ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

உங்களுக்கானவை

 #1

"காலம் கடப்பதில்லை. 
தொடர்கிறது."
_ Marty Rubin
(இரட்டைவால் குருவி - இளம் பறவை)
#2
"பாட விரும்புகிறவர்களுக்கு 
எப்போதும் 
பாடல் கிடைத்து விடுகிறது."
#சுவீடன் பழமொழி
[தேன் சிட்டு (பெண் பறவை)]

#3
"நீங்கள் சிறந்தவர் எனச் சிந்திப்பதில் அன்றி, 
உங்களை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்."
[செந்தூர்ப் பைங்கிளி]

#4
உங்களுக்கானவை 
உங்களைக் கண்டடையும்.
_ Imam Ali
[காட்டுச் சிலம்பன்]
#5
உங்கள் குறைபாடுகளுக்காக வாதிடுங்கள், 
ஆனால் அவை உங்களுடையவை என்பதில் 
உண்மையுடன் இருங்கள்.
_  Richard Bach
[இந்திய மைனா]
#6
"எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று உண்டு. 
நீங்கள் சற்றுப் பொறுமையாக அதைக் கண்டு பிடிக்க வேண்டும்."
[வெண்கன்னக் குக்குறுவான்]
**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 191
பறவை பார்ப்போம்.. - பாகம்: 111

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***





 

8 கருத்துகள்:

  1. கண்கள் சிவந்திருக்கும் அந்த முதல் பறவை என்ன பெயர் என்று குறிப்பிடவில்லையே!  காலம் கடக்கவில்லையே..  பெயர் போட்டு விடலாமோ!

    நமக்கான அறிவுரையை கிளி சற்று அகடுமையாகவே சொல்கிறது போலும்!

    அதென்ன இந்திய மைனா வணக்கம் வைக்கிறதா?  அருமை என்கிறதா?!

    பதிலளிநீக்கு
  2. இரட்டைவால் குருவி - இளம் பறவை! பதிவிலும் சேர்த்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி :).

    கிளியின் பார்வை அப்படிதான் உள்ளது :).

    இந்திய மைனா வணக்கம் வைப்பதாகவே கொள்ளலாம் :).

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. பறவைகளின் படங்கள் மனதைக் கவர்ந்தன. சேர்த்திருக்கும் வாசகங்களும் சிறப்பு. தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  4. அனைத்து பறவைகளும் அழகு. தேன் சிட்டு பாடி கொண்டு அமர்ந்து இருப்பதே பெரிய விஷயம் . கிளி அழகு.
    பொன்மொழிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக தேன் சிட்டுகள் ஓரிடத்தில் ஒரு நொடி அமர்வதே அபூர்வம். அமர்ந்து பாடுவது அபூர்வத்திலும் ஆபூர்வம் :).

      நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. பறவைகளின் படங்களும் வாசகங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  6. தோட்டத்துப் பறவைகள் அனைத்தும் அழகு. தேர்ந்தெடுத்த பொன்மொழிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin