Tuesday, April 6, 2010

போகுமிடம் வெகுதூரமில்லை-PiT-ன் இந்த வார சிறந்த படமாக

3 ஏப்ரல் 2010, PiT தளத்தில் இந்த வார சிறந்த படமாக கீழ் வரும் எனது படம் பரிசு பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி PiT!

போகுமிடம் வெகுதூரமில்லை

PiT தளத்தில் வாழ்த்தியிருந்தவர்களுக்கும், Flickr தளத்தில் போற்றியிருந்தவர்களுக்கும் இங்கும் என் நன்றிகள்.

இப்படத்துக்கு நான் செய்த பிற்தயாரிப்பு, PiT-ல் கற்ற பாடமே.

இந்த வார சிறப்புப் படம் எப்படித் தேர்வாகிறது?
தெரியாத சிலருக்காக இந்தத் தகவல்கள்:

நீங்கள் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமுள்ளவரா? எடுத்த படங்களை மற்ற ஆர்வலர்கள், வல்லுநர்கள், நண்பர்களுடன் பகிர்ந்திட விருப்பமா? Flickr-ல் ஒரு கணக்கை ஆரம்பியுங்கள். இது ஒரு இலவசச் சேவையே. கூடுதல் வசதிகள் தேவையெனில் பணம் செலுத்தி Pro Account ஆக்கிக் கொள்ளலாம்.

அடுத்து PiT Group-ல் இணைந்திடுங்கள். அதன் பின்னர் அங்கு நீங்கள் பதிகின்ற படங்களில் பிடித்தவற்றை PiT Group-ல் சேர்த்து வரலாம். ஒரு நாளுக்கு இரண்டுவரை அனுமதி. இணைக்கும் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக மற்ற படங்களுக்கு கமெண்ட் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் உங்களால் இரண்டு கமெண்டுகளுடன் நிறுத்த முடியாது என்பது அங்குள்ள அழகுப் படங்கள் செய்யும் மாபெரும் சதி:)!

PiT Group படங்களை இந்தத் தளத்திலும் நீங்கள் கண்டு ரசிக்கலாம்: Flickriver .

இப்படியாக சேர்க்கப்படும் படங்களில் சிறந்த ஒன்றிரண்டைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ‘இந்தவார சிறந்தபடம்’ என PiT தளத்தில் அறிவிக்கிறார்கள் PiT குழுவினர். குழுவிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரம் நடுவராக செயல் படுகிறார்கள்.

PiT group-ல் இணைவதில் என்னென்ன நன்மைகள்? பார்வைக்காக வைக்கப்படும் படங்களிலுள்ள நிறைகுறைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டிக் கொள்கிறார்கள். ஆலோசனைகள் வழங்கிக் கொள்கிறார்கள். இந்த முறை நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் எப்படி படங்கள் எடுக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கவனித்து வருவதும் ஒரு சிறந்த பயிற்சியே. அடுத்தமுறை நாம் படம் எடுக்கையில் கோணங்கள் முதற்கொண்டு நாம் பார்த்தவை கை கொடுக்கும்.

அதே போல PiT நடத்தும் மாதப் போட்டிகளில் கலந்து கொள்ளும் படங்களைக் கவனிப்பதும் இவ்வகைப் பயிற்சிக்கு மிகவும் உதவுகின்றன. கடந்த மாதப் போட்டியான ‘ஒற்றை’ தலைப்புக்குக் கலந்து கொண்டவர் எண்ணிக்கை 91. கடைசி தினம் வரை 'ஜே ஜே'தான். ஒவ்வொரு நாளும் எத்தனை புது எண்ட்ரி என நம் மக்களும் சளைக்காமல் காத்திருந்து, பார்த்துப் பார்த்துக் கமெண்ட் மழை பொழிந்தார்கள்.

ஒவ்வொரு சுற்றிலும் முன்னேறிய படங்களையும், விலக நேர்ந்த படங்களையும் சிரத்தையுடன் விமர்சித்திருந்தார் கருவாயன். ஆர்வமுள்ளவர்கள், பரிசு என்பதைத் தாண்டி, ‘கற்றுக் கொள்ள’ எனும் நோக்கத்துடன் இதற்காகவே கலந்து கொள்ளலாம்.

சரி, இந்த மாதப் போட்டித் தலைப்பு என்ன தெரியுமா? ‘தண்ணீர்’! ஏற்கனவே கச்சேரி இங்கே களைகட்ட ஆரம்பித்து விட்டது. வாங்க நாமும் ‘பிட்’டுக்குத் தண்ணி காட்டலாம்:)! கடைசித் தேதி:15 ஏப்ரல் 2010.

96 comments:

 1. வெற்றியின் ரகசியத்து பிட்..டு ,பிட்..டு வைத்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துகள் மேடம் சந்தோஷம்

  புகைப்படக்கலையில் மேற்கொண்டு தாங்கள் செய்ய இருக்கும் முயற்சிகளையும் சொன்னால் நன்றாக இருக்கும்...

  இந்த மாத தலைப்பு தண்ணீரா? ஏப்ரல்ல போயி தண்ணீருக்கு எங்க போயி தேடுறது ?
  தலைப்ப மாத்துங்க பாஸ்...

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை .வாழ்த்துக்கள் ! பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் .........

  ReplyDelete
 4. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வண்ணம்.வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 5. வாழ்த்துகள் மேடம். மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 6. அற்புதம். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நல்வாழ்த்துகள் கலக்கல் படம் !

  ReplyDelete
 8. மிக்க மகிழ்ச்சி
  அருமை .
  வாழ்த்துகள்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்.படம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.

  ReplyDelete
 10. அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 11. பகிர்தலுக்கு நன்றி... அந்தப்படம் அருமையா இருக்குங்க...

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்,ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 14. இந்தப் ஒளிப் படத்தைப் பார்த்ததும் கடல் மீன்கள் படத்தில் இடம் பெற்ற தாலாட்டுதே வானம் பாடல் காட்சி நினைவுக்கு வந்தது.(திரைப்படத்தின் பாடல்காட்சியை உதாரணமாக சொன்னது பிடிக்கவில்லை என்றால் மன்னிக்கவும்.)

  ReplyDelete
 15. வாழ்த்துகள்.படம் அருமையா இருக்கு.

  ReplyDelete
 16. ரம்யமான படம். வாழ்த்துக்கள், அக்கா!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்...

  ஆனால் உங்களால் இரண்டுடன் நிறுத்த முடியாது என்பது அங்குள்ள அழகுப் படங்கள் செய்யும் மாபெரும் சதி:)!//

  !!!!

  சரி, இந்த மாதப் போட்டித் தலைப்பு என்ன தெரியுமா? ‘தண்ணீர்’!//


  அது சரி, கிடைக்காத ஒண்ணை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுவதுதான் திறமை..... இல்லையா?

  ReplyDelete
 18. அருமையாய் இருக்கு சகா!

  கலக்குங்க.

  ReplyDelete
 19. அருமை!!வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 20. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்! நீங்க சொன்ன flickr details ரொம்ப பிடிச்சிருக்கு. படம் அனுப்பிடவேண்டியதுதான். தகவலுக்கு நன்றி மேடம்!!!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்.

  //பரிசு என்பதைத் தாண்டி, ‘கற்றுக் கொள்ள’ எனும் நோக்கத்துடன் இதற்காகவே கலந்து கொள்ளலாம்.//

  அதே ! அதே !!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் அக்கா..

  தண்ணீர் அவசியமான தலைப்புத்தான்.

  ReplyDelete
 23. வாழ்த்துகள் மேடம் வாழ்த்துகள் மேடம். மிக்க மகிழ்ச்சி..

  நேரம் கிடைக்கும்போது பார்வையிடுக.

  http://fmalikka.blogspot.com

  ReplyDelete
 24. வாழ்த்துகள் :)

  ReplyDelete
 25. பிட்டுக்கே தண்ணியா :-)
   
  படம் அருமை.. மகிழ்ச்சியும்  வாழ்த்துகளும்..

  ReplyDelete
 26. உங்க பொழுது போக்கை நல்ல இடுகையா வெளியிட்டு இருப்பது அருமை..ராமலெக்‌ஷ்மி படம் சூப்பர்

  ReplyDelete
 27. படம் நல்லா இருக்கு.. உங்களிடம் படம் எடுப்பதில் நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள் .. எனக்கும் பல விசயங்களில் ஆர்வம் உண்டு இந்த புகைப்படம் எடுப்பதில் கூட ஆனால் அதை பின்பற்றுவது தான் இல்லை.

  ஆனால் இணையத்தில் அதிக ஆர்வம் அதை மட்டும் சரியாக பின் பற்றி வருகிறேன் ;-)

  ReplyDelete
 28. ரெம்ப நல்லா இருக்குங்க படம். அதுவும் அந்த ஒளி கதிர்களின் அழகு வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி! :)

  சரிங்க பரிசுத்தொகை எவ்ளோ? எனக்கென்னவோ இந்த புகைப்படங்களுக்கு நெறைய மதிப்பு இருக்கும்னு தோனுது. காப்பி ரைட்ஸ்லாம் கவனமா ப்ரட்டெக்ட் பண்ணி வைங்க!

  I think it was British Chemist, namely, A J Birch who discovered Birch reduction who made a fatal error of not protecting the rights for his discovery. I heard that he did not patent one of his discoveries and later, he felt bad for it. He could have become of multi-millionaire if he had done that patent. Later someone else used his original idea with some modifications and patented that and made tons of money.

  Anyway, any original creation like this- your own photograph -is something different from "copy paste" materials :) One would not know its value until the "right person" notices it and values it :)

  ReplyDelete
 30. நல்ல விளக்கம்.

  உங்கள் படம் அருமை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் அக்கா!

  படம் அருமை.

  ReplyDelete
 32. goma said...

  //வெற்றியின் ரகசியத்து பிட்..டு ,பிட்..டு வைத்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்//

  பிட்டு பிட்டு வைத்தது பலருக்கும் பயனாகியுள்ளது. குறிப்பாக பிட் போட்டிகளில் நம்மைப் பிரமிக்க வைக்கும் அமல் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்:)!
  நன்றி கோமா.

  ReplyDelete
 33. ப்ரியமுடன்...வசந்த் said...

  //வாழ்த்துகள் மேடம் சந்தோஷம்//

  நன்றி.

  //புகைப்படக்கலையில் மேற்கொண்டு தாங்கள் செய்ய இருக்கும் முயற்சிகளையும் சொன்னால் நன்றாக இருக்கும்...//

  காமெடி கீமடி:))? அப்படியெல்லாம் ஏதுமில்லை வசந்த்:)!

  //இந்த மாத தலைப்பு தண்ணீரா? ஏப்ரல்ல போயி தண்ணீருக்கு எங்க போயி தேடுறது ?
  தலைப்ப மாத்துங்க பாஸ்...//

  ஏற்கனவே எடுத்த தண்ணிய காட்டிற வேண்டியதுதான்னு இருக்கிறேன்:)!

  ReplyDelete
 34. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  //அனைத்தும் அருமை .வாழ்த்துக்கள் ! பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் .........//

  நல்லது. நன்றி சங்கர்.

  ReplyDelete
 35. திகழ் said...

  //வாழ்த்துகள்//

  மிக்க நன்றி திகழ்.

  ReplyDelete
 36. ராஜ நடராஜன் said...

  //உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வண்ணம்.வாழ்த்துக்கள் மேடம்.//

  பிற்தயாரிப்பில் கிடைத்த தகதகப்பு. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 37. அமுதா said...

  //வாழ்த்துகள் மேடம். மிக்க மகிழ்ச்சி//

  நன்றி அமுதா.

  ReplyDelete
 38. மோகன் குமார் said...

  //அற்புதம். வாழ்த்துக்கள்//

  பிடித்ததா:)? நன்றி.

  ReplyDelete
 39. கோவி.கண்ணன் said...

  //நல்வாழ்த்துகள் கலக்கல் படம் !//

  மிக்க நன்றிங்க:)!

  ReplyDelete
 40. நண்டு@நொரண்டு -ஈரோடு said...

  //மிக்க மகிழ்ச்சி
  அருமை .
  வாழ்த்துகள்//

  நன்றி நன்றி.

  ReplyDelete
 41. அமைதிச்சாரல் said...

  //வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்.படம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.//

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  ReplyDelete
 42. அம்பிகா said...

  //அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  வாங்க அம்பிகா. நன்றி:)!

  ReplyDelete
 43. க.பாலாசி said...

  //பகிர்தலுக்கு நன்றி... அந்தப்படம் அருமையா இருக்குங்க...//

  நன்றி பாலாசி. உங்கள் வலைச்சர வாரம் அருமையாகச் செல்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 44. கோமதி அரசு said...

  //வாழ்த்துக்கள்,ராமலக்ஷ்மி.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 45. Mrs.Menagasathia said...

  //வாழ்த்துக்கள்!!//

  நன்றி மேனகா!!

  ReplyDelete
 46. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  //இந்தப் ஒளிப் படத்தைப் பார்த்ததும் கடல் மீன்கள் படத்தில் இடம் பெற்ற தாலாட்டுதே வானம் பாடல் காட்சி நினைவுக்கு வந்தது.(திரைப்படத்தின் பாடல்காட்சியை உதாரணமாக சொன்னது பிடிக்கவில்லை என்றால் மன்னிக்கவும்.)//

  இந்தப் பதிவுக்கான தலைப்பே ஒரு திரைப்பாடல்தான்:)! வருகைக்கு நன்றி சரவணன்.

  ReplyDelete
 47. malarvizhi said...

  //வாழ்த்துகள்.படம் அருமையா இருக்கு.//

  நன்றி மலர்விழி. உங்கள் படங்களை ஃபிளிக்கர் தளத்தில் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 48. Chitra said...

  //ரம்யமான படம். வாழ்த்துக்கள், அக்கா!//

  சித்ராவுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி சித்ரா.

  ReplyDelete
 49. ஸ்ரீராம். said...

  //வாழ்த்துக்கள்...//

  நன்றி.

  ***/ஆனால் உங்களால் இரண்டுடன் நிறுத்த முடியாது என்பது அங்குள்ள அழகுப் படங்கள் செய்யும் மாபெரும் சதி:)!//

  !!!!/***

  இரண்டு படம் போஸ்ட் செய்தால் இரண்டுக்கு கருத்து சொல்லணும். வந்து பாருங்களேன் உங்களாலே அப்படி நிறுத்திட முடிகிறதா என்று. என் கட்சியில்தான் சேருவீர்கள்:)!

  ***/ சரி, இந்த மாதப் போட்டித் தலைப்பு என்ன தெரியுமா? ‘தண்ணீர்’!//


  அது சரி, கிடைக்காத ஒண்ணை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுவதுதான் திறமை..... இல்லையா?/***

  உண்மைதான். தேடிப் போய் இதற்கென புதிதாய் முயற்சி செய்து எடுப்பவர்களை எப்போதும் பிட் குழுவினர் பாராட்டத் தவறுவதில்லை. ஹி பெரும்பாலானோர் [நானும் சேர்த்தி] ஏற்கனவே எடுத்ததை டக்குன்னு சப்மிட் பண்ணிடுவோம்:))!

  ReplyDelete
 50. பா.ராஜாராம் said...

  //அருமையாய் இருக்கு சகா!

  கலக்குங்க.//

  ஆகா, நன்றி பா ரா!

  ReplyDelete
 51. எஸ்.ஏ.சரவணக்குமார் said...

  //அருமை!!வாழ்த்துக்கள் !!!//

  நன்றி சரவணக்குமார்!!

  ReplyDelete
 52. வாவ்... அழகான புகைப்படம். வாழ்த்துக்கள்!
  மேலும் PiT தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 53. வாழ்த்துகள். அழகான படம்.

  ReplyDelete
 54. பிட்..டு பிட்டு என்பதன் விளக்கம்,
  PIT இஸ் த சீக்ரெட் ஆஃப் மை சக்சஸ் என்பதைத்தான் பிட்டு பிட்டு என்று பாராட்டினேன்

  ReplyDelete
 55. வாவ்! சூப்பர் படம்!
  வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 56. அருமையான புகைப்படம்.. எனக்கு ரொம்பப் பிடித்தது..

  கேரளப் படகை எங்கிருந்து படம் எடுத்தாலும் அழகாக விழுகிறது.. என்னிடமும் சில படங்கள் உள்ளன...

  இதை நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும்..

  நன்றி..

  ReplyDelete
 57. அருமையானப் படம், நல்லதோர் வழிகாட்டுதல்.
  நன்றி.

  ReplyDelete
 58. Amal said...

  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்! நீங்க சொன்ன flickr details ரொம்ப பிடிச்சிருக்கு. படம் அனுப்பிடவேண்டியதுதான். தகவலுக்கு நன்றி மேடம்!!!//

  ஃப்ளிக்கரில் பிட் க்ரூப்புக்கு நீங்கள் படம் அனுப்ப ஆரம்பித்து விட்டதைக் கவனித்தேன் அமல். பதிவு உங்களுக்கு பயனானதில் மிக்க மகிழ்ச்சி:)!

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 59. துபாய் ராஜா said...

  // வாழ்த்துக்கள்.//

  நன்றி துபாய் ராஜா.

  ReplyDelete
 60. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //க்ரேட்டு :)//

  தேங்க்ஸு :)!

  ReplyDelete
 61. சதங்கா (Sathanga) said...

  //வாழ்த்துக்கள்.//

  நன்றி சதங்கா.

  *** //பரிசு என்பதைத் தாண்டி, ‘கற்றுக் கொள்ள’ எனும் நோக்கத்துடன் இதற்காகவே கலந்து கொள்ளலாம்.//

  அதே ! அதே !!//***

  கூடவே ‘ரசிக்க’ என்பதையும் சேர்த்துக் கொள்வோம்:)!

  ReplyDelete
 62. சுசி said...

  //வாழ்த்துக்கள் அக்கா..

  தண்ணீர் அவசியமான தலைப்புத்தான்.//

  நன்றி சுசி. தண்ணீரின் அவசியத்தைப் பற்றி பதிவு இட்டாயிற்று. இனி இருக்கிற தண்ணீர் படங்களைக் காட்டிட வேண்டியதுதான்:)!

  ReplyDelete
 63. அன்புடன் மலிக்கா said...
  //வாழ்த்துகள் மேடம். மிக்க மகிழ்ச்சி..//

  நன்றி மலிக்கா. உங்கள் வலைப்பூவை அவசியம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 64. Jeeves said...

  //வாழ்த்துகள் :)//

  நன்றி:)!

  ReplyDelete
 65. "உழவன்" "Uzhavan" said...

  //பிட்டுக்கே தண்ணியா :-)//

  ஆமாம், காட்டிடுறேன் இன்றைக்கே.

  //படம் அருமை.. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்..//

  மிக்க நன்றி உழவன்.

  ReplyDelete
 66. thenammailakshmanan said...

  //உங்க பொழுது போக்கை நல்ல இடுகையா வெளியிட்டு இருப்பது அருமை..ராமலெக்‌ஷ்மி படம் சூப்பர்//

  ஆர்வமுள்ளவர்களுக்கு பயனாகுமில்லையா? அதற்கே இந்தப் பதிவு. மிக்க நன்றி தேனம்மை.

  ReplyDelete
 67. கிரி said...

  // படம் நல்லா இருக்கு.. உங்களிடம் படம் எடுப்பதில் நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள் .. எனக்கும் பல விசயங்களில் ஆர்வம் உண்டு இந்த புகைப்படம் எடுப்பதில் கூட//

  உங்கள் பதிவுகளில் நீங்கள் எடுத்த பல அருமையான படங்களை நான் பார்த்திருக்கிறேனே!

  //ஆனால் அதை பின்பற்றுவது தான் இல்லை.//

  அப்படி சொல்லுங்கள்:)! இனி முயற்சிக்கலாமே நேரம் இருந்தால்!

  //ஆனால் இணையத்தில் அதிக ஆர்வம் அதை மட்டும் சரியாக பின் பற்றி வருகிறேன் ;-)//

  ஏதாவது ஒன்றில் ஆர்வம் இருக்க வேண்டியது அவசியம். அதுதான் நம்மை உற்சாகமாய் வைத்திருக்கும். சரிதானே கிரி?

  தொடர்ந்து என் எல்லா புகைப்படப் பதிவுகளையும் கவனித்து வரும் உங்கள் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 68. அப்பாவி தங்கமணி said...

  //ரெம்ப நல்லா இருக்குங்க படம். அதுவும் அந்த ஒளி கதிர்களின் அழகு வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்//

  படம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி தங்கமணி. மிக்க நன்றி.

  ReplyDelete
 69. வருண் said...

  //வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி! :)//

  நன்றி வருண்:)!

  //சரிங்க பரிசுத்தொகை எவ்ளோ? எனக்கென்னவோ இந்த புகைப்படங்களுக்கு நெறைய மதிப்பு இருக்கும்னு தோனுது. காப்பி ரைட்ஸ்லாம் கவனமா ப்ரட்டெக்ட் பண்ணி வைங்க!//

  அறிவிப்பே கெளரவிப்பு. பரிசு. படங்களின் மதிப்பு பற்றியெல்லாம் தெரியாது:)! இதுபோன்ற படங்களை மொத்தமாகத் தூக்கி தங்கள் தளத்தில் சிலர் போட்டுக் கொள்வதாகக் கேள்வி. பலர் சிரமப்பட்டு எழுதிய சமையல் குறிப்புகள் அப்படியாகி உள்ளன. அதற்குதான் இந்தக் காப்பி ரைட்:)!

  //I think it was British Chemist, namely, A J Birch who discovered Birch reduction who made a fatal error of not protecting the rights for his discovery. I heard that he did not patent one of his discoveries and later, he felt bad for it. He could have become of multi-millionaire if he had done that patent. Later someone else used his original idea with some modifications and patented that and made tons of money.//

  சினிமா உலகில் கதாசிரியர்களுக்கு அடிக்கடி நடப்பது போல என்று சொல்லுங்கள்.

  //Anyway, any original creation like this- your own photograph -is something different from "copy paste" materials :)//

  பதில் ஏற்கனவே சொல்லிட்டேன்:(!

  //One would not know its value until the "right person" notices it and values it :)//

  இது ரொம்ப சரி:)! கருத்துக்களுக்கு நன்றி வருண்.

  ReplyDelete
 70. SurveySan said...

  //Danks!//

  நாங்கள்தான் சொல்லணும்:)!

  //great picture;//

  மிக்க நன்றி சர்வேசன்:)!

  ReplyDelete
 71. ஆ.ஞானசேகரன் said...

  //வாழ்த்துக்கள்...//

  நன்றி.

  ReplyDelete
 72. சாய்ராம் கோபாலன் said...

  //வாழ்த்துக்கள்//

  நன்றி சாய்ராம் ‘எங்கள் Blog’-ன் இந்தவார Sunday பதிவில் நீங்கள் எனக்கு வழங்கியிருந்த பாராட்டுக்கும்:)!

  ReplyDelete
 73. சே.குமார் said...

  //நல்ல விளக்கம்.

  உங்கள் படம் அருமை.

  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி குமார்.

  ReplyDelete
 74. சுந்தரா said...

  //வாழ்த்துக்கள் அக்கா!

  படம் அருமை.//

  நன்றி சுந்தரா.

  ReplyDelete
 75. Priya said...

  //வாவ்... அழகான புகைப்படம். வாழ்த்துக்கள்!
  மேலும் PiT தகவலுக்கு நன்றி!//

  நன்றி ப்ரியா. வந்திடுங்க PiT பக்கம்:)!

  ReplyDelete
 76. விக்னேஷ்வரி said...

  // வாழ்த்துகள். அழகான படம்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 77. goma said...

  //பிட்..டு பிட்டு என்பதன் விளக்கம்,
  PIT இஸ் த சீக்ரெட் ஆஃப் மை சக்சஸ் என்பதைத்தான் பிட்டு பிட்டு என்று பாராட்டினேன்//

  அப்படியா:)? மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 78. செந்தமிழ் செல்வி said...

  //வாவ்! சூப்பர் படம்!
  வாழ்த்துக்கள் சகோதரி!//

  உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 79. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  //அருமையான புகைப்படம்.. எனக்கு ரொம்பப் பிடித்தது..//

  நன்றி பிரகாஷ்.

  //கேரளப் படகை எங்கிருந்து படம் எடுத்தாலும் அழகாக விழுகிறது.. என்னிடமும் சில படங்கள் உள்ளன...//

  பகிர்ந்திடுங்களேன் விரைவில்.

  //இதை நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும்..

  நன்றி..//

  அதற்குதான் PiT உதவுகிறது. போட்டிகள் மூலம் ஊக்கம் தருகிறது:)!

  ReplyDelete
 80. அமைதி அப்பா said...

  //அருமையானப் படம், நல்லதோர் வழிகாட்டுதல்.
  நன்றி.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 81. மின் மடலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'போகுமிடம் வெகுதூரமில்லை-PiT-ன் இந்த வார சிறந்த படமாக' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th April 2010 12:56:02 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/219652

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழ் மணத்தில் வாக்களித்த 11 பேர்களுக்கும் தமிழிஷில் வாக்களித்த 25 பேர்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 82. எப்படி புகைப்படங்களை அனுப்புவது...? பிகாஸாவில் நேரடியாக அப்லோட் செய்ய முடியுமா...? என்னுடைய படங்கள் என்னுடைய பிகாஸாவில் உள்ளன...

  ReplyDelete
 83. @ பிரகாஷ்,

  இந்த வாரப் புகைப்படமாக உங்கள் படம் தேர்வாக,படங்கள் ஃபிளிக்கர் தளத்தில் ஏற்றப்பட்டு, அங்கிருக்கும் பிட் க்ரூப்பில் இணைக்கப்பட வேண்டும். பதிவிலேயே அதற்கான சுட்டிகள் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.

  தலைப்புடன் நடத்தப்படும் மாதப் போட்டிகளில் கலந்து கொள்வதானால் மெயிலில் படங்கள் அனுப்ப வேண்டும். அதன் விவரங்கள் இங்கே:PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்

  ReplyDelete
 84. நன்றி... இப்போது இருக்கும் புகைப் படங்கள் சரியாக இருக்காது.. புதிதாக எடுக்க வேண்டும்..

  ReplyDelete
 85. சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியது இந்தப்பதிவு. நன்றி.

  ReplyDelete
 86. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  //நன்றி... இப்போது இருக்கும் புகைப் படங்கள் சரியாக இருக்காது.. புதிதாக எடுக்க வேண்டும்..//

  நல்லது பிரகாஷ். சீக்கிரம் களத்தில் இறங்குங்கள்:)! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 87. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியது இந்தப்பதிவு. //

  நன்றி ஆதி.

  ReplyDelete
 88. உங்க புண்ணியத்துல flickr ல அக்கவுண்ட் ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நல்லாருக்கு. தேங்க்ஸூ.. என் சந்தோஷத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி விட்ருக்கீங்க. இதே மாதிரி வேற ஏதாவது உபயோகமான இடத்துல சேத்து விடுங்களேன்.


  "எஸ்கா".

  (யூத்ஃபுல் விகடன் டாட் காம், தமிழ்வணிகம் டாட் காம், உயிரோசை டாட் காம் ஆகிய வலைதளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றில் வெளியான என்னுடைய கட்டுரைகளை தொகுத்து என் ப்ளாக்கில் பதிவேற்றியுள்ளேன். எனது ப்ளாக் முகவரி http://yeskha.blogspot.com/ வரவேற்கிறேன்.)

  ReplyDelete
 89. @ எஸ்கா,

  மிக்க மகிழ்ச்சி:)! அப்படியே பிட் பூலில் படங்களை தவறாமல் இணைத்து வாருங்கள். தங்கள் வலைப்பூவையும் அவசியம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 90. ஆஹா, மிக்க மகிழ்ச்சி. அன்புக்கு நன்றி. நிறைய எழுத ஆசை. இன்னோரு விஷயம். நானும் ஆங்கில இலக்கியம் தான். எம்.ஏ.எம்.ஃபில்..

  "எஸ்கா".

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin