திங்கள், 5 டிசம்பர், 2011

அழகன் - நவீன விருட்சத்தில்..



அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்

ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின

தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது

தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை

கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்

இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்

நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று

பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்

நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை

அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.
***

14 நவம்பர் 2011 நவீன விருட்சம் இதழில்
.., நன்றி நவீன விருட்சம்.

46 கருத்துகள்:

  1. உள்ளதை உள்ளப்படி சொல்வது நிலைக் கண்ணாடி மட்டுமல்ல - கவிதையும் தான். நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  2. யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி தங்களின் கவிதை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. கனவில் மிதப்பவனை கண்ணாடி பிரதிபலித்தது அவலட்சணமாகவே... அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை ராமலக்ஷ்மி.

    கனவில் மகிழட்டும் அழகன்.

    நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.

    பதிலளிநீக்கு
  6. கனவிலா இவ்வளவும். அடப்பாவமே.
    அல்நாசரின் கோட்டை
    இடிந்த பொழுதில் இவனின் அவலட்சணமும் உரைக்கும்.
    உள்ளதை உள்ளபடி சொல்லும் கண்ணாடி முத்துச்சரம்.வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. கண்ணாடியைப்போல் கவிதையும் தெள்ளத்தெளிவாக பளிச் என்று உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. விடுங்க...கனவுலயாவது ரசிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  9. கனவு நாயகன் மிகவும் அழகன்தான் !

    பதிலளிநீக்கு
  10. எவ்வித முயற்சியுமின்றி கனவிலேயே வாழ்பவனின் அவல(ட்சண)த்தை அழகாகப் படம் பிடித்த கவிதை. நன்று, ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  11. இரண்டு மூன்று முறை வாசித்தேன்.அருமை.உங்கள் முத்திரை தெரிகிறது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பகல் கனவாக்கிக் கொள்ளும் வாழ்வின் உண்மை பிம்பத்தை கவிதை நன்றாக பிரதிபலிக்கின்றது.பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. "அழகன்" விருச்சத்தில் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. பொதுவாக கண்ணாடியை அதிகம் பார்க்கும் பழக்கமுடையவன் மனிதன். இவன் பார்க்க மறந்த கண்ணாடி இது! அல்லது பார்க்க மறுக்கும் கண்ணாடி!

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. //நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
    திரை தந்தப் போதையில்
    பகல் கனவும் பழக்கமாயிற்று//

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக்கெடுத்தவர்கள் இவர்கள் :-))

    நல்லா சாட்டையடி கொடுத்திருக்கீங்க இப்படிப்பட்ட ஆட்களுக்கு.

    பதிலளிநீக்கு
  17. தமிழ் உதயம் said...
    //உள்ளதை உள்ளப்படி சொல்வது நிலைக் கண்ணாடி மட்டுமல்ல - கவிதையும் தான். நல்ல கவிதை.//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  18. அமைதி அப்பா said...
    //யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி தங்களின் கவிதை என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  19. கணேஷ் said...
    //கனவில் மிதப்பவனை கண்ணாடி பிரதிபலித்தது அவலட்சணமாகவே... அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!//

    கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கோமதி அரசு said...
    //நல்ல கவிதை ராமலக்ஷ்மி.

    கனவில் மகிழட்டும் அழகன்.

    நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  21. Lakshmi said...
    //நல்ல கவிதை உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.//

    நன்றி லக்ஷ்மிம்ம்மா.

    பதிலளிநீக்கு
  22. வல்லிசிம்ஹன் said...//கனவிலா இவ்வளவும். அடப்பாவமே.
    அல்நாசரின் கோட்டை
    இடிந்த பொழுதில் இவனின் அவலட்சணமும் உரைக்கும்.
    உள்ளதை உள்ளபடி சொல்லும் கண்ணாடி முத்துச்சரம்.வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    நன்றி வல்லிம்மா:)!

    பதிலளிநீக்கு
  23. மோகன் குமார் said...
    /Nice. Good./

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  24. Rathnavel said...
    /நல்ல கவிதை.
    வாழ்த்துகள்./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சசிகுமார் said...
    /கவிதை நல்லா இருக்கு..../

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  26. ஸாதிகா said...
    /கண்ணாடியைப்போல் கவிதையும் தெள்ளத்தெளிவாக பளிச் என்று உள்ளது./

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  27. கோவை2தில்லி said...
    /நல்லதொரு கவிதை.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. விச்சு said...
    /விடுங்க...கனவுலயாவது ரசிக்கட்டும்./

    நன்றி:)!

    பதிலளிநீக்கு
  29. ஹேமா said...
    /கனவு நாயகன் மிகவும் அழகன்தான் !/

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  30. குமரி எஸ். நீலகண்டன் said...
    /அழகும் அவலட்சணமும் அழகான கவிதையாய்/

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  31. கவிநயா said...
    /எவ்வித முயற்சியுமின்றி கனவிலேயே வாழ்பவனின் அவல(ட்சண)த்தை அழகாகப் படம் பிடித்த கவிதை. நன்று, ராமலக்ஷ்மி!/

    நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  32. asiya omar said...
    //இரண்டு மூன்று முறை வாசித்தேன்.அருமை.உங்கள் முத்திரை தெரிகிறது.வாழ்த்துக்கள்.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  33. raji said...
    //பகல் கனவாக்கிக் கொள்ளும் வாழ்வின் உண்மை பிம்பத்தை கவிதை நன்றாக பிரதிபலிக்கின்றது.பகிர்விற்கு நன்றி//

    மிக்க நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  34. Rishvan said...
    /kavithai.. kannaadi... arumai..//

    மிக்க நன்றி ரிஷ்வன்.

    பதிலளிநீக்கு
  35. மாதேவி said...
    /"அழகன்" விருச்சத்தில் வாழ்த்துகள்./

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீராம். said...
    //பொதுவாக கண்ணாடியை அதிகம் பார்க்கும் பழக்கமுடையவன் மனிதன். இவன் பார்க்க மறந்த கண்ணாடி இது! அல்லது பார்க்க மறுக்கும் கண்ணாடி!//

    ஆம் பார்க்க விரும்பாத கண்ணாடிதான் போல. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  37. பாச மலர் / Paasa Malar said...
    //சாட்டையடிக்கவிதை..வாழ்த்துகள்//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  38. Kanchana Radhakrishnan said...
    //அருமையான கவிதை! வாழ்த்துகள்!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. அமைதிச்சாரல் said...

    //நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக்கெடுத்தவர்கள் இவர்கள் :-))

    நல்லா சாட்டையடி கொடுத்திருக்கீங்க இப்படிப்பட்ட ஆட்களுக்கு.//

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin