#1
“விளையாடும் பொழுதில் கற்றுக் கொள்கிறார்கள் குழந்தைகள்.
முக்கியமாக
எப்படிக் கற்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்கிறார்கள்.”
_ O. Fred Donaldson.
#2
“ஒரு புன்னகைக்குப் பின்னாலிருந்து பார்க்கையில்
உலகம் எப்போதும் ஒளிமயமாகத் தெரியும்.”
3.
“நீங்கள் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு
#4
“புன்னகையுங்கள்.
புன்னகைக்கையில்
உங்கள் கண்கள் ஒளிரும்.”
#5
“புன்முறுவல்கள்
எப்போதும்
புத்துணர்ச்சி அளிப்பவை.”
#6
“நினைவுகள்
நிலைத்திருக்கும்
வாழ்நாளெல்லாம்!”
#7
“இளைஞர்களின் சக்தி
மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தது.”
#8
“அன்பே தெய்வம்
என்றார் பெரியோர்
அன்புடன் வாழுங்கள்..”
#10
“பிரகாசமான அறிவைக் கொண்ட
நாளைய நம்பிக்கைகளே!
தொடர்ந்து கற்க, வளர்க,
உயரங்களைத் தொடுக!”
#11
“சகோதரிகள்
ஒருவர் மேல் ஒருவர் அக்கறை கொள்வர்,
கவனித்துக் கொள்வர், ஆறுதலாக இருப்பர்,
வாழ்வின் எல்லாச் சூழல்களிலும்
ஒருவருக்கொருவர் துணையாக நிற்பர்.”
#12
“அனைத்து உயரிய வெற்றிக்கும் சாதனைக்கும்
அடித்தளமாக இருப்பது தன்னம்பிக்கை!”
_ Brian Tracy
**
[#8 தவிர்த்து மற்ற பொன்மொழிகளின் தமிழாக்கத்துடனான தொகுப்பு, எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..]
***
படங்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் மிகவும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும் - வெங்கட் நாகராஜ்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குகுழந்தைகளின் படங்கள் அழகு. வாசகங்கள் நம்பிக்கையூட்டுபவை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து குழந்தைகளும் அவர்கள் புன்னகையும் அருமை.
பதிலளிநீக்குவாழ்வியல் சிந்தனை பகிர்வுகள் அருமை.
தம்பி பையன், பெண் வளர்ந்து விட்டார்கள்.
ஆம். நன்றி கோமதிம்மா.
நீக்குமழலை பூக்கள் அழகு.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபடங்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் மிகவும் நன்று. தொடரட்டும் உங்களுக்கான சேமிப்பும், பகிர்வும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு