1.
மிதக்கும் சோப்புக் குமிழிகள்
அருகில் வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் மகிழ்ச்சி.
2.
பாதி கடித்த ஆப்பிள்
விரியத் திறந்த கதைப்புத்தகம்
3.
குழந்தை பென்சிலால் தட்டும் ஒலி
ஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவி
கற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக.
4.
மரத்தில் சிக்கியக் காற்றாடி
அந்தியில் உயர ஏறும் நிலா
விழ மறுக்கின்றன இரண்டும்.
5.
மேகங்களுக்குப் பின்னால் நிஜ சூரியன்
சுவரில் குழந்தையின் சாக்பீஸ் சூரியன்
நம்பிக்கை வரைகிறது தனது ஒளியை.
6.
மின்னும் நட்சத்திரங்கள்
விரல் நீட்டி எண்ணும் குழந்தை
கனவு காணும் இரவு.
7.
சேற்றில் காலடித் தடங்கள்
சூரிய ஒளியை ஏந்தும் சிறு கைகள்
புன்னகைக்கும் பூமி.
8.
காலை ஒளியில் புல்வெளி
தன் நிழலைத் துரத்தும் குழந்தை
வளரக் கற்கும் இருவர்.
9.
பெரிய கையைப் பற்றும் சிறிய கை
சேர்ந்து கடக்கிறார்கள் தெருவை
நம்பிக்கை எடையற்றது, அர்த்தமுள்ளது.
*
6 டிசம்பர் 2025, பண்புடன் இணைய இதழில்..,


ரசிக்க வைத்த கவிதைகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குகவிதைகள் அனைத்தும் நன்று. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குகவிதைகள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகடைசி கவிதை நம்பிக்கை கவிதை அருமை. பெரிய கையை பற்றும் சிறிய கை அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குபண்புடன் இணைய இதழில் இடம் பெற்றது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குகுறுங்கவிதைகள் அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநட்சத்திரம் என்பதைப் பார்த்ததும் நான் கல்லூரி சமயத்தில் எழுதிய ஒன்று நினைவுக்கு வருகிறது
ஏழையின் குடை என்ற தலைப்பில்
விண்ணில்தான் நட்சத்திரங்களா
என் குடையிலும்தான்
நட்சத்திர பங்களா
கீதா
‘ஏழையின் குடை’.. மிக அருமை. கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.
நீக்கு