ஒன்று. சம்பங்கி என்பது Magnolia champaca எனப்படும். சம்பங்கியும் Plumeria இனத்தில் ஒன்று. சம்பங்கியின் தமிழ்ப் பெயர் சண்பகம்.

  பதிலளிநீக்கு
 10. ஒவ்வொரு கட்டமாக மலர் மலர்வதைக் கண்டதில் மகிழ்ச்சி. அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
 11. இதை ”நாகவல்லிப்பூ” எனச் சொல்வோம்.

  பள்ளி நாட்களில் வீட்டுக்கு வரும் வழியில் இந்த பூக்களை எடுத்து இதழ்களை பின்பக்கமாக மடித்து காம்பில் சொருகி மோதிரம் செய்து போட்டுக் கொள்வேன்...:) மீண்டும் அசை போட்டதில் மகிழ்ச்சி...:))

  படங்கள் தங்கள் கைவண்ணத்தில் அழகோ அழகு..

  பதிலளிநீக்கு
 12. சம்பங்கி அழகிய படங்களாய் அழகாய் சிரிக்கிறது அக்கா...

  பதிலளிநீக்கு
 13. அருமையான படங்கள். சிறுவயதில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மயக்கும் மணத்துடன் இருந்த இந்த மலர்ச்செடியை பாம்பு வருகிறது என்று அப்புறம் கழித்து விட்டார்கள்!

  பதிலளிநீக்கு
 14. மொட்டு மலர்ந்ததே. மலர் மலரும் அழகுக்காட்சி. இயற்கையின் ரகசியங்களை புகைப்படம் வெளிக்காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 15. மொட்டிலிருந்து மலர் வரை பூவின் வளர்ச்சியை அழகாய் படம்பிடித்து இருக்கீங்க....

  ரசித்தேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அரளி என்றே பரவலாக அறியப்படுகிறது போலும். விக்கிப்பீடியாவில் Magnolia champaca சண்பகம் எனக் காட்டப்பட்டிருப்பதிலுள்ள பூ வேறு மாதிரியாக உள்ளதே, (இணையத் தேடலிலும்). இதை நாகவல்லி என அழைப்போம் இங்கே. வாசம் இன்னும் அதிகமாய் இருக்கும். ஸ்ரீராம் சொல்லியிருப்பது போது சர்ப்பங்களை ஈர்க்கும் என்றும் சொல்வார்கள். நில சம்பங்கி என்பது வேறுயினம் கிளைகளில்லாமல் கிழங்கிலிருந்து வளர்ப்பது என்றும், கொடி சம்பங்கி என்பதும் வேறு மிகச்சிறு குவளை மலர் போல் இளம் பச்சை நிறத்துடன் மணமான பூ, பந்தலில் பூக்கும் என்றும் திரு N D லோகசுந்தரம் அவர்கள் அறியத் தந்திருக்கிறார் குழுமத்தில். குழப்பம் தவிர்க்க தலைப்பை ஆங்கிலத்திலேயே வைத்து விட்டேன்:)!

  நன்றி ஆன்டன்:)!

  பதிலளிநீக்கு
 17. @கோவை2தில்லி,

  பல வகைகள் போலவே பல பெயர்களும் இருக்கின்றன ஆதி. படங்கள் நினைவுகளை மலரச் செய்ததில் மகிழ்ச்சி. நன்றி ஆதி:)!

  பதிலளிநீக்கு
 18. @ஸ்ரீராம்.,

  சர்ப்பங்களை ஈர்ப்பதால்தான் நாகவல்லி என்றும் சொன்னார்களோ? சண்பகப்பூவை கன்னடத்தில் sampige என்பார்கள். பெங்களூர் மல்லேஷ்வரத்தின் பிரதான சாலையின் பெயரும். நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு

 19. Tamilcube.com தளத்தில் சம்பங்கி எனத் தரப்பட்டிருந்தாலும், தமிழில் அரளி, நாவில்லா அரளி, பாதிரிப்பூ, நாகவல்லிப்பூ போன்ற பெயர்களால் அறியப்பட்டு வருகிறது. எது சரியான தமிழ்ப் பெயர் என்பதில் குழப்பம் இருப்பதால் பதிவின் தலைப்பை ஆங்கிலத்துக்கு மாற்றி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 20. பூக்கள் எப்படியாயினும் அழகுதான்! சம்பங்கிக்கு தனி நிறம் மணம்! நல்ல இடுகை ராமலஷ்மி

  பதிலளிநீக்கு
 21. Beautiful series!

  seemai arali,perumal arali in tamil, deva ganneru in telugu.

  In polynesia,single seeking relationship worn it n right ear,committed in the left:)

  பதிலளிநீக்கு
 22. ராமலக்ஷ்மி, இந்த மலர் எங்கள் வீட்டிலும் இருக்கிறது.
  இறைவனுக்கு வைக்க முடியாது என்று கேள்வி.
  சம்பங்கியா இது!!டெம்பிள் ட்ரீ என்று நினைத்தேன்.
  நல்ல வாசம்.முகர்ந்தால் மயக்கமே வரும்.:)
  தருமி சொல்லீருப்பது போல அழகிருந்து என்ன பயன் . அதைக் கவியாகத் தர தெரியவில்லையே

  பதிலளிநீக்கு
 23. @ராமலக்ஷ்மி
  திருத்தம்: இது அலரி (Temple tree or Plumeria rubra). பெளத்தர்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலங்கை பிரதமர் இல்லம் அலரி மாளிகை எனப்படும். http://en.wikipedia.org/wiki/Prime_Minister's_House_(Colombo)

  பதிலளிநீக்கு
 24. @ஷைலஜா,

  மணமும் நிறமும். ஆம், ஷைலஜா, நன்றி:)! அரளிப்பூ இது.

  பதிலளிநீக்கு
 25. @வல்லிசிம்ஹன்,

  சம்பங்கி Frangipani வகைகளில் ஒன்று. எனவேதான் தலைப்பை மாற்றி விட்டேன். இது நீங்கள் சொல்லியிருக்கும் டெம்பிள் ட்ரீதான். Anton தெளிவு படுத்தியிருக்கிறார் அடுத்து.

  நன்றி வல்லிம்மா:)!

  பதிலளிநீக்கு
 26. @Anton,

  Temple tree. ஆம். Plumeria rubra வகையைச் சேர்ந்தது. அலரி என்பதே அரளி மற்றும் அலறி என்பதும் எனக் கூறுகிறது தமிழ் அகராதியும். பதிவிலும் சேர்த்து விட்டேன். இதன் பெயரில் மாளிகையே இருக்கிறதா உங்கள் நாட்டில்:)? மீள் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி ஆன்டன்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin