புதன், 28 அக்டோபர், 2026

இரண்டாம் பரிசு — கானல் அமீரகம் உலகளாவிய சிறுகதைப் போட்டி

 


கானல் அமீரகம் அமைப்பு நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் எனது “கீரிடம்” சிறுகதை இரண்டாம் பரிசு (ரூ. ஐந்தாயிரம்) பெற்றிருப்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி!

ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பின் எழுதிய கதை. தொடர்ந்து எழுதும் ஊக்கத்தை அளித்திருக்கும் வெற்றி :)

இந்தச் சிறுகதைப் போட்டிக்கு வந்த 448 கதைகளில்,

300, 100, 40, 25 என அடுத்தடுத்த கட்டங்களாகக் கதைகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் 15 கதைகள் பரிசுக்குத் தேர்வாகின.

“கானல் அமீரகம்” முகநூல் பக்கத்தில்...

போட்டி அறிவிப்பு: இங்கே

முதல் மூன்று இடங்கள் குறித்து இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு: இங்கே

மின்னஞ்சல் மூலமாகவும்:

வெற்றி பெற்றவையாகத் தேர்வான பிற 8 + 3 கதைகள் குறித்த அறிவிப்புகளையும், தங்கள் பணிகளுக்கு இடையே நடுவர்களாகச் செயலாற்றியவர்கள் பற்றி திரு. ஆசிப் மீரானின் விரிவான அறிமுகங்களையும் அதே பக்கத்தில் காணலாம்: இங்கே

கானல் அமீரகம் குழுவினருக்கும், நடுவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

வெற்றி பெற்றவர்களுக்கும், ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!

கானல் அமீரகம், பரிசு பெற்ற 15 கதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட உள்ளது. அதற்கு முன் வெற்றி பெற்ற கதைகள் “பண்புடன்” மின்னிதழில் வெளியாக உள்ளன. அங்கு வெளியானதும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

**

முகநூலில் பகிர்ந்த ‘இப்பதிவில்’ வாழ்த்தியிருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

***

8 கருத்துகள்:

  1. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    தொடர்ந்து எழுதுங்கள். கதை, கவிதை எல்லாம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin